கடிதம் – தவிர்க்க முடியாத இருளின் குறிப்புகள்

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

வனஜா கிருஷ்ணன்மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களே,

எனது பணிவான வணக்கங்கள். அன்மைய காலமாக தரமான நவீன எழுத்தாளர்கள் திண்ணையில் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது இலக்கிய உலகத்தின் வளர்ச்சி மன நிறைவை அளிக்கிறது. அதுவும் திண்ணையின் பங்கு அளப்பரியது என்றுதான் கூற வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பிலிருந்து திண்ணையில் எழுத தொடங்கியிருக்கும் எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் படைப்புகள் வித்தியாசமான தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பது அபூர்வமாக இருக்கிறது. அவருடைய புதுகவிதையின் நடையும் கருவும் பெரும்பாலும் மரணம் என்ற பிரக்ஞையின் அதிசியத்தையும் அபூர்வத்தையும் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.
அவருடைய முகமிழக்கும் தருணம் இரவில்தான் என்ற சிறுகதையின் ஓட்டம் மனப்பிரமையில் இயங்கக்கூடிய ஒருவனின் இரவும், மரணத்தைப் பற்றிய உணர்வும் மிகவும் அழகாகக் கூறப்பட்டுள்ளன. இருளும் மரணமும் தவிர்க்க முடியாத மனிதக் குறிப்புகள் என்பதை அவர் வித்தியாசமாகக் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.
அவருக்கு நல்வரவு. தொடரட்டும் அவருடைய எழுத்து.
மேலும் திண்ணை இந்த மாதிரி எழுத்தாளர்களை ஊக்குவித்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

வனஜா கிருஷ்ணன்
மலேசியா


Vanaja83@hotmail.com

Series Navigation

வனஜா கிருஷ்ணன்

வனஜா கிருஷ்ணன்