This entry is in the series 20070524_Issue

வீ.அ.மணிமொழி


இருள்…
மீண்டும் இருள்…
சுற்றிச் சூழ்ந்து கொண்டது

தடித்த வேர்களும்
முள் படர்ந்த விழுதுகளும்
உடலை நெறித்து
முறுக்குகின்றன
வடுக்கள் பதிக்காமலே…

மௌனங்கள் நிரம்பிய
நிஜமில்லா
அதன் மென்மை
என் இரகசியங்களை
பொறுக்கிக் கொண்டு
செல்கின்றது…
திரும்பி பார்க்காமலே…


வீ.அ.மணிமொழி

moli143@yahoo.com

Series Navigation