கருணாநிதி கிளம்பிட்டார்யா… கிளம்பிட்டார்யா…

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

வரதன்


ரொம்ப பேருக்கு கருணாநிதி குறள்படி நடக்கிறாரா இல்லையா என்பது பற்றிச் சந்தேகம் இருந்தால் தற்போது தெளிவாயிருக்கும்.

ஆம், சுஹாசினியின் கருத்து துடைப்பம் செருப்பை விட மோசமானது என்று சொல்லியுள்ளார். அதாவது ‘தீயினாற் சுட்டபுண்… ‘ என்ற குறள்படி தான் வாழ்வதாக மெய்ப்பித்துள்ளார்.

சரி விஷயத்திற்கு வருவோம்…

1. பெரியார் கற்பு பெண்களுக்குத் தேவையில்லை என்று சொன்னதாகச் சொல்கிறார் கருணாநிதி. ஐயா தமிழர் தலைவரே… முன்புதான் ஏதோ ஒரு கிராமத்து முச்சந்தியில் மைக் கிடைத்ததென்று நீங்கள் விட்ட உடான்ஸ்களை, பொழுது போகலை என்று ‘ஜெ… ஜெ.. ‘ என்று மக்கள் கூடி கைதட்டி ரசித்தனர். ஆனால், இணைய உலகமய்யா இது… அதனால் பெரியார் சொன்ன கருத்து பற்றி அனைவரும் எழுத படித்தாச்சய்யா… படித்தாச்சய்யா….

2. பிறாமணர் , பிறாமணர் அல்லாதோர் இயக்கத்தை வளர்க்க இது பாடுபடும் என்கிறீர்களே…. எப்படி…

உங்கள் குடும்பத்தில் வந்துள்ள பிறாமண மருமகள்களை விவாகரத்து செய்தா… ?

இன்னும் எத்தனைக் காலம் இந்த ஏமாத்து வேலை தொடரும்… ?

சன் குரூப்பில் இருப்பது பிறாமணர் எத்தனை சதவிகிதம்… ? அவர்களை வெளி அனுப்பப் போகிறீர்களா… ?

உங்கள் மருமக பிள்ளைகளுக்கு ஆலோசகர்களாக டில்லியிலும், தொலைக்காட்சி தொழிலும் இருக்கும் பிறாமனர்களை வெளிஅனுப்பப் போகிறீர்களா.. ?

தயவு செய்து ‘ரூபாய்க்கு மூன்றுபடி .. ‘ மாதிரி திசைதிருப்பும் அரசியல் செய்யாமல்… நேரடியாக மேட்டருக்கு வாருங்கள்…

– கற்பு பற்றிய உங்கள் கருத்து என்ன… ?

– குமுதத்தில் ஒரு தமிழ் இயக்குனர் சொன்னது போல், ‘இரண்டு மூன்று பொண்டாட்டி கட்டி வாழ்ந்து கொண்டு தமிழ்கலாச்சாரம், கற்பு என்று பேசுபவர்களை பற்றி…. ‘ என்ற கருத்திற்கு உங்கள் பதில் என்ன… ?

– குஷ்பு, சுகாசினி விட்டுத்தள்ளுங்கள் .. அவர்கள் கிருஷ்ணா.. கைபர் கணவாய் தாண்டி வந்தவர்கள்..

தமிழ் மகள் ‘கனிமொழி ‘ கற்பு பற்றிச் சொன்னதற்கு உங்கள் கருத்து என்ன… ?

– கண்ணகி பற்றிய பெரியாரின் கருத்திற்கு உங்களின் நேரிடையான பதில் என்ன… ?

சும்மா.. ‘beating around the bush.. ‘ வேண்டாம்… நெஞ்சு நிமிர்த்தி.. நேரிடையாக சொல்லுங்கள்…

இது தொடர்ந்தால்,,, வரும் தேர்தலில், உங்களின் கொள்கை வாரிசு சடாலினுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு மிகப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று குஷ்பு சட்டமன்றத்திற்குள் நுழைவார்.

எதற்கும் துரைமுருகன் மகனுக்கு ஒரு வெற்றித் தொகுதி ஒதுக்கி வையுங்கள். உங்கள் திராவிட கலாச்சாரம் சட்டசபையில் அரங்கேற வசதியாயிருக்கும்.

:::: வரதன் ::::

பிகு: கற்பு பற்றி ஏன் இந்த ஆண்கள் கதறுகிறார்களோ… பெண்கள் கருத்து கேட்பதே கருத்துச் சுதந்திரம் இந்த விஷயத்தில்.

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்