ஒருசொல் உயிரில்….

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

வேதா


வானம் பொய்க்கலாம், தவறில்லை….
என்
மானம் பொய்த்ததோ ?

கவலை புரியாத
காட்டாற்று வெளிளமாய்,
கழுத்தறுப்பாய்,
தாமதித்தே வரும்
தர்மசங்கடமான தினங்கள்……

ஒவ்வொரு தடவையும்
தீக்குளிக்கிறேன்….
ஒருமுறையாவது நம்பிவிடமாட்டாயா ?

என்
கன்னித்தன்மையிலும், கழுத்தறுப்பிலும்,
கட்டியிருக்கும் குடும்ப கவுரவம்…

உடலும் மனமும்
ஒத்துழைக்க மறுக்கும்
ஓங்காரத் தாண்டவம்!
உனக்கெங்கே புரியப்போகிறது ?
ஒன்றுமே அறியாத
குழந்தை நான் என்று!!

எங்கிருந்தோ ஒரு ஊதல் ஒலி,
என்
மரண ஒலியாக மாற்றிக்கொள்ளட்டுமா ?
மன்னிப்பே இருக்காது உனக்கு….

என் மனதில்
மூடி வைத்த கர்ப்பம்
கடைசிவரை கூடவே வரும்
தண்டவாளம் போல்…

‘சேர்ந்திருப்போமோ ? ‘ சந்தேகம் உனக்கு…
கலந்தேஇருப்பது பற்றி
சந்தோஷம்தான் எனக்கு…

கரம் ஒன்று
அனிச்சையாய் பிடித்திழுக்குது
கன்றுக்குட்டி கயிறைமட்டும்!

ரயிலின் ஊதல் கரையக் கரைய,
தண்டவாளம் வரை வந்து
திரும்பி நடக்குது
என் மனசு மட்டும்!

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா