எல்லைகளின் எல்லையில்
திலகபாமா,சிவகாசி

மிதக்கும் வர்ணங்கள்
வெல்வெட்டில் சிரிக்க
காற்றில் ஆடும் சிறகுதன்னோடு
இல்லாத எல்லைகளுடன் பறந்து வந்த
புஷ்பக விமான பட்டுப் பூச்சி
எதிர்கால வித்தை
விரிந்த வானம் விட்டு
முட்டைதனின் ஓட்டுகளின்
எல்லைக்குள் புதைக்க
நெளியும் புழுக்கள்
வாய்த்த வறையரைக்குள்
ஊறும் புழுக்கள்
வரையும் அடுத்த எல்லைதனை
கூடாய் தனை மூடி
தவமாய் இறுதியில் பிய்த்தெறியும்
எல்லைகளை சிறகுகளோடு
மாறி மாறி வந்து போன வாழ்வு
மிஞ்சியது அறுந்த பட்டுக் கூடு
தறியில் அடிபட்டு
தாவணியாகி மின்னும் அவள் தோளில்