கடிதம் ஜூன் 3, 2004

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

பி.எஸ். ராஜேஷ்


ஆர்.எஸ்.எஸ்-ம் , காந்தி படுகொலையும்….

ஆர்.எஸ்.எஸ். ஷாகா-க்களில் மூளைச்சலவை செய்யப்படுவதில்லை..சிறுவர் முதல் பெரியவர்வரை ஜாதிவித்தியாசம் பார்க்காமல் தேசபக்தியும், பண்புபயிற்சியும்

அளிக்கப்படுகிறது…யார் எந்த ஜாதி என்பதே தெரியாமல் அனைவரும் பாரதமாதாவின் புதல்வனாக ஒன்றாக சங்கமிப்பது சங்கத்தில் மட்டுமே…எந்த தனிப்பட்ட ஜாதிக்கோ

இனத்துக்கோ சொந்தமானதல்ல ஆர்.எஸ்.எஸ்….ஷாகா-க்களில் எந்த ஒரு

குறிப்பிட்ட ஜாதியின் புகழும் பாடப்படுவதில்லை…ஆர்.எஸ்.எஸ், தேசம் முழுமைக்குமான இயக்கம்…தேசத்தை துண்டாட நினைப்பவருக்கு மட்டுமே நெருப்பு ஆர்.எஸ்.எஸ் ….

தமிழகத்தில் போற்றப்படும் கண்ணகியும் ,வட இந்திய சீதா தேவியும் ,கன்னடத்து வீர

மங்கை சென்னம்மாவும், வால்மீகியும், ஏகலைவனும், கம்பனும் ,வான்புகழ் கொண்ட

வள்ளூவனும், நாயன்மார்களும், ஆழ்வார்களும்,பஞ்சாப்கபீரும், குருநானக்கும்,,ராஜஸ்தானின் புகழ் பெற்ற கவிஞர் சையத் இப்ராகிம் ரசாக்கானும், தமிழகத்தின் ராஜேந்திர சோழனும், புகழ் பெற்ற விஞ்ஞானி சி.வி.ராமனும், மகாகவி பாரதியும், சட்ட மேதை அம்பேத்காரும், கேரளாவின் நாரயண குருவும் , புண்ணிய நதிகளாம் காவிரியும்,கங்கையும் மற்றும் பல தேசிய தலைவர்களும்,ஆன்மிக வாதிகளும் தினசரி ஷாகாக்களில் தேசிய ஒருமைப்பாட்டு பாடல் மூலம் நினைவு கூறப்பட்டு, போற்றப்படுகிறார்கள்…அதன்மூலம் தாமும் உத்வேகம் அடைகிறார்கள்….

1934-வார்தாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ்-ன் குளிர் கால முகாமான ‘ஹேமந்த் சிபிர் ‘-யை

பார்வையிட்ட மகாத்மா காந்தி, ஜாதி வித்தியாசம் இல்லாமல் இவர்கள் பழகும் விதம்

தன்னை மிகவும் கவர்வதாக குறிப்பிட்டார்..நண்பர் பிறை நதி புறத்தான் அவர்கள்

பொய்யான ,புரட்டான வாதத்தை அதாவது ஒரு குறிப்பிட்ட ஜாதியின் புகழை பாடுவதாக

சுப்ரமணிய சாமி வகை புளுகை அவிழ்த்து விட்டுள்ளார்…இந்துக்களை ஜாதியின் பெயரால்

பிரித்து கூறுபோட்ட பிரிட்டாஷார் இல்லாத பணியை சில திவிரவாத முஸ்லீம்

இயக்கங்களும், வெளி நாட்டு பணத்தால் பாரத மக்களை மதமாற்றும் பல அன்னிய

கிறுஸ்தவ மிஷனரிகளும்,சில நக்ஸலைட் இயக்கங்களும் பாரத முழுவதும் செய்து

வருகின்றன…பிரித்தாளும் சூழ்ச்சி இனி வெற்றி பெறாது…

இஸ்லாமிய மதரஸாக்களில் செய்யப்படும் மூளை சலவையால்தான் பாரதம் உட்பட உலகம் முழுவதும் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது…மதத்தின் பெயரால் இவர்கள் எல்லை கடந்து தீவிரவாதிகளுக்கு போராடுவார்களாம்….கேட்டால் இவர்களை இணைப்பது இஸ்லாமின் சகோதரத்துவமாம்….எது சகோதரத்துவம்…. ?இஸ்லாமை ஏற்காதவர்கள் அனைவரும் காபீர்கள்(அழிக்கப்படவேண்டியவர்கள்) என்பது எந்தவகை சகோதரத்துவம்.. ? இந்த சகோதரத்துவத்தில் தான் ஒளரங்க சீப் போன்றோர் ஆயிரக்கணக்கான இந்துக்களை வாளாலும், யானையின் காலடியில் மிதித்து துவைத்தும் மதமாற்றினார்களா.. ? சீக்கிய 9-ம் மத குரு, தேஜ் பகதூரை சிரச்சேதம் செய்து உயிரற்ற உடலை சொந்த மகனே தின்ன செய்யதிட்டது எந்த வகை சகோதரத்துவம்… ? பிரிவினையின் போது ஆயிரக்கணக்கான இந்து பெண்களை கற்பழித்த முஸ்லீம்களின் செயல் எந்த வகை சகோதரத்துவம்.. ?

1. .பாகிஸ்தானில் மசூதியில் ஷியா பிரிவினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு சன்னி பிரிவு முஸ்லீம்கள் 53பேர் பலி….news.bbc.co.uk/2/hi/south…048992.stm

2 மசூதியில் தொழுகை நடத்தி கொண்டிருந்த ஷியா முஸ்லீம்கள் மீது சன்னி பிரிவு துப்பாக்கி சூடு 8 பேர் பலி 10 பேர் காயம்–பாகிஸ்தானின் கராச்சி ,இமாம் பார்கவா மசூதி 22/02/04.www.rediff.com/news/2003/feb/22pak.htm

3.பாகிஸ்தானில் கொத்தடிமைகளாக நடத்தப்படும் இந்துக்கள்(http://www.thinnai.com/pl0626037.html )–

இவை போன்று சவுதி அரேபியா மற்றும் உலகின் பல பகுதிகளிலும் நடப்பது என்ன சகோதரத்துவ துப்பாக்கி சண்டையா.. ? பெண்களை அடிமைகளாகவும் போகப்பொருளாகவும் நடத்துவது எந்த மதம்.. ?உலகில் மிக அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகளை எந்த மதம் உற்பத்தி செய்கிறது…இஸ்லாம் தானே….முதலில் மத சகிப்புதன்மை என்ன என்பதை முஸ்லீம்களுக்கு கற்று கொடுங்கள்…

Frontline Vol.18, Issue 26, Dec.22-2001-Jan, 04, 2002–இல் A.G. NOORANI -என்ற தீவிர கம்யூனிஸ்ட் போர்வையில் எழுதி வரும் முஸ்லீம் தீவிர வாத எழுத்தாளரும் சுப்ரீம் கோர்ட் வக்கீலுமான Abdul Ghafoor Noorani என்ற மதவெறியர் வாய்க்கு வந்தபடி எழுதுபவர்…தீவிர தேசபக்தரான வீர தாமோதர சாவர்க்கர்தான் பிரிவினையை ஆரம்பித்து வைத்தவர் என கூறும் Abdul Ghafoor Noorani , தேசவிரோதி ஜின்னாவை சாவர்க்கரோடு ஒப்பிடுவது அயோக்கியத்தனம். .Abdul Ghafoor Noorani ஆர்.எஸ்.எஸ் பற்றி இது போல பல பொய்களை பத்திரிக்கைகளில் எழுதி நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து அதன்பின் (The Statesman, March 3, 2002,அன்று) நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டவர்…,

.father of nation என காந்தியை சொல்லக்கூடது என ஜனசங்க தலைவர் தீன தயாள் உபாத்தியாயா சொன்னதாக கூறும் நண்பருக்கு ஒரு கேள்வி,மகாத்மா என காந்தியடிகளை ஒரு போதும் அழைக்க மாட்டேன் என சொல்லி, மிஸ்டர் காந்தி என்றே கடைசி வரை சொன்ன தேச பிரிவினைக்கு காரணமான அலி ஜின்னா, ஏன் வந்தேமாதரம் (பாரத தாயே உன்னை வணங்குகிறேன் என பொருள்) பாட மாட்டேன் என்று சொன்னார்….அவர் மட்டுமா அவர்வழியை பின்பற்றி தானே இன்றுவரை முஸ்லீம்கள் வந்தேமாதரம் எனச்சொல்ல மாட்டேன் என்கிறார்கள் ….ஏன்.. ? மகாத்மா மற்றும் வந்தேமாதரம் முதலில் இதை உரக்க சொல்லுங்கள்..பிறகு பார்ப்போம்….உங்களில் எத்தனை பேர் பத்வா வாங்க போகிறீர்கள் என்று…. ?(சமீபத்தில் உ.பியில் வந்தேமாதரம் சொன்ன பல முஸ்லீம்களுக்கு பத்வா விதிக்கப்பட்டது நினைவிருக்கும்….)

நண்பர்கள் சிலர் தொடர்ந்து காந்தி படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்ற தவறான தகவலை பரப்பி வருகின்றனர்….உண்மையில் காந்தி படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை….காந்தியடிகளோடு சங்கத்துக்கு கருத்து வேறுபாடு மட்டுமே இருந்தது ….அளவுக்கு அதிகமாக முஸ்லீம்களை தாஜா செய்யும் , இப்போது உள்ள அரசியல்வாதிகள் செய்வதை கண்டிப்பது போலவே அந்த நேரத்தில காந்தியடிகளை ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தது….இதில் தவறு ஏதுவும் இல்லை….ப்ண்டித மதன் மோளவியா, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ,காந்தியடிகள் ,வல்லபாய் பாடேல் போன்றோர் ஆர்.எஸ்.எஸ்-ன் தன்னலமற்ற பணிகளை பாராட்டி உள்ளனர்…அவர்களுடன் சங்கம் எல்லா கொள்கைகளுடன் ஒத்துபோவதில்லை….

கோட்ஸே ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்தவன்….சிறிது காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவன்….காங்கிரஸ் கட்சியின் சார்பாக பல தேசிய போராட்டங்களில் பங்கெடுத்தவன்….ஆர்.எஸ்.எஸ்-ம், காங்கிரஸ்-ம் மிகவும் சாத்வீகமானவை என நினைத்து பின்பு விலகி விட்டவன்…அப்படிப்பட்ட கோட்ஸே செய்த செயலுக்கு எப்படிஆர்.எஸ்.எஸ் பொறுப்பேற்க முடியும்…ஒருகாலத்தில் கோட்ஸே இருந்தது ஆர்.எஸ்.எஸ்-இயக்கத்தில் என்றால் காங்கிரஸிலும்தான் இருந்திருக்கிறானே…

எனவே காந்தி படுகொலைக்கு காரணம காங்கிரஸ் என்று சொல்லலாமே.. ?

இன்றைய பாரத நாட்டில் ஆயிரக்கணக்கான நக்ஸ்சலைட்-கள் ஏதோ ஒரு காலத்தில் சிபிஐ அல்லது சிபிஎம் (கம்யூனிஸ்ட்) கட்சியில் இருந்தவர்கள்….பின் அந்த கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்து ,பிரிந்து போய் தீவிர வாத செயல்களில் இற்ங்கினால், அவர்கள் செய்யும் வன்முறைக்கு ஜோதிபாசுவுக்கு 1 ஆண்டு பொடா…,

சீக்கியதலைப்பாகையை மறக்காமல் கட்டும் கம்யூனிஸ்ட் சுர்ஜித்க்கு2ஆண்டு கடுங்காவல்

….மற்றும் நம்ம நல்லக்கண்ணு & வரத ராஜனுக்கு ஒரு 5 வருடம் விதிக்கலாமா.. ?

பாரதத்தின் சுப்ரீம் கோர்ட் மற்றும் பல கமிஷன் விசாரணை முடிவுகளும் காந்தி படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் -க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தீர்ப்பு சொல்லி விட்டது.. ? காந்தி படுகொலை-க்கான காரணங்களை அறிய ‘ஆத்மாசரண் ‘ஸ்பெஷியல் கோர்ட், உயர் நீதிமன்ற விசாரணை,மற்றும் ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி T. L.கபூர் தலைமையிலான கமிஷன் ஆகியவை தெள்ள தெளிவாக ஆர்.எஸ்.எஸ்-க்கும் காந்தி படுகொலைக்கும் துளியளவும் சம்பந்தம் இல்லை என்ற தீர்ப்பு சொன்னது மறந்து விட்டதா.. ? 100 சாட்சிகளையும், 407 documents-ம் மேற்கோள் காட்டிய கபூர் கமிஷன் ரிப்போர்ட் அடிப்படையில் அன்றைய மத்திய உள்துறை செயலாளர் திரு.R. N. Banerjee கூறிய என்ன தெரியுமா… ‘ஆர்.எஸ்.எஸ்-யை சேர்ந்த யாருக்கும் காந்தி படுகொலைக்கும் தொடர்பில்லை ‘ எனபதே ஆகும்…மேலும் Kapoor Commission Report, Vol.II, p.75-இல் ஆர்.எஸ்.எஸ்-காந்தியின் கொள்கைகளில்(காந்தியிசம்) கருத்து வேறுபாடு கொண்டிருந்தது என்றும் குறிப்பிடிருந்தார்…அப்போதய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் கூறும் போது ‘ இந்த விசாரணைகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் என்ற முறையில் காந்தி படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் -க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை நிலை ‘ என்றார்– (Sardar Patel ‘s Correspondence:1945-1950, Ahamdabad, Navjeevan Publishing House, 1973).

பின் 1978-இல் பாரளுமன்றத்தில் பிரதமர் மொரார்ஜி தேசாய் காந்தி படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் -க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொன்னார்..

.ஒரு பொய்யை ஒரு முறை சொல்வதில் வெட்கப்பட வேண்டும்….பல முறை சொன்னால்.. ? அதனால்தான் என்னவோ பல பத்திரிகைகளும்,சில அமைப்புகளும் அடிக்கடி சொல்லிவருகின்றன போலும்…

பி.எஸ். ராஜேஷ்,

-rajeshshree@yahoo.com


Series Navigation

பி.எஸ்.ராஜேஷ்

பி.எஸ்.ராஜேஷ்