‘எல்லாமே கூற்று! ‘

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

கரு. திருவரசு


மணக்கும் குழலில் மலர்செருகும் போதென்
மனத்தையும் சேர்த்தெடுத்து வாகாய்ச் செருகினையோ!

நெற்றிக்குக் கூர்வேல் நிழல்காட்டும் பொட்டிட்ட
தெற்றுக்கோ! நெஞ்சில் எடுத்தெறிய ஏற்பாடோ!

ஓரவிழிப் பார்வை உணர்த்திடுவ தென்னோ!என்
வீரத்தைச் சாய்த்துநீ வெற்றிபெறும் முற்றுகையோ!

பூவென்ன ? கன்னப் பொலிவின்முன் மாவென்ன ?
வாவுண்ண என்றழையா வண்ணஇதழ்ச் சீரென்ன ?

மூக்கின் நிமிர்ச்சியுடன் மோதிநிற்கும் நல்லிளமைத்
தேக்க உடல்காட்டித் தாக்கும் வகையென்ன ?

ஆடையணி மீன்களாய் ஆங்கே முகம் நிலவாய்க்
கூடிவரும் எல்லாமே கூற்று!

thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு