கத்தி குத்திய இடம்…

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

மலர் மன்னன்சென்னையில் லா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுக்கும் விழாவை ஏற்பாடு செய்த எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன், அந்தக் கூட்டத்தில் நான் பேசிய கருத்துகளைப் பதிவு செய்கையில் கவனக் குறைவாக ஒரு தகவலை மாற்றிக் கூறிவிட்டார். அதனைச் சரி செய்வது என் கடமையாகிறது.

லா. ச. ரா. வின் சிறுகதை ஒன்றில் இளம்பெண் ஒருத்தி மார்பில் கத்தியால் குத்தப்பட்டுச் சரிவாள். கத்தி மிகவும் சொகுசாக இறங்கியது, ஏனென்றால் அது சென்ற இடம் அப்படி என்று அது பற்றி லா. ச.. ரா. எழுதியிருப்பார். அவ்வாறான சந்தர்ப்பங்களை இவ்வாறாக விவரிப்பது நமது அழகியல் மரபுக்கு முரணனானது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவே அதனை ஞாபகப் படுத்தினேன். இவ்வாறான வர்ணனை கோரத்தை ஒரு வித குரூரமான ரசனையுடன் வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்பது எனது நிலைப்பாடு. இது நம் அழகியலுக்குப் பொருந்தாது. கூட்டத்தின் இறுதிப் பேச்சாளனாக நான் பேச வேண்டுமென விரும்பப்பட்டதாலும் காலம் கடந்துவிட்டபடியாலும் இது குறித்துத் தெளிவாகப் பேசிக் கருத்தைப் பகிர்ந்துகொள்ள இயலாமற் போனது.

கத்தியால் குத்தப்பட்ட இடம் அழகான இடம் என்று நான் குறிப்பிட்டதாக ஷங்கர நாராயணன் சிறு கவனக் குறைவினால் தெரிவித்துவிட்டதன் விளைவாக, லா.ச.ரா. ஆபாசமாக எழுதியிருப்பதாக நான் சொல்லிவிட்டதாகச் சிலர் பொருள் கொள்ளும்
படியாகிவிட்டிருப்பதை எனக்கு வந்துள்ள மின்னஞ்சல்கள் மூலம் அறிந்துகொண்டேன்.

லா.ச. ரா. எழுத்து நிச்சயமாக ஆபாசம் அல்ல. ஆனால் நமது அழகியல் மரபுக்கு அது முற்றிலும் முரணான மேற்கத்தியப் பாங்கானது.


malarmannan97@yahoo.co.uk

Series Navigation