ஏனோ ….
வசீகர் நாகராஜன்

நினைத்த போதெல்லாம் என்னுடன்
தெருமுனைத் தேநீர் பருகிய
எனக்கு அசைவம் ஆகாதென்று
வீட்டில் சமைப்பதே தவிர்த்த
இரவு நிலவு வெளிச்சத்தில்
தன் உள்ளக்கனவு கூறிய
என் தங்கை திருமண வேலைகள்
தன் தலையில் ஏற்றுக்கொண்ட
புதிதாய் தான் கண்ட திரைப்படம்
அலசி ஆராய்ந்து விமர்சித்த
நள்ளிரவு தூக்கம் கலைத்து
பிறந்த நாளில் வாழ்த்திய
காயம் பட்டு மருத்துவமனையில் நானிருக்க
தாயாய் தந்தையாய் பார்த்திட்ட
போன மாதம் திருமணமான
என் அறை நண்பன்
சொல்கிறான் இப்பொழுதெல்லாம் ….
‘வீட்டில் கேட்டுவிட்டு சொல்கிறேன் ‘
வசீகர் நாகராஜன்
vasikar@yahoo.com
About வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)
வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)
View all 15 articles →