கனவதே வாழ்வாகி….

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

இளைய அப்துல்லாஹ்


எருமை இடறி
முகம் நிறைய
இரத்தம் வழியும்
கனவில்…

வல்லூறு என் இதயத்தைக்
கிழித்துப் போட்டு
குதறிக் குதறித் தின்னும்!
மீண்டும் என் குழந்தையை
ஒரு இராட்சதப் பூதம்
தலை சிதறக்
கொல்லும்.

யானை பிளிறி என்
ஒற்றைக் குடிசையை
இடித்து அழித்தலாய்..
உள்ளம் வியர்க்க
மழை எங்கேயோ தூறும்..

உன்னிலும் பார்க்க
அவள் சிவந்தவள்
அவளின் பார்வை சிவந்தது.
நெருப்பு நினைவுகள்
சுட்டுத் தீயுமென் உடலம்.

பின்னர் வதை முகாம்களில்
தசைகள் பிய்த்தும்
நகங்கள் பிடுங்கியும்
தோல்கள்உரித்தும்
ஆண்மை அறுபட
அடித்து நொருக்கும்
இராட்சகர்கள்

இடறி விழுந்து மறுபடியும்
மறுபடியும் இடறி விழுந்து..

கனவே வாழ்வதாய்
வாழ்வே கனவாகி…
இளைய அப்துல்லாஹ்
anasnawas@yahoo.com

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்