ஒவ்வாமை

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

இளைய அப்துல்லாஹ்


ஒவ்வொரு பொழுதும்
குனிந்து குனிந்து எழும்புகிறாய்.
என் தளங்களை மீறிய தவிர்ப்புகளாய் நீ!

என் அழகிய கால்களில்
எப்பொழுதும் போதை காண்கிறாய்.
கால்களை அகட்டி வைத்திருக்காத பொழுதுகளிலும்ஸ

உன் தொடுதல்கள் கூட
ஒரு சிராய்ப்பை ஏற்படுத்தும் சில வேளை
முரடனென்று உன்னை நீ ஒப்புக்கொள்ளாமல்
இருப்பதற்கே விரும்புகிறாய்.
ஒரு பார்வை ஒரு மூச்சு

உன்னிடம் பயம் கொள்ளும்படியே
வேண்டி நிற்கிறாய்

ஒரு புரிதலுக்குள் உன்னால் வரவொண்ணாதபடிக்கு
உனது ஏதோ ஒன்றுக்கு குறுக்கால் நிற்கிறாய்..

நீ எப்பொழுதும் கேள்வியாகவே இருக்கிறாய்
என்னில் உதிக்கும் விடைகளை
விரும்பாத ஒரு ஆணாக.

15.12.2004

இளைய அப்துல்லாஹ்

Series Navigation