என் அழகும் மாறும்

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

மாலதி


—-

முழுப் பெரு வெளி வழியே
மின்னஞ்சல் செய்தியில் உனக்குத்
தெரிவித்தேன்
முடிந்த முடிவாக உன்னை நான்
மறக்கத் தயார் என்று.
அலங்கார ஆடியில் என் முகம்
மாசும் மருவுமாய் அழுக்காய்த்
தெரிந்தது.
திரும்பியமர்ந்தபின் உன்
அழைப்பு வந்தது குரலால் மீட்டி.
உன் கசிந்த கரிசனம் உருகின
நிமிடம் கல்கண்டு கரைந்த
இதயம் பெருமையுடன்
கணினித் திரையின் அணைந்த
கருமையில் உருவத்தைப்
பார்த்துக் கொண்டது.
மிக அழகாய் மாறியிருந்தேன்
நான்

1-11-2004

மாலதி

—-
malti74@yahoo.com

Series Navigation

author

மாலதி

மாலதி

Similar Posts