கடிதங்கள் – பிப்ரவரி 12, 2004

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

வரதன் – மா. சிவஞானம் – அபராஜிதன் – மாசிலாமணி- நிலாவசந்தன் – அரவிந்தன் நீலகண்டன்- சூர்யா -முஹம்மது இஸ்மாயில்


பேச்சு எழுத்து சுதந்திரத்திற்கு வரைமுறையுண்டா… ?

காலம் தான் சொல்லனும்.

இதோ, வித்தியாசமாக ஒரு நாடகம் போட வேண்டும் எனும் அரிப்புடன் ஒரு நாடகம்.

ஹீம்… என்ன சப்ஜக்ட் எடுக்கலாம்.

சமுதாய சீரழிவுக்கு காரணமான அரசியல் சுழலை காட்டி படம் எடுக்கலாமா.. ?

எப்படி.

1. ‘கள்ளத்தாணியின் நினைவலைகள் ‘ – வேண்டாம் பீஸ் பீஸ் ஆக்கி விடுவார்கள்

2. ‘அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே ‘ – ம்ஹீம். ‘ஆட்டோவும் நானே ‘ என ஆட்டோ வரும்

3. முத்துக் காமிக்ஸ்ஸில் வரும் அ.கொ.தி.க வைத்து நாடகம் போடலாமா.. ? அது தங்களைத் தான் குறிக்கிறது என இரு கழகங்களும் நினைக்கும். அப்புறம் லெப்ட் & ரைட் இரு பக்கமும் அடிதான்.

4. சரி. இந்த முஸ்ஸிம் மதத்தில் பெண்கள் இழிவு படுத்துவது இல்லை வாடிகன் இரகசியம் பற்றி ஒரு நாடகம் போடலாமா… ?

– அது சரி. குடும்பத்தோட அழிச்சிருவாங்க. அதிலும் இந்த மதசார்பற்ற கட்சிகள் வேறு கொதித்து எழும்.

சரி என்ன செய்யலாம்… ?

ஏதாவது வாழ்த்தி அல்லது நல்லது சொல்லி ஒரு கதை பண்ணலாமா… ?

எவன் பார்ப்பான்.

ஆ.. எதாவது ஒரு பார்ப்பணனை தாக்கி அல்லது தூண்டுவது போல் கதை பண்ணலாமா.. ?

அது தான் சரி. அப்பதான் ஜனங்க கவனிப்பாங்க.

அதிலும் சங்கராச்சாரியாரை மையமாக வைத்து ஏதாவது கான்ட்ரவர்சியாக படம் எடுக்கலாமா.. ? சூப்பர் ஐடியா.

இந்த இந்து மத கும்பல் நம்மை சும்மா விடுமா.. ?

விடும். நமக்குத் தான் இந்து மதத்தில் தங்களைச் சிந்தனையாளர்கள் என நினைக்கும் கும்பல் சப்போர்ட் செய்யுமே. அதும் போக இந்து மதத்தினர் தான் சொரணை கெட்டவர்கள் ஆச்சே.

சரி. வேதம் புதிது தான் வந்திருச்சே.. ?

ஆங்.

ஒரு தாழ்த்தப்பட்டவன், MR.சங்கர் ஆவது போல் கதை செய்தால்..!

சூப்பர்.

ஜெண்டில்மேனில், F/C & B/C இடம் மாறுவது போல்.

ஓ.கே. ஓ.கே.

இப்படித்தான் வந்திருக்கும் போல் ஞானி வால் பிடிக்கும் மாலி நாடகம்.

சில வினாக்கள்:

1. நாலந்தர கட்சியான தி.மு.க-வில், தகுதி இருந்தால், தி.மு.க தலைவராக முடியுமா… ? இல்லை தா.கி நிலைமை வராமல் காத்துக் கொள்ள முடியுமா.. ?

2. ஒரு பல்கைகழத்திற்கு அந்த V.C யின் படிப்பு இருந்தால் மட்டும் அடுத்த V.C ஆக முடியுமா.. ?

3. இல்லை ஞானியின் பத்திரிக்கையில் தான் ஆசிரியராக முடியுமா.. ?

4. வாடிகனில் ஒரு கறுப்பு ஆப்பிரிக்கர் போப் ஆக முடியுமா.. ? இல்லை தமிழகத்தில் உள்ள பரிதாபப்பட்ட குறவர் மக்கள் பிரதிநிதி தான் போப் ஆக முடியுமா.. ? ( குறவர்கள் தான் ஆதி தமிழர்கள். முருகன் காலத்து மக்கள் )

5. சாமி கும்பிட மெக்கா போக காசு கொடுக்கும் இந்த இந்திய அரசு, காசி, இராமேஸ்வரம் போக அல்லது ஜெருசேலம் போகத்தான் காசு தருமா.. ?

6. ஒரு தாழ்த்தப்பட்ட தி.மு.க உறுப்பினர் கருணாநிதி முன் சேரில் அமர முடியுமா.. ? ( நினைப்பிருக்கும். திண்ணையில் மலேசிய நண்பர் எழுதியது )

7. தலித் கட்சிகளில் அந்த தலைவரின் அனுமதி இன்றி ஒருவர் பதவிக்கு வர முடியுமா.. ?

ஐயா மாலி.

சங்கரமடம் ஒரு மத தொண்டு மையம். அதில் இருக்கு சட்டதிட்டங்கள் அதன் உறுப்பினர், நம்பிக்கையுள்ளவர் சம்பந்தப்பட்டது.

பிடிக்கவில்லை எனில் போக வேண்டியது தானே வெளியில்.

தி.மு.க மாதிரி பயமுறுத்தும் கடந்த காலம் உள்ளவர் வாரிசு எனும் தகுதியுடன் மட்டும் இங்கு தலைபீடம் வர முடியாது.

சங்கரம் மடம் சிறுபாண்மையினரின் ஆதிக்கம் எனில் நீங்கள் தான் மெஜாரிட்டி எனில், நீங்கள் ஆரம்பிக்க வேண்டியது தானே, ‘கிங்கரர் மடம் ‘ என ஒன்றை.

சங்கராச்சாரியாரிடம் சில முரண்பாடுகள் இருக்கலாம்.

ஆனால், அதற்காக இந்தியாவை அடித்து சாப்பிடக் காத்திருக்கும் ஓநாய்களுக்கு இரையாகி விடக் கூடாது.

ஒரு ஜனநாயக அமைப்பு என தன்னைச் சொல்லிக் கொள்ளும், தி.மு.க , காங்கிரஸில் முதலில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் விட்டு திறமையானவர்கள் தலைமைக்கு வரட்டும்.

பின், இந்து, கிறிஸ்துவ, இஸ்லாம் மத அமைப்புகளுக்கு வரலாம்.

உண்மையிலேயே, மாலிக்கும் , ஞானிக்கும் சமுதாய அக்கறை இருந்தால், இந்த ஆட்கொல்லி அரசியல் பித்தலாட்டக்காரர்களைப் பற்றி ஒரு நாடகம் போடட்டும்.

இந்த ஐயர்களைத் தாக்கி பொழைப்பு ஓட்டுவது, நாத்திகருக்கு மட்டுமல்ல, சில ஐயர்களுக்கும் தேவைப்போல் இருக்கிறது.

அநேகமாக, தி.மு.க ஆட்சி அடுத்து வந்தால் மாலிக்கு ஒரு வேளை கலைமாமணி கிட்டலாம்.

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மேலும் மேலும் முன்னேறவேண்டும். அதற்காக நல்ல சிந்தனை விடுத்து சங்கர மடத்தில் சாமியாராக வேண்டியது என்ன சிந்தனையோ.. ?

சரி மாலி, பங்காரு அடிகளார் விடுத்து ஒரு தாழ்த்தப்பட்டவர் அடுத்த மேல்மருவத்தூர் அடிகளார் ஆவது போல் ஒரு நாடகம்.

அன்புமணி விடுத்து ஒரு சாமான்ய வன்னியன் பா.மா.க தலைவர் ஆவது போல் ஒரு நாடகம்.

ஸ்டாலின் பையனின் நண்பன் தி.மு.க தலைவர் ஆவது போல் ஒரு நாடகம்.

தி.மு.க கட்சியில் இருந்து விலக்கியபோது தீக்குளித்து செத்த ஒரு தொண்டனின் பையன் ம.தி.மு.க தலைவர் ஆவது போல் ஒரு நாடகம்.

நாடார் மகா சபையில், கலப்புத்திருமணம் செய்த நாடார் பெண்ணுக்கு பிறந்த பையன் தலைவர் ஆவது போல் ஒரு நாடகம்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் ஒரு வன்னியரும் , பா.ம.க வில் ஒரு தாழ்த்தப்பட்டவரும் தலைவர்கள் ஆவது போல் ஒரு நாடகம்.

ஸ்டாலின் – அழகரி – கனிமொழி இவர்களுக்குள் எப்படி தலைமைப் பதவிக்கு மும்முனைப் போட்டி வருகிறது அதில் கலாநிதி மாறன் – தயாநிதி மாறன் யார் பக்கம் என்று திருப்பங்களுடன் ஒரு நாடகம் எடுக்க வேண்டியது தானே…!

ஊருக்கு இழிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல் எதற்கெடுத்தாலும் இந்து மதம், சங்கரம் மடம் தான்.

ஐயராக பிறந்த ஒரு உரிமையில் உங்களுக்கு அங்கிகாரம். முதலில் நீங்கள் உங்கள் சொந்த பந்த நட்புகளுக்கு தாழ்த்தப்பட்டவர்களுடன் கலப்புத் திருமணம் செய்யுங்கள்.

நீங்கள் போகும் விசேஷங்களுக்கும் – உங்கள் வீட்டு விசேஷங்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களை மந்திரம் பூஜை செய்ய வையுங்கள்.

அது விடுத்து, பரபரப்பு போன்ற மூன்றாம் தர அங்கிகாரத்திற்காக இந்த மாதிரி காரியங்கள் செய்யாதீர்கள்.

ஆனால், உங்களின் இந்த மாதிரி காரியங்களால் இந்து மத ஒற்றுமை கூடுகிறது.

பெரியாரிடம் ஒரு சமுக அக்கறை, உண்மை இருந்தது. இப்போதிருப்பவர்கள் பொழைப்பிற்காக இது மாதிரி காரியங்கள் செய்கிறார்கள்.

மீண்டும் சொல்கிறேன். உங்களால் , மேலே சொன்ன பங்காரு – அன்புமணி- ஸ்டாலின் – போப் பற்றி நாடகம் போட முடியுமா.. ?

சொல்லுங்கள்…!

—வரதன்–

varathan_rv@yahoo.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)


அன்புடையீர்,

வணக்கம்.

சிற்றிதழ்களைச் சந்தா மூலம் பெறுவதைப் பற்றி கருணாகரமூர்த்தி எழுதியிருந்தார்.

பாதிப்பு எனக்கு மட்டுந்தான் என்றிருந்தேன். அனுபவம் பொதுவாகிறது போலும்.

கணையாழி இரண்டு ஆண்டு சந்தாவாக US$ 30/= அனுப்பிவைத்தேன். கணையாழி வரவில்லை. தொடர்ந்து பலமுறை தொலைபேசியில் பேசினேன். அயல்நாட்டிலிலிருந்து பேசிய தொலைபேசிக் கட்டணத் தொகையில் ஏழெட்டுச் சிற்றிதழ்களுக்கு சந்தா செலுத்தியிருக்கலாம். ஒவ்வொரு முறையும் கவனச் சிரத்தையாக முகவரியைக் குறித்துக் கொள்வார்கள். கணையாழி வரவேயில்லை. ஆறு மாதங்கள் இப்படியே போனது. அப்புறம் கணையாழியில் கணையாழி பதிப்பக உறுப்பினர்களுக்கான விளம்பரம் வந்தது. நான் கணையாழிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். ‘ நான் கணையாழி பதிப்பக உறுப்பினன் ஆக விரும்புகிறேன். ஆனால் நான் சந்தாவிற்குப் பணம் செலுத்தி பல முறை முயன்றும் இதுநாள் வரை பத்திரிகை வரவில்லை. எப்படி நம்பி பணம் அனுப்புவது ? ‘ என்று எழுதியிருந்தேன்.

உடனே மைதிலி ராஜேந்திரன் அவர்கள், ‘ நீங்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. கணையாழியில் பொது உறவில் நிறைய குறைபாடுகள் உள்ளன. நான் உடனே கவனிக்கிறேன். இந்திய பணத்திலேயே காசோலை அனுப்பி நீங்கள் பதிப்பக உறுப்பினராக ஆகுங்கள் ‘ என்று பதில் மின்னஞ்சல் அனுப்பினார். ஆனாலும் கணையாழி வரவேயில்லை. ஆறு மாதங்கள் கழித்து சென்னை சென்றபோது யுகபாரதியைப் பார்த்துச் சொன்னேன். அவரும் முகவரியைக் குறித்துக் கொண்டார். கையில் நான்கு முந்திய மாதங்களின் இதழ்களைக் கொடுத்து தேநீர் உபசரித்து அன்பாகச் சிறிது நேரம் பேசினார். மலேசியா திரும்பினேன் கணையாழி வரும் என்கிற நம்பிக்கையோடு. கணையாழி வரவேயில்லை. மைதிலி ராஜேந்திரனுக்கு மீண்டும் பலமுறை மின்னஞ்சல் அனுப்பினேன். பதிலேயில்லை.

வெறுத்துப்போய் US$ 30/= காசோலை எடுத்ததற்கான வங்கி ரசீதை கணையாழிக்கு அனுப்பி, ‘ இது நான் சந்தா செலுத்தியதற்கான அத்தாட்சி. அதைக் கிழித்து எறிந்து விட்டு உங்கள் பத்திரிகைத் தார்மீகத்துக்குக் களங்கம் வராமல் காத்துக் கொள்ளுங்கள் ‘ என்று எழுதினேன்.

இதுநாள் வரை கணையாழி வருவதில்லை.

இங்கு மலேசியாவிலுள்ள கடைக்காரப் பையன் மீதுதான் நம்பிக்கையும் மதிப்பும் வளர்கிறது.

‘சார், கணையாழி உங்களுக்காக எடுத்து வச்சிருந்தேன் ‘ என மாதாமாதம் தருகிறான்.

அன்புடன்,

மா. சிவஞானம்,

masivagnanam@hotmail.com


திரு நரேந்திரன் அவர்களின் கட்டுரை தொடர்பாக…..

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளது

குறிித்து கூறி இருந்தீர்கள்!தமிழ்நாடு மட்டுமல்ல.இந்தியா முழுதும் இதே

நிலைதான் என்றாலும்,நம்ம ஊர் அரசியல் வியாதிகளை சும்மா

சொல்லக்கூடாது!பணக்காரர்களையும் மிட்டா மிராசுதாரர்களையும் எதிர்த்து

அரசியலுக்கு வந்த ஏழைப்பங்காளர்கள் அல்லவா…. அதுதான் புகுந்து

விளையாடிவிட்டார்கள்!தேசிய ஒருமைப்பாடு குறித்து கவலை

அடைந்திருப்பவர்களின் துயர் துடைக்க தேசிய ஊழல்கள் மாநில ஊழல்களோடு

கூட்டணி அமைத்து வலிமையான இந்தியாவிற்கு அடிக்கல் நட்டு

இருக்கிறார்கள்!….அய்ந்து ஆண்டுக்கொருமுறை நட்டுக்கொண்டே

இருப்பார்கள்…!வாழ்க தமிழ்நாடு!

தமிழ்நாட்டில் பக்தி உணர்வு குறைந்து போய் விட்டதாககூறி

இருந்தீர்கள்….

வருடாவருடம் சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கூடி

வருகிறது. மதுக்கடைகளில் தனிக்குவளை கேட்கும் அளவுக்கு!எல்லா பெரிய

ஊர்களின் திருவிழாவிற்கும் சிறப்புப் பேருந்து தேவைப்படும் அளவுக்கு

பக்தர்களின் கூட்டம்!மகா மகம் போன்றவை அரசு விழாவாகவே

கொண்டாடப்படுகிறது!அனேகமாக இம்முறையும் சிலருக்கு இலவச மோட்சம்

கிட்டலாம்!இது தவிர அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வினர் தனித்தனியே

உயிரோடு இருக்கும் கடவுள்களை( ?) வணங்கி, சிலையாய் இருக்கும்

பெரியாரைக்கூட சிரிக்க வைக்கிறார்கள்!எங்களூர் திருவிழாவில் நடக்கும்

சண்டையில் கடைசியில் காவல் துறை வந்து கடவுளைக்காப்பற்றி அழைத்து

ச்செல்லும் கூத்து இப்போதும் தொடர்கிறது!பக்தி உணர்வு பெருகி இருப்பதின்

அடையாளங்கள் இவை என்ற போதிலும், பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் உள்ள

உறவுமுறைதான் சரி இல்லை.சென்னையில் எல்லா முக்கிய பகுதிகளிலும் ஒரு

தொடர் உணவகத்தின் கிளை காணப்படும்!அங்கு சென்று வந்தாலே கோயிலுக்கு

சென்று வந்ததைப்போல தெய்வீக உணர்வு கிட்டும்.அடியார்களின் படமும்

ஆண்டவர்களின் படங்களும் சுவரெங்கும் நிறைந்து,சாப்பிடும் சாதாரண உணவுக்குக்

கூட ஒரு ‘பிரசாத ‘அந்தஸ்து இருக்கும்.அதன் உரிமையாளர் இப்போது சிறைக்கும்

நீதிமன்றத்திற்குமாக நடையாய் நடக்கிறார்.அவரது வழிகாட்டியாய் இருந்து

மறைந்த அடியவரின் அருள்வாக்குதான் ‘ பக்தி வளர்ந்திருக்கிறது அதற்கேற்ற

ஒழுக்கம் வளரவில்லை ‘ என்பது!

இனி அமெரிக்கக்காவல்துறை பற்றி சிறப்பாகக்குறிப்பிட்டு

இருந்தீர்கள்….

1992 ல் லாஸ் ஏஞசலஸ் நகரைக்குலுக்கியது ஒரு கலவரம்!!

ராட்னி கிங் என்ற கறுப்பினத்தவரை வீதியில் வைத்து காவல் துறையினர்

அடித்து நொறுக்கிய நிகழ்வை வீடியோவில் எடுத்து வெளியே விட்டதின்

விளைவு அது!இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘ராம்பார்ட் ‘முறைகேடுகள் லாஸ் ஏஞசலஸ்

காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்திக்கொடுத்தன.நகரின் மையப்பகுதியில்

உள்ள காவல் நிலையம் சம்பந்தப்பட்ட விவகாரம் அது!கைப்பற்றப்பட்ட போதை

மருந்துகளை வெளியே விற்பனை செய்ததற்காகவும்,பொய் வழக்கு போட்டு

சிலரை நீண்ட கால சிறைத்தண்டனக்குள்ளாக்கி அனுப்பியதற்காகவும்

காவலர்கள்மீது குற்றச்சாட்டுகளெழுந்து உயர்மட்ட விசாரனை நடந்து

காவல்துறையினர் சிலர் தண்டிக்கப்பட்டனர்.மூன்று ஆண்டுகளுக்கு முன் நியூ யார்க்

நகரில் வீட்டுக்கு வெளிியே நின்று கொண்டிருந்த ஹைத்தி என்ற நாட்டை

சேர்ந்தவரை ஆயுதம் வைத்திருப்பதாக நினைத்துக் காவலர்கள் சுட்டுக்கொன்றது

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதில் இருவர் மீது விசாரணையும்

நடத்தப்பட்டது!

யு.சி.எல்.ஏ பல்கலைக்கழகதிற்கு ஒரு மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு

திரும்பிய புளோரிடவைச்சேர்ந்த மருத்துவர் ஒருவரை கார் திருடர் என்று

சந்தேகித்து கைது செய்து, விலங்கிட்டு, காவல் நிலையம் கூட்டிச் சென்றது

கடும் கண்டனத்திற்கு உள்ளாகி மான நஷ்ட வழக்கு ஒன்றையும் காவல்துறை

சந்தித்தது!

தீவிரவாததிற்கு எதிரான போர் என்று கூறி,சந்தேகத்தின்

பேரில் கைது செய்யப்படுபவர்கள் பற்றிய விவரங்களை

பெற்றவர்களுக்கோ,உறவினர்களுக்கோ, வழக்கறிஞர்களுக்கோ

தெரிவிக்கவேண்டியதில்லை என்ற புதிய விதியை ஏற்படுத்த

போராடிக்கொண்டிருக்கிறார் அட்டர்னி ஜெனரல் ஆஷ் க்ராப்ட்!

சட்டத்தின் ஆட்சி(!) சிறப்பாக நடக்கும் அமெரிக்கா உலகில் மிக

அதிக குற்றங்கள் நடக்கும் நாடாகவும் இருக்கிறது.துப்பாக்கிகளிின் எண்ணிக்கை

மக்கள்தொகையை விடவும் அதிகமாக இருக்கிறது.இந்த வன்முறைக்கலாச்சாரம்

குறித்து மைக்கேல் மூர் என்பவர் ‘பவ்லிங் பார் கொலம்பைன் ‘என்ற சிறப்பான

செய்திப்படத்தை எடுத்து கடந்த ஆண்டின் ஆஸ்கார் விருதையும்

பெற்றார்.அந்தப்பரிசளிப்பு விழாவில்தான் அவர் அமெரிக்க அதிபரின்

போர் வெறிக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவிிக்கப்போய்

பார்வையாளர் களிடமிருந்து அவருக்கெதிராய் கூச்சலும் எழுந்தது!

அமெரிக்க சட்டத்தின் முன் சாதாரண மனிதனும் நாட்டின் அதிபரும் சமம்

என்று கூறி இருந்தீர்கள்!

ஜனவரி மாதத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளில்

ஒருவரான அந்தோனின் ஸ்காலியா,அமெரிக்கத்துணை அதிபர் டிக் செனியுடன்

ஏர்போர்ஸ்2 என்னும் அரசு விமானத்தில் லூசியானாவுக்கு வேட்டைக்கு

போனாராம்!இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இந்நீதிபதி,துணை அதிபர்

சம்பந்தப்ப வழக்கை விசாரிப்பவர் என்பதுதான்!கடந்த அதிபர் தேர்தலில்

புளோரிடாவில் மறுவாக்கு எண்ணிக்கை தேவை இல்லை என்று தீர்ப்பளித்து

ஜார்ஜ் புஷ்ஷை வெள்ளை மாளிிகை நோக்கி அதிபராக்கி அனுப்பிய

நீதிபதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட தகவல்களை

பிப்ரவரி ஆறாம் தேதியிட்ட லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் என்ற நாளேடு தனது

தலையங்கத்தில் குறிப்பிட்டு நீதிபதியை கண்டித்திருக்கிறது!

அமெரிக்க அதிபர்கள் தங்கள் பதவிக்காலம் முடியும் தருவாயில் தங்களது

சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சில குற்றவாளிிகளுக்கு பொது மன்னிப்பு

வழங்குவார்கள்.மனிதாபிமான அடிப்படையில் அளிக்கப்படும் இந்த

‘மன்னிப்புக்கள் ‘கண்டனத்துக்குள்ளாவதில்லை.இந்த அதிகாரத்தை பயன்படுத்தி

பில் க்ளிண்டன் மன்னித்தது வழக்கறிஞராக இருக்கும் அவரது மைத்துனரின்

பணக்காரக்கட்சிக்காரரை!இதுவும் கண்டனத்திற்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியது.

இத்துடன் முடிக்கிறேன்..நன்றி!!!

அபராஜிதன்


Respected sir,

I am a editor of mahamaham.net

myself and my friends developed a web site www.mahamaham.net regarding mahamaham festival.

In this web site covering more than 150 temples history and

art and literature persons and saints from thanjavur district.

sir, i request u to give one link for our web site and we will give link

ur site in our web site.

we are eagrly waiting for ur reply.

Thanking u sir,

with faithfully,

S.Santhanakrishnan

editor

and

V.Masilamani

sub-editor

AannaA silicon Technology,

Kumbakonam

0435-3103015


திண்ணையில் நரேந்திரனின் ஆட்டம்

நிலாவசந்தன்

நரேந்திரன் வாரந்தோறும் அரைத்த மாவையே அரைத்து கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் எது நடந்தாலும், அல்லது எது நடக்காவிட்டாலும் அதற்கு திராவிட கட்சிகளின் ஆட்சி தான் காரணம் என்பது இவரது புலம்பல்களில் ஒன்று. எல்லோரும் வடக்கு நோக்கி புலம் பெயரவேண்டும் என்பது இவரது அடுத்த சித்தாந்தம். குற்றம் பெருகிவிட்டதா, திராவிட கட்சிகளின் ஆட்சி தான் காரணம், லஞ்சமா, திராவிட கட்சிகளின் ஆட்சி தான் காரணம். இன்னபிற இந்தியாவில் உள்ள அனைதிது அவலங்களுக்கும் திராவிட கட்சிகளின் ஆட்சி தான் காரணம் என்பார் இவர். என்னவோ காங்கிரஸ், BJP ஆளும் மாநிலத்தில் குற்றம் குறையே இல்லாதது போலவும், தமிழ்நாட்டில்தான் எத்தியோப்பியா அளவுக்கு குறை இருப்பதுபோல் இவரும் எழுதிக்கொண்டு இருக்கிறார். (அதுவும் இவரது எழுத்துக்கள் முதல் பக்கத்தில் அச்சேறுகிறது. மற்ற நல்ல எழுத்துக்கள் கடிதங்கள் பகுதியில் வருகிறது. என்ன ரகசியமோ).

வரதன் என்பவர் ஒரு முடிவோடு எழுதிகிறார். கண்ணை திறந்து கொண்டே நான் இன்னார், இன்னாரைத்தான் ஆதரிப்பேன் என்று எழுதுகிறார். அவரைக் கூடப் பாரட்டலாம். ஆனால் நம்ம( ?) நடுநிலைவாதி நரேஸின் style பொத்தாம் பொதுவாக எழுதுவது. இவரது சமீபத்திய கண்டுபிடிப்பு தமிழ்நாட்டில் குற்றம் பெருகிவிட்டதற்கு காரணம் கடவுள் நம்பிக்கை இல்லாதது. அதே பல்லவி. திராவிட கட்சிகளின் ஆட்சி தான் காரணம். 37 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் 13 ஆண்டுகாலம் MGR ஆண்டார். 9 ஆண்டுகாலமாக BJP (அம்மா ஆட்சி) ஆட்சியில் இருக்கிறது. எங்கே அய்யா திராவிட கட்சிகளின் ஆட்சி இருக்கிறது. MGR, JJவின் ஆட்சி என்பது களப்பிரர்களின் ஆட்சியைவிட மோசமான ஆட்சி என்பது தமிழ்கூறும் நல்லுலகுக்கு தெரியும். இவர்களது ஆட்சியில் ஆகம கல்லூரிகள் வந்த்து. தோகாடியா ஆண்டால் கூட வராது. இவர்களது ஆட்சியில் வந்தது. கோயில்களில் பூஸைகளில் குறைவில்லை. குற்றம் பெருகிவிட்டது. யார் காரணம். கடவுளின் பெயரால் ஆட்டம் போடும் உபி, மத்திய பிரதேசத்தில் இன்னும் மனிதன் காட்டுமிராண்டி போல வாழ்கிறான். இதற்கு யார் காரணம். இது இவருக்கும் தெரியும். கடவுளை மறுப்பவர்களின் விழுக்காடு தமிழ்நாட்டில் ஒன்று கூட தேறாது. 99 விழுக்காடு கடவுளை நம்புகிறான். இதில் குற்றம் பெருகினால் யார் குற்றம். சிந்தித்து எழுதுங்கள் தோழரே. இவர் சிந்தித்து எழுதினால் கருணாநிதியை அவ்வளவாக குறை சொல்லமுடியாது. காமராசர் ஆட்சியைவிட கருணாநிதியின் ஆட்சியில் தமிழ்நாட்டில் வளர்ச்சி அதிகம். அதே சமயத்தில் ஊழல் அதிகம். எங்குதான் ஊழல் இல்லை. நான் நியாயப்படுத்தவில்லை. இந்தியாவில் எங்குதான் ஊழல் இல்லை. சுத்த சுயம்சேவிக்குள், லஞ்சப்பணத்தை டாலராகவே கொடு என்று கேட்டு வாங்கவில்லையா. நீங்கள் ஜெயலலிதாப்பற்றி எழுதவேண்டும் என்றால் தாரளாமாக எழுதாலாம். அதற்காக கருணாநிதியை இரண்டு வாங்கு வாங்கிவிட்டுத்தான் எழுதவேண்டும் என்ற பொது நியதியை பின்பற்றி எழுதினால் சங்கரபாண்டி சொன்னதைப்போல ‘அசட்டு ‘ எழுத்துகளை படிக்கும் வாசகர்களை நீங்கள் இழந்துவிடுவீர்கள்.

நன்றி

நிலாவசந்தன்

nilavasanthan@yahoo.com


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

உண்மையில் இந்த சர்ச்சையை வளர்ப்பதில் எனக்கு சிறிதும் ஆவலில்லை. ஆனால் திரு.பித்தன் அவர்களுக்கு எனது கடிதங்கள் நகைச்சுவையூட்டுகிற காரணத்தால், நம்மால் ஒருவர் நன்றாக சிரித்து மகிழ்ச்சியுடன் இருக்கட்டும் என்று அவர் கூறிய கருத்துக்களில் நான் தவறென கருதும் சில விஷயங்களைக் குறித்து கூறுகிறேன். ஒன்று டாக்டர். அம்பேத்கர் சமஸ்கிருதம் குறித்து கூறியது தொடர்பாக அவர் அதை ஏதோ அம்பேத்கரது தனிப்பட்ட கருத்து என்பதாக காட்ட விழைகிறார். ஆனால் அம்பேத்கர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசியமொழியாக வேண்டுமென கூறியது பாரத பாராளுமன்றத்தில் ஆகும். அவர் மிகத்தெளிவாக சட்ட அமைச்சர் என்ற ரீதியில் நம் நாட்டின் சமூக வரலாற்று காரணிகளை கணக்கிலெடுத்துக் கொண்டு நம் சட்டப்பிரிவின் 310 A.(1) ‘இந்திய யூனியனின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும். ‘ என அமைக்கப்பட வேண்டும், எனக் கூறினார். (சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டண்டர்ட் 11 செப்டம்பர் 1949 நியூ டெல்லி பதிப்பு – அம்பேத்கர் பேட்டியுடன்) இதற்கு முன்பாக இக்கருத்தையே அவர் 10-செப்டம்பர்-1949 இல் நடந்த அகில இந்திய ஷெட்யூல்ட் ஜாதி பெடரேஷனின் ‘எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி ‘ கூட்டத்திலும் வலியுறுத்தினார். ஆக பாரதத்தின் சட்ட அமைச்சர் என்ற முறையிலும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு உழைத்த சமுதாய சீரமைப்பாளர் மற்றும் போராளி என்ற முறையிலும் அவர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாக வேண்டும் எனக் கூறியுள்ளார். சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாக வேண்டும் எனக் கூறியவர்களில் எத்தனை பேர் அந்தணர்கள் என்பதனை நான் அறியேன். ‘ பாரத தேச ஒற்றுமையின் அடையாளமாகவும் அதன் உள்ளீடாகவும் சமஸ்கிருதம் விளங்குகிறது ‘ என்று கூறிய K.R.நாராயணன் பிறப்பால் அந்தணரல்ல. அல்லது ‘சம்ஸ்கிருதம் ஒரு இனத்திற்கோ ஒரு பிராந்தியத்திற்கோ சொந்தமான மொழியல்ல மாறாக அனைத்து பாரதத்திற்கும் பொதுவான மொழி ‘ என்று கூறிய பக்ருதீன் அலி அகமது நிச்சயமாக பிறப்பால் அந்தணரல்ல. மேலும் அம்பேத்கருக்கு தமிழ் தெரிந்திருந்தால் ஒருவேளை அவர் தமிழ்தான் தேசிய மொழியாக இருக்க தகுதியானதெனக் கூறியிருக்கலாம் என்கிறீர்கள். அதாவது மராட்டி தெரிந்த அம்பேத்கர் அம்மொழியைக் காட்டிலும் சமஸ்கிருதம் சிறந்ததென கருதி சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்க தகுதியானதெனக் கூறியிருக்கலாம். ஆனால் அவருக்கு தமிழ் தெரிந்திருந்தால் அதுவே தேசிய மொழியாக இருக்க தகுதியானதெனக் கூறியிருப்பார் என வாதத்திற்காக முன்வைக்கலாம். உண்மையில் வங்காளம் நன்றாகத் தெரிந்த விவேகானந்தரும் சரி, மராத்தி மொழி நன்கறிந்த அம்பேத்கரும் சரி சம்ஸ்கிருதம் மராத்தியையோ அல்லது வங்காளத்தை விட உசத்தி என கருதி அவ்வாறு கூறவில்லை. முழுக்க முழுக்க இந்த சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்ற ஆற்றலளிக்கும் கருவி சமஸ்கிருதம் என்றே கருதினார்கள். அடுத்ததாக சமய வாழ்க்கை என்பது ஒரு பகுதிதான் ஆனால் அது மட்டுமே பண்பாடல்ல என்பது உண்மைதான். ஆனால் தமிழர் பண்பாட்டில் சமயம் பண்டை காலம் முதல் முக்கிய பகுதி பெற்றிருந்ததல்லவா ? அப்பகுதியில் சமஸ்கிருதத்தை அந்நியமாக தமிழ் என்றென்றும் கருதியதில்லை ஏனெனில் வேதநெறியும் சமஸ்கிருதமும் தமிழருடையது தமிழ் பண்பாட்டில் ஒரு பங்கு.

இதோ ஒரு புறப்பாடல்:

‘நன்று ஆய்ந்த நீள்நிமிர்சடை

முதுமுதல்வன் வாய்போகாது,

ஒன்று புரிந்த ஈர்-இரண்டின்,

ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்

இகல் கண்டோர் மிகல் சாய்மார்,

மெய் அன்ன பொய் உணர்ந்து

பொய் ஓராது மெய் கொளீஇ

மூ-ஏழ் துறையும் முட்டு இன்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக! ‘ (புறம் 166:1-9)

வேதநெறிக்கு மாறுபட்டார் வலிமை குன்றும் படியாக, அவர்கள் மெய்போலக் கூறும் பொய் மொழிகளை அடையாளம் கண்டு உண்மையை உணர்ந்து வேத வேள்வித்துறைகளில் சிறந்து விளங்கியதாக தமிழ் அரசனான பூஞ்சாற்றுர்க் கெளணியன் விண்ணந்தாயனை வியக்குகிறது புறநானூறு. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பாரதி ‘வருகின்ற ஹிந்துஸ்தான ‘த்தைப் பாடுவார்,

‘மெய்மை கொண்ட நூலையே – அன்போடு

வேதமென்று போற்றுவாய் வா வா வா

பொய்மை கூறலஞ்சுவாய் வா வா வா

பொய்மை நூல்களெற்றுவாய் வா வா வா ‘

புறநானூறு முதல் பாரதி காலம் வரை எதை தமிழ் சமுதாயம் அந்நியமென உணர்ந்தது என்பது புரியும். மற்றொரு விஷயம். சிறுத்தொண்டர் சமஸ்கிருதத்தை கற்றது அவர் சிவத்தொண்டர் ஆகுமுன்பே, அதுவும் வைத்தியத் தொழிலையும் போர்க்கலையயும் கற்பதுடன் கூட என்பது பெரியபுராணத்தை சிறிதே படித்திருந்தால் தெரிந்திருக்கும் (ஆயுள்வே தக்கலையும் அலகில்வட நூற்கலையும்,

தூயபடைக் கலத்தொழிலும் துறை நிரம்பப் பயின்றவற்றால்).

யானையைப் பழக்கும் தமிழக பாகர் சமஸ்கிருத மொழியில் யானையைப் பழக்கியது குறித்து கூறுகிறது முல்லைப்பாட்டு (35-36). நமது ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாடு உண்மையாக இருப்பின் குதிரையைப் பயிற்றுவிப்பவர்கள் அல்லவா சமஸ்கிருத மொழி பயன்படுத்தவேண்டும் ? இந்த மண்ணிற்கே உரிய யானையை அதுவும் தமிழ் மன்னர்களுக்கு மிகவும் போர்களத்தில் தேவைப்படும் ஒரு படையை பயிற்றுவிக்க அந்நியமொழியையா பயன்படுத்துவார்கள் ? செங்காட்டங்குடி கிராமத்து அந்தணனல்லாத இளைஞனுக்கும் சம்ஸ்கிருதம் பயில முடிந்திருக்கிறது. தமிழரசர்களின் யானைப்பாகர்களுக்கும் அவர்கள் தொழிலுக்கேற்ற அளவில் சம்ஸ்கிருதம் பயில முடிந்திருக்கிறது. இராமாயணத்தை ‘தெரிந்து ‘ வைத்துக் கொள்ள செவிவழி அறிவு போதும் தான். ஆனால் கம்ப இராமாயணம் போன்ற காவியத்தை படைக்க சமஸ்கிருத மூலத்தை படிக்கவே செய்யாமல் செவிவழி இராமகாதை அறிவின் மூலம் முயற்சித்தார் என்று வாதத்திற்காக கூட கம்ப நாட்டாழ்வாரை கீழ்மைப்படுத்த வேண்டாமே.

ஆக மொத்த விஷயம் என்னவென்றால், இன்றைக்கு சமஸ்கிருதத்தின் மீது ஏற்படுத்தப் பட்டிருக்கும் வெறுப்பு முழுக்க முழுக்க ஆரிய-திராவிட இனவாதம் சார்ந்த ஒன்று. இந்த இனவாத அடிப்படை தகருகிற பட்சத்தில் சமஸ்கிருதம் யாருடைய மொழி ? எந்த பிராந்தியத்தின் மொழி ? எந்த சாதியினரின் மொழி ? எந்த இனத்தவரின் மொழி ? என்னும் கேள்விகளுக்கு பதிலாக எந்த ஒரு குறிப்பிட்ட சாதியையும், பிராந்தியத்தையும், இனத்தையும் காட்ட முடியாது. ஏனெனில் அது அனைத்து பாரதத்திற்கும், அதன் அனைத்து சாதியினருக்கும், அனைத்து இனத்தவருக்குமான மொழி. ஆனால் பாதிரிகளின் துணையோடு அவர்கள் ‘ஹிந்துமதத்திற்கு நாங்கள் வைத்த டைம்பாம்தான் திராவிட இயக்கம் ‘ என்று வெளிப்படையாகவே ஈவேரா கூட்டத்தின் நிழல் எஜமானர்கள் யார் என்பதை ஆர்ப்பரித்து விளக்க, மூன்றாம் தர கிறிஸ்தவ பிரச்சாரகன் கூட இன்று பேசக் கூசும்படியான வசையாடலை ஹிந்துமதத்தின் மீது உமிழ்வதை சமுதாய சீர்திருத்தம் என்று கூறுவதைப் போல வயிற்றைக் குமட்டும் விஷயம் வேறெதுவும் இருக்கமுடியாது. உண்மையில் ஈவேரா செய்தது சமுதாய சீர்திருத்தம் அல்ல, மாறாக இனவாத விஷப்பிரச்சாரம். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் கீழ்த்தரமான பகுத்தறிவற்ற கூட்டம், தங்களை ‘திராவிட இயக்கத்தினராக ‘ கூறிக்கொள்ளும் கூட்டம்தான். ஈவேராவின் அந்தண வெறுப்புப் பிரச்சாரத்தின் முன் ஹிட்லரின் ‘மெயின் காம்ப் ‘ ஒரு சின்னபையனின் கிறுக்கலாகத்தான் தோன்றும்.

நம் சமுதாயத்தில் பல குறைகள் உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே. ஆனால் அதை செய்யவேண்டியது – செய்து கொண்டிருப்பது ‘குப்பைத்தொட்டிக்குப் போக வேண்டிய ‘ மேற்கத்திய இனவாத குப்பையைத் (அம்பேத்கரின் வார்த்தைகள்) தங்கள் தலைக்குள் ஏந்திக்கொண்ட ஈவேராவோ அவரது பகுத்தறிவற்ற கருப்புச்சட்டைக் காளான் கும்பல்களோ அல்ல.

இக்கடிதம் திரு.பித்தனுக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியிருக்கும் என்றாலும் அவர் சிரித்து சிரித்து தன் வயிற்றைப் புண்ணாக்கி கொள்ளாமல் இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

அரவிந்தன் நீலகண்டன்


தலித் சகோதரர்களே!

அன்பிற்கும் பாசத்திற்கும் உர்ிய தொல்.திருமாவளவன், தா.கிருஷ்னசாமி மற்றும் தலித் சகோதரர்களே,

தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டனியில் தங்கள் இருவருக்கும் இடம் கிடையாது என்று ‘ஒதுக்கி ‘ வைத்துவிட்டு சாதிக்கட்சிகளுக்கு தங்களது கூட்டனியில் இடம் கிடையாது என்று கருனாநிதி கூறுவது ‘என் அப்பன் குதிருக்குள் இல்லை ‘ என்பதுபோல் இருக்கிறது. தாங்கள் இருவர் மட்டும் ‘ஜாதி ‘ வெறியினராக தோற்றமளிக்கிற பொழுது ‘ராமதாஸ் ‘ மட்டும் சாதி சாராதா சமுக தலைவராக கருனாநிதிக்கு காட்சியளிப்பது விந்தையிலும் விந்தை. தி.மு.க.வில் தலித்துகள் இருக்கிறார்களாம்..ஏன் முஸ்லிம்கள் இல்லையா என்று நீங்கள் கேட்பது சரியான கேள்வி ?

முஸ்லிம்களுக்கு கருனாநிதி தற்போது சீட் கொடுப்பது..சிறுபான்மையினருக்கும்..பெரும்பான்மையினருக்கும் பாலமாகஇருப்பேன் என்று கூறி தி.மு.க.வின் ஓட்டினால் பா.ஜ.க.வை தமிழகத்தில் வளர்த்து முஸ்லிம்களின் கோபத்தை சம்பாதித்ததற்காக அது மட்டுமல்ல

கருனாநிதி ஆட்சிகாலத்தில் கோயம்பத்தூர் கலவரத்தில் அரசாங்க சம்பளம் வாங்கும் காவல் துறை சங்பரிவார காவி துறையினருக்கு கையாட்களாக மாறி முஸ்லிம் கொலை, கொள்ளையில் ஈடுபட்டதே அதையெல்லாம் தமிழக முஸ்லிம்கள் மறக்க வேண்டாமா.சீட் கொடுத்து சிறுபான்மை காவலனென்ற பெயரெடுக்க வேண்டமா ? பாவம்செய்தா பரிகாரம் செய்யவேண்டுமே அதற்காகத்தான் முஸ்லிம்களுக்கு ஒருசீட்..

சென்ற தேர்தலின்போது உங்கள் இருவருக்கும் கூட்டனியில் இடம் கொடுத்து ஓரனிக்கு கொண்டுவந்த கருனாநிதி உங்கள் இருவரையும் ஒரே மேடையில் ஏறி தலித் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக உலாவரச்சொன்னபோது இருவரும் ஏன் கைகோர்த்து செல்லாமல் ‘என் வழி தனி வழி ‘ என்று ஏன் சென்றீர்கள் என்பது இதுவரை எங்களுக்கு தெரியவில்லை ? ஆனால் ஒரே கூட்டனியில் இடம் பெற்றும் ஒன்று சேராதா நீங்கள் இருவரும் கருனாநிதியால் ஒதுக்கி வைக்கப்பட்டவுடன் கைக்கோர்த்து ஒன்றாக காட்சியளிக்கிறீர்களே..அந்த கண்கொள்ளா காட்சியை காண வழிவகைசெய்த..தலித் சக்திகளை ஒன்றினைத்ததற்காக..கருனாநிதியை உண்மையிலேயே பாராட்டாத்தான் வேண்டும்..

இனிமேலாவது தலித் சகோதரர்களை சாதிய வேறுபாடின்றி ஒன்றினைத்து ஒரு மாபெரும் சக்தியாக உருவாக்குங்கள்..இந்த தேர்தலென்ன இந்தியவரலாற்றின் இறுதி தேர்தலா ? இன்னும் வரும் எத்தனையோ இடைத்தேர்தல்.தொடைத் தேர்தலென்று.

பல்வேறு துனைச்சாதிகளை உள்ளடக்கிய வன்னிய சமுதாயத்தை ஒன்றினைத்த டாக்டர்.இராமதாஸ் போல, இருபெரும் திராவிட கட்சிகளையே தங்கள் தாய்வீடாக கருதி வந்த இஸ்லாமிய சமுதாயத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஒருதலைமையின்யின் கீழ் கொண்டுவந்து ஒரு சக்தியாக உருவாக்கியதுபோல் நீங்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் அனைவரையும் ஒன்றினையுங்கள்..பறையர் பள்ளரென்ற சாதிய அடையாளத்தை கைவிட்டு பறைக்கொட்டி செல்லுங்கள்..

அதற்குள் அவசரப்பட்டு அதிகாரம் தேவையென்று குறுகிய கால நன்மைக்காக அ.தி.மு.க-பா.ஜ.க பக்கம் போய் விடாதீர்கள்..பங்காரு லட்சுமனனுக்கு (எங்கே அவர் ?) ஏற்பட்ட கதியை சற்று நினைத்துபாருங்கள். மத்திய பிரதேச.இந்தூர் பா.ஜ.க மாநாட்டில் தமிழக தலித் ‘வீர்சவர்க்கார் ‘ கிருபாநிதியை சாதிப்பெயரை சொல்லி ‘முகமூடி ‘ தலைவரின் முன்னாலேயே இல.கனேசன் திட்டியதை நினைத்துப்பாருங்கள். உத்தரபிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட மாயாவதியிடம் கூட்டு வைத்து பிறகு அவருக்கே வேட்டு வைத்த பா.ஜ.க.வை நெருங்காதீர்கள்..பாபர் மசூதியை இடித்தவுடன் கழட்டிவிடப்பட்ட பிற்படுத்தப்பட்ட ‘கல்யான்சிங்கை ‘ நினைத்துப்பருங்கள்..

இவ்வளவு ஏன் ? பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சியல்ல என்று கூறி ஆதரவு கரம் நீட்டி அனைத்துக்கொண்ட, தக்க தருணத்தில் உதவி செய்த கருனாநிதியின் கழுத்திலேயே கத்தியை வைத்த பா.ஜ.க.பற்றி தாங்கள் அறியாமல் இருக்க மாட்டார்கள்..கருனாநிதிக்கே இந்த நிலைமையென்றால் தேர்தலுக்கு பிறகு தங்களின் நிலைமையென்னவாகும் என்று உணர்ச்சிவசப்பாடாமல் சற்று எண்ணிப்பாருங்கள்..

அ.தி.மு.க-பா.ஜ.கவுடன் கூட்டு வைப்பதால் நெடுங்கால நன்மை உங்களுக்கு நிச்சயமாக இல்லை..அதிகபட்சமாக போனால் தேர்தல் முடியும் வரை தலித்துகளும் இந்துக்கள்தான் என்று ‘அம்மாவின் ஆணைக்குப்பிறகு ‘ சங்கர மடமும் சங் பரிவாரமும் ‘தற்காலிகசான்றிதழ் ‘ வழங்கும்..அவ்வளவுதான்.தேர்தல் முடிந்தவுடன் ‘நாமம் ‘தான்..வேறு எந்தப்பயனும் இல்லை.

தேர்தல் முடிந்தவுடன் கூட்டனிகட்சிகளை கழட்டிவிடுவதிலும்..கவிழ்த்துவிடுவதிலும்..செல்வி.ஜெயலலிதாவுக்கு இனை யாருமில்லை என்பது ஹிந்துஸ்தானுக்கே தெரியும்..

அதற்கு முன்பாக ஒரு சில கண்டிப்பான வேண்டுகோள்கள்..

மற்ற கட்சிகளை போல் கட் அவுட் வேண்டாம் போஸ்டர் வேண்டாம் மாலை வேண்டாம்.பூரனகும்ப.மரியாதை வேண்டாம்..தொண்டர்களும் மற்றவர்களும் காலில் விழவேண்டாம்..தெய்வமே..கடவுளே..இனமான காவலரே..சமுதாய தலைவரே என்றெல்லாம் மேடையிலே பிசாத்து புகழ்மொழிகளும், வசனங்களும், அடைமொழிகளும் வேண்டாம்..அனைத்துக்கும் மேலாக யாகங்கள் வேண்டவே வேண்டாம்…

செய்ய வேண்டியதெல்லாம் பெரியார் மற்றும் அம்பேத்கரின் அறிவுரைகளை தொண்டர்களுக்கு புகட்டி தொலைநோக்கு சிந்தனை மிக்க தலைவர்களை உருவாக்குங்கள்.. அத்தகைய தலைமையை கொண்டு சிந்தனைமிக்க சேவைகுணமிக்க தொண்டர் படையை உருவாக்குங்கள்.. அத்தகைய தொண்டர்களைக்கொண்டு சமுதாயத்தை பிடித்திருக்கும் குடிபழக்கம், சினிமா பைத்தியம் மற்றும் நடிக-நடிகையர் வழிபாடு போன்ற பீடைகளை ஒழித்து கட்டுங்கள். மத்திய மற்றும் மாநில அரசு வழங்கியிருக்கும் சலுகைகளை பிரச்சாரம் செய்து அச்சலுகைகள் தடையின்றி தேவையானவர்களை அடைய வழி செய்யுங்கள்..அவ்வாறு செய்தால் மாற்றுக்கட்சிகளில் புகலிடம் தேடிப்போன சமுதாய மக்கள் அக்கட்சிகளின் கூடாரங்களிலிருந்து வெளியேறி தங்களின் தலைமை ஏற்க ஓடோடி வருவார்கள்..வராமல் ஒட்டிக்கொண்டிருப்பவர்களை தலித் சமுதாயமே ஒதுக்கி வைத்துவிடும்…உங்களைத்தேடி அப்போது வருவார்கள் தேசிய, மாநில ‘வோட்டுபொறுக்கி ‘ அரசியல்கட்சிகளின் தலைவர்கள். உங்களின் ஆசியை வேண்டி..

அன்புடன்

பொறையாறு நந்தன்

ananthakumaran@hotmail.com


இந்த இதழ் திண்ணையில் ரவி சீனிவாஸின் ஆக்ரோஷமான எதிர்வினையை எதிர்பார்க்கிறேன். அது கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டதாக இருக்கும் 1] ஜெயமோகன் காமத்தில் சாதி இல்லாமலாவது பற்றி எழுதியிருப்பது சாதியை வலியுறுத்தும் அதி ரகசிய , உள்நோக்கம் கொண்டுதான் . அதை இவ்வாறு வாசிப்பதனூடாக நாம் புரிந்துகொள்ளலாம். …..சொற்கள்.. . 2] ஜெயமோகன் சாதியமைப்பு ஒரு மெலோட்டமான அடையாளம் மட்டுமே என்று படைப்பில் சொல்லியிருந்த்ஹால்கூட நாம் பொருட்படுத்தக் கூடாது , ஆனால் அதற்கு எதிராகநநாவலில் எந்த கதாபாத்திரம் என்ன சொல்லியிருந்தாலும் அது ஜெயமோகனின் சொந்த கருத்தாக கொள்ளப்பட வேண்டும். காரணம் …..சொற்கள்…3] ஜெயமோகன் சாதி இல்லை என்று சொன்னால் அதை நாம் சாதி உண்டு என்றே வாசிக்கவேண்டும். பெண்களைப்பற்றி எது எழுதினாலும் அது கண்டிப்பாக பிற்போக்காகவே இருக்க முடியும் ,வேறு வழியே இல்லை. உண்டு என்பவர்கள் அபத்தமாக யோசிப்பவர்கள். 4] முற்போக்காளர்கள் சொல்லும் எக்கருத்தையும் ஜெயமோகன் சொல்ல முடியாது, காரணம் அவர் கையில்வைத்திருக்கும் பேனா அப்படிப்பட்டது. அது அவற்றை எழுதாது. எழுதினாலும் அந்த மை உடனே அழிந்து போய்விடும். காரணம் …சொற்கள்.. மேற்கொண்டு ஆதாரமான இணைய தள முகவரிகள் ஒரு ஐம்பது .

இப்படித்தான் நமது இலக்கிய விவாதங்கள் இங்கே நிகழ்ந்துவருகின்றன. அதற்கு இலக்கியம் கூடதேவையில்லை என்றநிலை உருவாகி வருகிறது

சூர்யா


முஹம்மது இஸ்மாயில்

நண்பர் பித்தன் அவர்களுக்கு பெண்களில் ஏன் நபி இல்லை ? ஆண்களுக்கு ஏன் கர்பப்பை இல்லை ? போன்ற பிரச்சினைக்கு என்னால் நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு பதில் மரியாதை கொடுக்க முடியவில்லை என்பதை நினைத்தால் எனக்கே கஷ்டமாக தான் இருக்கிறது. அதுவும் தவிர பெண் பூசாரி பற்றிய கேள்விக்கு மாதவிடாய் காலங்கள் பற்றி எல்லாம் நீங்களே குறிப்பிட்டு இருந்தீர்கள் அதை வைத்து என்னால் ஒரு பதில் கொடுக்க முடியலாம் அது தொடர்கதையாகி விடுமே தவிர விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகாது. அதானால் என் நல்லதுக்காக நான் இத்துடன் விட்டு விடுகிறேன். நான் உங்கள் கேள்விக்கு சரியான பதில் கொடுக்க வில்லை என்றும் பல கேள்விகளுக்கு பதிலே கொடுக்க வில்லை என்பதையும் எனக்கு நறுக்கென்று எடுத்து கூறி அழகாக எழுதியிருக்கிறீர்கள்.. என் சிறு சிறு கேள்விகளுக்கெல்லாம் கவிஞர் அவர்கள் எழுதிய புத்தகத்தை வாங்கி படிக்குமாறு கேட்டிருந்தீர்கள். எனது பெரிய பெரிய கேள்விகளுக்கெல்லாம் தந்தை பெரியார் எழுதிய புரட்டு புரட்டு இமாலய புரட்டு என்ற நூல் விடை அளித்தது என்பதையும் உங்களுக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். பெரியாரை பற்றி கூறியிருந்தீர்கள்.. ஒரு குறிப்பிட்ட தெருவில் ஆடு போகலாம் மாடு போகலாம் ஏன் ? கழுதை, பன்றி கூட போகலாம் ஆனால் மனிதர்களில் ஒரு சாரார் மட்டும் போக கூடாது என்ற நிலை இருந்தது.. மனிதன் எல்லோரும் சமமடா என்று சத்தம் போட்டு சட்டம் வென்ற வைக்கம் வீரரை, ராமசாமியை பெரியார் என்று எல்லோரும் அழைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.. எவர்கள் சமுதயத்தில் ஒதுக்கப்பட்டார்களோ அவர்கள், அப்படி ஒதுக்கியவர்களை பார்த்து இன்னமும் வணக்கம் சாமி என்று தான் கும்பிட்டு கொண்டு இருக்கிறார்கள்.. இது தான் ஆச்சரியம்.. சரி இந்த விவாததை நம்ம இரண்டு பேருடைய நல்லதுக்காகவும் விட்டு விடுவோம்- உங்கள் கேள்வி ஏன் சில சாதியினர் மட்டும் பூசாரிகளாக இருக்கிறார்கள் ? என்றிருந்தால் நியாயமானதாக இருந்திருக்கும் என்று எழுதியிருந்தீர்கள்.. சரி ஒரு நியாயமான கேள்வி இதோ.. இப்ப தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு ஒரு பெரிய பணக்காரர் போகிறார் என்று வையுங்கள், சேர்ந்து தொழும் தொழுகை முடிந்து விட்டது.. ஆனால் ஒரு பிச்சைக்காரர் ஒருவரும் கூலிக்காரர் ஒருவரும் பின்னாடியே வருகிறார்கள் இதற்கிடையில் அந்த பெரிய பணக்காரரோ காரில் வந்திறங்கிய முதலாளி.. இந்த நேரத்தில் ஒரு பிச்சைக்காரனுக்கு பின்னால் ஒரு கூலிக்காரனும் ஒரு முதலாளியும் தோல் உரசிய படி நின்று ஒன்றாக தொழ வேண்டிய நிலை ஏற்படலாம். இது தான் இஸ்லாம்.. மனிதர்களுக்கிடையே பாகுபாடு கிடையாது, பிரிவு கிடையாது. ஒரு பிச்சைக்காரன் கூட குரான் படிக்கலாம், மத தலைவராக ஆகலாம்.. இதே மாதிரி ஒரு சாமாண்ய ஒருவர் அம்பாளுக்கு புடவை சாத்தணும் என்று நேர்ந்து கொண்டு வந்தால் அவர் நேரடியாக அனுமதிக்கப் படுவரா ? ..அல்லது இந்த கேள்வியை நான் எப்படி மாற்றி கேட்டிருந்தால் நியாயமானதாக இருந்திருக்கும். தெரிக்கவும். நான் தலை முடியை மூடினால் இந்த தொழில் செய்ய முடியாது என்று எந்த தொழில்களாவது உண்டா என்று கேட்டிருந்தேனே- அதற்கு நீங்கள் பதில் சொல்ல வில்லையே ? நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் முகம் முழுவதையும் மூடாமல், தொப்புள் தெரியாமல், மார்பு துணி விலகாமல் உடை அணியவே முடியாதா என்று.. ஆக, நீங்கள் ஓரளவுக்கு ஒத்து வருகிறீர்கள்.. இப்ப பிரச்சினை வந்து முகத்தை மூடுவதிலும் தலையை மூடுவதிலும் தான்..சரி.. நான் என்ன கேட்கிறேன் நாம் இரண்டு பேருமே ஒத்து போன கருத்தை வைத்து சிந்தித்து பார்ப்போம்.. தங்களது மார்பினை ஓரளவுக்கு வெளியே தெரியும் அளவுக்கு ஆடை அணியும் நவ நாகரிக பெண்களிடம் நீங்கள் சொல்லியிருப்பது போல் தலையை, முகத்தை மூட வேண்டியதில்லை ஆனால் மார்பை மறைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று எண்ணுகிறீர்கள் ? இந்த இடத்தில் எனக்கு இன்னொரு சந்தேகம் வேறு வருகிறது.. இப்படி அணிய வேண்டும் என்று நாம் முதலில் பெண்களிடம் மத அடிப்படையில் சொல்லலாமா ?கூடாதா ?என்று.. சொல்ல கூடாது என்பதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் ஒன்றும் சரியில்லையே.. ஏனெனில் ஆடை அணிவது ஒழுக்கம் சம்பந்தமானது, சமுதாயம் சம்பந்தமானது என்கிறீர்கள் அப்படியென்றால் மதம் ஒழுக்கம் சம்பந்தமானது அல்லவா ? சமுதாயம் சம்பந்தமானது அல்லவா ? அல்லது இதுவும் விதண்டாவாதமா ? (இப்பொழுதெல்லாம் ஜவுளி கடைகளில் சுரிதாருக்கு துப்பட்டா கிடையாது, முழுகை கிடையாது அரை கை தான் அல்லது கை இல்லாமல் (sleeve less) தான் வருகிறது, இப்படியே குறைந்து கொண்டு போய் கடைசியில் ஜவுளி கடைகளிலெல்லாம் வெறும் கைக்குட்டைகள் மட்டும் தான் விற்கிற காலம் வந்து விடும் போல் இருக்கிறது). பெண் பூசாரிகள் கண்ணியமான ஆடைகள் அணிகிறார்கள் என்கிறீர்கள்.. அந்த கண்ணிய ஆடைகள் அணிய வேண்டுமென்று அர்த்தமுள்ள இந்து மதம் வலியுறுத்துகிறதா ? அப்படி வலியுறுத்தினால் அது பூசாரிகளை மட்டும் தான் அப்படி வலியுறுத்துகிறதா ? மற்ற பெண்களை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது ? அதுவும் தவிர பெண்கள் வெளியே வரும் போது தான் பர்தா அணிய வேன்டும் என்கிறோம், அப்படியென்றால் வெளியே வரலாம் என்று தானே அர்த்தம். அதுவும் தவிர உங்களை பொறுத்தவரை அப்படி அணிய சொல்வது அடிமைப் படுத்துவது போல என்கிறீர்கள் ஆனால் நான் என்ன சொல்கிறேன் அப்படி விரும்பி அணிபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்கிறேன்- உதாரணமாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை மணந்த ஜெமிமா என்ற மேல் நாட்டு கலாச்சாரத்தில் வாழ்ந்த இங்கிலந்து நாட்டை சேர்ந்த பெண்மணி கூறினார்கள்- பர்தா அணிந்த பெண்களே உண்மையான விடுதலைவாதிகள் என்று- ஈரான் நாட்டில் கடந்த 23 வருடங்களாக பெண்களுக்காக பெண்களால் நடத்தப்பட்டு வரும் அறுபதாயிரத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகும் பத்திரிக்கையான ‘மஹ்ஜீபாஹ்’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியரும், தெஹ்ரான் பல்கழைக்கழகப் பேராசிரியையுமான டூரான் பென்ஜெம் ஷீதியின் என்பவர் ‘ஹிஜாப்(உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடை) உண்மையாகவே எங்களைப் போன்ற பெண்களுக்குப் பாதுகாப்புத் தருகின்றது. இதனால் எங்கள் பத்திரிக்கை பணிக்கு எந்த இடையூறும் இல்லை’ என்று கூறியிறுக்கின்றார். பர்தா என்பது இஸ்லாமிய நாகரீகத்தின் அடையாளம். பெண்களுக்கு பாதுகாப்பு அரண், இதில் எந்த முரணான கருத்தையும் ஏற்பதற்கில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு படை எடுத்து வருகிறவர்கள் அங்குள்ள இடங்களை அழிப்பது வரலாற்றில் ஒன்றும் கேள்விப்படாததல்ல- பல இந்திய அரசர்கள் மலேசியா வரை சென்று போரிட்டு வென்றது எல்லாம் படித்த வரலாறு தான். இது மட்டுமின்றி பாபராகட்டும் அக்பராகட்டும் அவர்களே இழுதிய சுய சரிதை நூல் வடிவில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.. பாபர், பாபர் நாமா என்றும் அக்பர் அய்னி அக்பரி என்றும் தங்களது சுய சரிதையை எழுதியிருக்கிறார்கள். வரலற்றை திரித்து எழுதிய செய்திகள் எல்லாம் நம் நாட்டில் சர்ச்சைக்குறிய செய்திகள் தான். அதுவும் தவிர, நான் உங்களிடம் வந்து, முந்தா நாள் எனக்கு குட் மார்னிங் சொன்னிங்கள்ள அப்ப சொல்ல மறந்துட்டேன் இப்ப சொல்றேன், குட்மார்னிங் என்று சொன்னால் அது நகைப்புக்குறியதாகி விடும்- அது போலவே பாபர் இடித்திருந்தால் பாபர் காலத்திலேயே கேட்டிருக்க வேண்டும் அல்லது இந்து மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட அக்பர் காலத்திலேயே கேட்டிருக்க வேண்டும்- சுதந்திர மதசார்பற்ற இந்தியாவில் 800 ஆண்டுகள் கழித்து கேட்டால் எப்படி ? இப்பொழுது முஸ்லீம்கள் எந்த இந்து சகோதரர்கள் வாழும் தெருவிலாவது போய் நாங்கள் எங்கள் அல்லாஹ்வை இந்த தெரு வழியாக தூக்கி கொண்டு வருவோமென்று சொல்கிறார்களா ? சரி போகட்டும்- ஒரு சிறு பையன் மிட்டாய் திருடிவிட்டால் கையை வெட்ட வேண்டுமா ? என்று கேட்கிறீர்கள், இந்த குழந்தைகள் முதலில் திருட ஆரம்பிப்பது வீட்டில் தான், பொய் சொல்ல ஆரம்பிப்பது பெற்றோர்களிடம் தான், இந்த திருட்டுக்கும் நான் எழுதிய திருட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்றாலும் சிறுவர்கள் செய்யும் திருட்டை திருட்டு அல்ல திருவியாடல் என்று கூறி திருவிழா எடுக்காமல் இருந்தால் சரி, என்ன சொல்றீங்க ? திருடியது சிறுவனாக இருந்தாலும் அது திருட்டுத்தான் சந்தேகமே இல்லை.. குறைந்தபட்சம் கண்டிக்கவாவது வேண்டும். நம்ம ஊராக இருந்தால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி விட வேண்டியது தான். எந்த நாட்டிலாவது திருடலாம், கற்பழிக்கலாம், கொலை செய்யலாம் என்ற சட்டம் இருக்கிறதா ? நிச்சயமாக கிடையாது ? திருடக்கூடாது, கற்பழிக்கக்கூடாது, கொலை செய்யக் கூடாது என்று தான் சட்டம் இருக்கும் ஆனால் ஒவ்வொரு குற்றத்திற்கும் கொடுக்கும் தண்டனையில் நாடுகளுக்கிடையில் வித்தியாசமிருக்கும்.. இல்லையா ? உதாரணமாக சவுதியில் திருடினால் கை வெட்டு, சிங்கப்பூரில் திருடினால் பிரம்பாடி, இந்தியாவில் திருடினால் சிறைவாசம் அல்லது அபாராதம் இப்படியாக மாறுபடுகிறது இல்லையா ? நான் என்ன கேட்கிறேன் என்றால் ஒரு இந்திய பிரஜை சிங்கப்பூரில் திருடி விட்டார் என்று வையுங்கள் அவரை எந்த நாட்டு விதி முறைப்படி தண்டிக்க வேண்டும் ? இந்திய சட்டப்படியா ? சிங்கப்பூர் சட்டப்படியா ? நிச்சயமாக சிங்கப்பூர் சட்டப்படி தான்.. இல்லையா ? அது போல் சவுதியில் பெண்கள் தங்களை மூடிக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது இது எந்த மத கருத்துக்கும் எதிரானதும் அல்ல, அப்ப நீங்க சவுதிக்கு போனால் மூடிட்டு போக வேண்டியாது தானே ? இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் சில நாடுகளில் தலை துணி அணியக் கூடாது என்று சட்டம் வந்திருக்கிறது, இது அந்த நாட்டுக்கு உள்ள தனி சட்டம் தான் என்றாலும் கூட ஆனால் அது மதங்கள் வலியுறுத்துவதற்கு எதிரானதாக அமைந்திருக்கிறது. தலை துண்டு விரும்பி அணிபவர்களை அணிய கூடாது என்று வற்புறுத்துவதை பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன ? விளக்குங்கள்.. மதங்களை மனிதன் தான் தோற்றுவித்ததாக நீங்கள் சொல்கிறீர்கள் அது உங்கள் தனிப்பட்ட கருத்து தான், எந்த மதத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் நீங்கள் சொல்வது போல் நினைப்பதில்லை அது இறைவன் ஏற்படுத்திய மதமாக நம்புகிறார்கள்- முஸ்லீம்களை பொறுத்தவரையும் அப்படித் தான் நம்புகிறார்கள்- அதுவும் இஸ்லாத்தை பொறுத்தவரை சொல்ல வேண்டுமென்றால் உதாரணமாக ரமலான் மாதத்தில் நோன்பு பிடிக்கிறார்கள் என்று வையுங்கள்- மணிக் கணக்கு எல்லாம் இருக்கிறது நோன்பு திறக்கும் நேரத்தில் பள்ளிவாசலில் பார்த்தீர்கள் என்றால் ஒரு பரபரப்பு இருக்கும் காரணம் குறிப்பிட்ட நேரத்தில் நோன்பு திறந்தே தீர வேண்டும் என்பது தான்- உலகத்தில் எந்த மூலையில் பார்த்தாலும் முஸ்லீம்கள் இப்படி தான் நடந்து கொள்வார்கள் அவ்வளவு கட்டு கோப்பாக ஓர் அணியாக சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அப்படியே வாழ விட்டால் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது யாரையும் சீண்ட மாட்டோம் நாங்கள் ஒரு கூட்டம் போட்டால் சாராய வாடை வீசாது. காதடைக்கிற சங்கீத சத்தங்கள் இருக்காது.மொத்தத்தில் அடுத்தவங்களுக்கு எந்த வகையிலும் இடைஞ்சல் கிடையாது. அவ்வளவு தான். எங்கள் ஊரில் எல்லாம் ஏழை வீடானாலும் சரி பணக்காரர்கள் வீடானாலும் சரி ஒரு வீட்டில் விவாகரத்தான பெண்ணும் திருமண வயதை அடைந்து விட்ட பெண்ணும் இருந்தால் இரண்டு பேரில் இஸ்லாத்தின் அடிப்படையில் முதலில் விவாகரத்தான பெண்ணுக்கு தான் மாப்பிள்ளை தேடுகிறார்கள். கட்டிக்கிட்டு வாழு என்பது தான் வாழ்க்கை கட்டிக்கிட்டு அழு என்பதல்ல. ரொம்ப படித்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் தான் அதிகம் விவாகரத்தை தேடி விரைகிறார்கள்- நாங்கள் வாரா வாரம் வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் சொல்லிக் கொடுத்து விடுவோம்- விவாகரத்து என்பது கடைசி கட்டம் தான் என்று- சேர்ந்து சந்தோஷமாக வாழ வழியே இல்லை என்ற நிலையில் தான் விவாகரத்து தேவைப்படுகிறது- மற்றப்படி எல்லோரும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்- யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்- குழப்பவாதி கொலைகாரனை விட கொடியவன் என்று எங்கள் வேதம் சொல்கிறது. பித்தன் அவர்களே எனக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் நிறையவே இருக்கிறது, ஆனால் அது எந்த வகையிலும் நீங்கள் நண்பர் இஸ்மாயில் என்று எழுதியிருந்தீர்களே அந்த நிலையில் மாற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோமாக..

வஸ்ஸலாம்..

நட்புடன்

முஹம்மது இஸ்மாயில்


Series Navigation