ஓர் பரி ….

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

ஷம்மி முத்துவேல்சதுரித்த நிலமொன்றில்
நின்றிருந்தது….
அப்புரவி …
அழகாய் கண்களை விழித்து
உலகை வெறித்து பார்த்துக்கொண்டு

முழுதும் நகைகளை பூட்டி
கடிவாளங்களுக்கு மத்தியிலும்
சிரித்து..
பற்களை மட்டும் காண்பித்து

ஏனோ?
கனைப்பு சப்தம் மட்டும்
கேட்பதாய் இல்லை …

பின்னங்கால்களை மெல்ல உயர்த்தி
ஓட பார்த்ததோ?
தளைப்பூட்டிய கால்கள்
பூமிக்குள் வேரோடிப்போய் ….

உயிர்ப்பை தொலைத்து
வான்நோக்கி உயர்ந்து
நின்றது
அந்த வெங்கலப்புரவி ..
சுமார் 15 அடி உயரத்தில் ,

அலங்காரமாய் …
அடிமையாய் …

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்