கடிதம் டிசம்பர் 23,2004

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,

அரவிந்தன் நீலகண்டன் எழுதுகிறார்:

தன்னை சமூகவியலின் டார்வினாக கற்பனை செய்து கொண்டவர் மார்க்ஸ்.எனவே தனது ‘மூலதனத்தை ‘

டார்வினுக்கு சமர்பிக்கவும் செய்தார். டார்வின் மிகத்தெளிவாக அதை அனுமதிக்க மறுத்துவிட்டார்.

http://www.thinnai.com/le1216044.html

இது பொய், முழுப் பொய். ஏனெனில் மார்க்ஸ் மூலதனத்தை டார்வினுக்கு சமர்பிக்கவில்லை.எனவே

டார்வின் அதை மறுத்தாரா இல்லையா என்ற கேள்வி எழ எந்த அவசியமுமில்லை. அப்படி ஒரு கருத்து

நிலவியது உண்மை. ஆனால் அது பொய் என்று நிரூபிக்கப்பட்டு கால் நூற்றாண்டிற்கு மேலாகிறது.

இதற்கு ஆதாரமாக என்னால் இரண்டு சான்றுகளை தர முடியும்.இன்னும் சான்றுகள் தர முடியும்.

ரிச்சர்ட் டாகின்ஸும் இது குறித்து எழுதியிருக்கிறார்.இக்கருத்து பொய் என்றே கூறியிருக்கிறார்,

ஒரு விவாதத்தில். என் நினைவிலிருந்து அச்சான்றை குறிப்பிட முடியவில்லை. நூலகத்தில் சென்று

தேட நேரமில்லை.

சான்று 1: Darwin ‘s Complaint : Raplh Colp,Reply by W.W.Bartley III

http://www.nybooks.com/articles/8356

Raplh Colp: Bartley claims that Darwin ‘refused Karl Marx permission to dedicate Das Kapital to him. ‘ This claim-based on an October 12, 1880, Darwin letter presumed to have been written to Marx-was first made by the Soviet scholar, Professor Ernst Kolman, and published in the Russian Communist magazine, Under the Banner of Marxism (Jan.-Feb. 1931); and then, for about 45 years, it was believed by many Darwin scholars throughout the world. In 1975 there was discovered (in the Cambridge University Library) a letter to Darwin, written by Edward Aveling, dated October 11, 1880: this showed that Darwin ‘s presumed Marx letter was, really, an answer to Aveling. There was, thus, no evidence that Marx desired to dedicate Das Kapital (or any of his works) to Darwin. This was reported on by Lewis Feuer, P. Thomas Carroll, and myself, in ‘On the Darwin-Marx Correspondence, ‘ Annals of Science 33 (1976), pages 383-394. Soviet scholars were given copy of Aveling ‘s letter, and a French report was published (Pierre Thuillier, ‘La Correspondence Darwin-Marx: Une Rectification, ‘ La Recherche, April 1977, pages 394-395).

W.W.Bartley : Dr. Colp does the reader a service in calling attention to the Darwin-Aveling correspondence. This discovery, which was published in Annals of Science in July 1976, is still not widely known; certainly I did not know of it when I wrote my review of Colp ‘s book last May. Readers may be interested to know that the hypothesis that Darwin ‘s letter of October 12, 1880 was addressed to Edward Aveling rather than to Karl Marx was ventured by Professor Lewis S. Feuer in his article, ‘Is the ‘Darwin-Marx Correspondence ‘ Authentic ? ‘ published in Annals of Science in January 1975. Feuer ‘s hypothesis was confirmed by the independent discovery, by P. Thomas Carroll and Dr. Colp, of the Aveling letter to Darwin of October 11, 1880. Thus it was Aveling, and not Marx, who sought to dedicate a book to Darwin; and the book was The Student ‘s Darwin, not Das Kapital!

இக் கடிதங்கள் 1977லேயே வெளியாகிவிட்டன.

சான்று 2 THE FIRST DARWINIAN LEFT: RADICAL AND SOCIALIST RESPONSES TO DARWIN, 1859-1914 D.A. Stack HISTORY OF POLITICAL THOUGHT. Vol. XXI. No. 4. Winter 2000 682-710

The myth is that Marx offered to dedicate some volume or edition of Capital to Darwin. The documentary evidence for this claim was always slender. At some point, a letter to Edward Aveling-the partner of Marx ‘s daughter Eleanor-got mixed in with a box of Marx ‘s correspondence which Eleanor owned in the 1890s. The letter was from Darwin, politely declining Aveling ‘s offer to dedicate an atheistic pamphlet to him. To one unwitting 1930s Moscow archivist it appeared that Darwin was declining Marx, and in the hands of the historical profession a legend was born.3 3 See, for example, I. Berlin, Karl Marx (London, 1963), pp. 247-8; S. Avineri, ‘From Hoax to Dogma – a footnote on Marx and Darwin ‘, Encounter (March 1967), pp. 30-2; B. Ollmann, Alienation: Marx ‘s Conception of Man in Capitalist Society (Cambridge, 1971), p. 53; D. McLellan, Karl Marx: His Life and Thought (London, 1973), p. 424; V. Gerratana, ‘Marx and Darwin ‘, New Left Review, 35 (1974), pp. 60-82.For a flavour of how the myth was eventually disproved see L.S. Feuer, ‘Is the ‘Darwin-Marx Correspondence ‘ Authentic ? ‘, Annals of Science, 32 (1975), pp. 1-12;

http://www.imprint.co.uk/pdf/stack.pdf

1970 களிலேயே இக்கருத்து பொய் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. 1977 ல் கோல்ப் எழுதியுள்ளது இதை உறுதி செய்கிறது.

மார்க்ஸ் டார்வினின் கருத்துக்களை வரவேற்றாலும் அவற்றை விமர்சித்துமுள்ளார். மேலும் மார்க்சியர்களும், இடதுசாரிகளும் டார்வினின் கருத்துக்கள் குறித்து தொடர்ந்து விவாதித்துள்ளனர்.மார்க்ஸ், ஏங்கெல்ஸ் டார்வினின் கருத்துக்களை குறித்து என்ன கருதினார்கள், எழுதியிருக்கிறார்கள் என்பது குறித்து மேலுமறிய மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரையை (சான்று 2) படித்துத் தெரிந்து கொள்ளலாம். நான் முன் வைத்துள்ள இரண்டு சான்றுகளும் மிகவும் நம்பகமான சான்றுகள். கட்சி அல்லது இயக்கம் சார்ந்த சான்றுகள் அல்ல இவை.அரவிந்தன் எந்த சான்றையும் முன் வைக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

1970 களில் இறுதியிலே நிராகரிக்கப்பட்ட கருத்து ஒன்றை இன்று 2004 டிசம்பரில் ஒருவர் அது

உண்மை என்று ஏன் முன் வைக்க வேண்டும்.அவரது நோக்கம் மார்க்ஸையும், மார்க்சியதையும்

வசை பாட வேண்டும், இகழ வேண்டும், என் போன்றவர்களையும் இகழ வேண்டும் என்பதென்றால்

அதற்காக எத்தனை பொய்களைத்தான் அவர் எழுதுவார், திண்ணையும் வெளியிடும்.

ஏற்கனெவே கோவை ஞானி, ஹால்டேன் குறித்து அவர் எழுதிய பொய்கள் திண்ணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இப்போது இன்னொரு பொய். (இத்துடன் அவர் எழுதியுள்ள பொய்கள், பிறர் கருத்துத் திரிபுகள் பட்டியல் முடியவில்லை. இன்னும் இருக்கிறது)

தனக்கு இது பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது தெரியாது என்று அவர் குறிப்பிட்டால் அவர்

கடந்த 30 ஆண்டுகளாக இது குறித்து நடந்த விவாதம் எதையும் அறிந்திருக்கவில்லை என்று

பொருள்.அப்படிப்பட்டவர் ஏன் மீண்டும் மீண்டும் மார்க்சியம், பரிமாணம் குறித்து தான் அனைத்தையும்

அறிந்த தொனியில் எழுத வேண்டும்.மேலும் இத்தகைய ஒரு தகவலைத் தருவதற்கு முன்னர் அது

சரிதானா என்று அறிய வேண்டியது அவரது கடமையல்லவா.தான் எழுதுவதில் சந்தேகம் இருந்தால் அதையாவது தெரிவிப்பதுதானே முறை.

எப்படி எழுதினாலும் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள், திண்ணை ஆசிரியர் குழுவினரும்

அப்படியே வெளியிட்டுவிடுவார்கள் என்ற தைரியத்தில் அவர் இதை எழுதியிருக்கலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை அவர் இப்போதாவது உணர வேண்டும்.

இது போன்ற பொய்களை தொடர்ந்து திண்ணை வெளியிட்டால் திண்ணையின் நம்பகத்தன்மைதான்

பாதிக்கப்படும். திண்ணைக் குழு இது போன்ற மோசடிகளை தவிர்க்க என்ன செய்யப் போகிறது.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

k.ravisrinivas@gmail.com

(இந்தக் கடிதம் சென்ற வாரம் கிடைத்தது. பிரசுரிக்க விடுபட்டதற்கு வருந்துகிறோம் – திண்ணை குழு)

Series Navigation

கடிதம் டிசம்பர் 23,2004

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,

அண்மையில் ப.அனந்த கிருஷ்ணன் (புலி நகக்கொன்றை நாவலாசிரியர்) எனக்கு எழுதிய மின்னஞ்சலில்

டார்வினுக்கு மார்க்ஸ் மூலதனம் நூலின் பிரதி ஒன்றை அனுப்பினார் என்றும், அதற்கு டார்வின் ஒரு பதில்

கடிதம் எழுதினார் என்று தெரிவித்திருந்தார்.இது குறித்த தகவல்களையும்,கடிதத்தின் வரிகளையும்

திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதித்த அவருக்கு என் நன்றிகள்.

Letter from Charles Darwin to Karl Marx October, 1873

Dear Sir:

I thank you for the honour which you have done me

by sending me your great work on Capital; & I heartily

wish that I was more worthy to receive it, by

understanding more of the deep and important subject

of political Economy. Though our studies have been so

different, I believe that we both earnestly desire the

extension of Knowledge, & that this is in the long run

sure to add to the happiness of Mankind.

I remain, Dear Sir

Yours faithfully,

Charles Darwin

Letter from Charles Darwin to Karl Marx

October, 1873

‘Unfortunately Darwin didn ‘t fully read the book Marx had sent across. The book remains, with many pages

uncut, in Darwin ‘s library even today ‘ – excerpt from the email from Mr.P.A.Krishnan

எனவே டார்வினையும், மார்க்ஸையும் எதிரிகள் போல் சித்தரிப்பதும், மார்க்ஸியமும்,

டார்வினின் பரிணாம வாதமும் முற்றிலும் ஒன்றிற்கொன்று எதிரானவை என்பதும்

கட்டுக்கதை.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

Series Navigation

கடிதம் டிசம்பர் 23,2004

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

இக்பால்


திண்ணை ஆசிரியருக்கு,

நேஷக்குமார் செய்யும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி தர பலர் முன் வந்திருக்கின்றனர். அவற்றையும் திண்ணை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். இல்லையென்றால் இது ஒரு விவாதம் அல்ல – வெட்டியான தாக்குதல் என்ற முடிவுக்குத்தான் நாங்கள் வரவிருக்கும்.

அபுமுஹை :

http://abumuhai.blogspot.com/

அமைதிநேசன்:

http://peacenesan.blogspot.com/

செஞ்சுடர்:

http://chudar.blogspot.com/

ஆசாத்:

http://ennam.blogspot.com/

அன்புடன்,

இக்பால்

iqbalriver@yahoo.com

Series Navigation

கடிதம் டிசம்பர் 23,2004

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

விசிதா


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு

வணக்கம்.

எம்.எஸ். : அஞ்சலி என்ற கட்டுரையில் [http://www.thinnai.com/ar12160412.htm] திரு ஞாநி

அவர்கள் சில கருத்துக்களை எழுதியுள்ளார். இது குறித்த எனது விமர்சனத்தினை சுருக்கமாக

இங்கு முன் வைக்கிறேன்.

திரு. ஞாநி அவர்கள் சம்ஸ்கிருதமயமாக்கல் என்பதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.இக்கோட்பாட்டை முன் வைத்த மறைந்த சமூகவியலாளர் எம்.என்.ஸ்ரீனிவாஸ் இதை இவ்வாறு வரையறுத்துள்ளார்

Sanskritization may be briefly defined as the process by which a ‘low ‘ caste or tribe or other group takes over the customs, ritual, beliefs, ideology and style of life of a high and, in particular, a ‘twice-born ‘ (dwija) caste

மூன்று அல்லது நான்கு தலைமுறைக்களுக்கு முன் எளிய முறையில் தங்கள் குல அல்லது ஜாதிப் பூசாரி முன்னிலையில் திருமணம் செய்த பழக்கம் மாறி பிராமணப் புரோகிதர் முன்னிலையில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒதப்பட்டு, பிராமண அல்லது உயர் ஜாதி முறையில் திருமணம் செய்து கொள்வது, வரதட்சணை வாங்குவது அல்லது கொடுப்பது, பிராமண மடாதிபதிகளை தங்கள் குருவாக ஏற்பது, புதுமணை புகு விழா போன்றவற்றில் பிராமணர்கள் போல் ஹோமம் வளர்ப்பது, தங்கள் குலக்கடவுள்களுடன் பிரபலமான கடவுள்களையும், உதாரணமாக திருப்பதி வெங்கடாஜலபதி, வணங்குவது – இவையெல்லாம் சம்ஸ்கிருதமயமாக்கலுக்கு எடுத்துக்காட்டுக்கள்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் தாக்கம் சம்ஸ்கிருதமயமாக்கலின் வலிமையை குறைத்தது. தமிழ்ப் பெயர் வைத்தல்,சுயமரியாதைத் திருமணம், கடவுள் மற்றும் ஜாதி மறுப்பு போன்றவற்றை முன்னிறுத்தியது.நவீனமயமாக்கலுடன், சம்ஸ்கிருதமயமாக்கலினையும் ஒன்றெனக் கருதிக் குழப்பிக்கொள்ளக்கூடாது. திராவிட இயக்கம் முன்னிறுத்திய நவீனமயமாக்கம் சம்ஸ்கிருதமயமாக்கலுக்கு எதிரான ஒன்று.

எம்.எஸ்.சுப்புலஷ்மி ஒரு தமிழ் பிராமணரை, ஒரு ஐயரை திருமணம் செய்தததால் ஐயர் மாமியானார். பெண்கள் திருமணத்திற்குப் பின் கணவனின் மத, குல, ஜாதி வழக்கங்களைப் பின்பற்றுவதும், கணவன் சார்ந்துள்ள மதத்திற்கு மாறுவதும், பெயரை மாற்றிக் கொள்வதும் நடைமுறையில் உள்ளன. கலப்புத் திருமணங்களும் இதற்கு விதிவிலக்காக பெரும்பாலும் இல்லை. ஜாதிய அடுக்குமுறையில் பிராமணர்கள்

உயர் நிலையில் உள்ளதால் கலப்புத் திருமணங்கள் செய்துகொண்டவர்களில் ஒருவர் பிராமணராக

இருந்தால் குடும்பமே பிராமணக் கலாச்சாரத்தினை பின்பற்றுவதை பல சந்தர்ப்பங்களில் நாம் பார்க்கிறோம்.

இதற்கு உதாரணமாக இந்தியாவின் பத்திரிகைகளிலும், இணையத்திலும் வெளியாகும் மணமகன்,மணமகள் தேவை விளம்பரங்களில் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் கூட we follow brahmin customs at home or brought up as a brahmin என்ற பொருள் தரும் வகையில் குறிப்பிடுவதைக் காணலாம். இங்கும் அதுதான் நடந்துள்ளது. எம்.எஸ்.சுப்புலஷ்மி ஒரு முதலியாரை அல்லது பிள்ளையை திருமணம் செய்திருந்தால் அவர் ஐயர் மாமியாகியிருக்கமாட்டார். அந்த ஜாதிப் பண்பாட்டினைப் பின்பற்றும் ஒரு பாடகியாக மாறியிருக்கக்கூடும். இளையராஜாவை சம்ஸ்கிருதமயமாக்கலுக்கு உதாரணமாக கூறவே முடியாது. எம்.எஸ்.சுப்புலஷ்மியுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கலைஞராக அவரைக் காண முடியும்.

திரு. ஞாநிக்கு வைணவத்தின் சரணாகதித் தத்துவம் குறித்தும் குழப்பம் இருப்பதை இக்கட்டுரையில் நாம் அவதானிக்க முடிகிறது. கணவனே கண்கண்ட தெய்வம் என்பதும் அல்லது அனைத்தினையும் கணவனே தீர்மானிக்கட்டும் என்ற முடிவெடுப்பதும், அவ்வைணவக் கோட்பாடும் ஒன்றல்ல.

விசிதா

http://wichitatamil.blogspot.com

wichitatamil@yahoo.com

http://wichitatamil.blogspot.com

Series Navigation

கடிதம் டிசம்பர் 23,2004

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

ஹிந்து தர்மத்தின் மீதோ அல்லது ஹிந்து சமுதாயத்தின் மீதோ எவ்வித மதிப்பும் அன்பும் மார்க்ஸிஸ்ட்களுக்கு இருக்க முடியாது என்பதுடன் இயல்பாகவே இனவாதத்துடன் கைகோர்க்கும் இயல்பு மார்க்ஸிஸ்ட்களுக்கு உண்டு என்பதற்கான நல்ல நிரூபணம் சோதிப்பிரகாசத்தின் கட்டுரை. எப்படியெல்லாம் ஹிந்து சமுதாயத்தை பிளவு படுத்தமுடியும் என செயல்படுவதில் அண்மைக்காலமாக மிஷிநரிகளுக்கு இணையான வக்கிரத்துடன் மார்க்ஸிஸ்ட்கள் செயல்படுகின்றனர். இது அவர்களது இயல்பான வளர்ச்சிதான். திரு சோதி பிரகாசம் ஒன்றை ஞாபகப்படுத்தலாம். ஆரியப் படையெடுப்பினை பாரத தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். தமிழை தாழ்வாகவோ அல்லது சமஸ்கிருதத்தை உயர்த்தியோ அவர்கள் பேசவில்லை. சமஸ்கிருதம் பாரதத்தின் இயல்பான தேசிய மொழியாக அமையவேண்டுமென பாரத தேசியவாதிகளுள் தீவிரமாக முயன்றவர் டாக்டர்.அம்பேத்கர். துரதிர்ஷ்டவசமாக சோதி பிரகாசம் போன்றவர்களுக்கு இருத்துவமாகவே (Binary) அனைத்தையும் பார்த்து பழக்கம். இதில் இந்து-ஹிந்து எனும் பிளவு இப்பார்வையின் உச்சகட்டம். விரைவில் மார்க்ஸியத்திற்கும் மார்க்சியத்திற்குமான சித்தாந்த வேறுபாடுகளையும் அவர் முன் வைக்கலாம்.

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்.

hindoo_humanist@lycos.com

Series Navigation