ஊர்விலக்கு கண்டனத்திற்குரியது

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

மன்சூர் ஹல்லாஜ்


கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் மீது அவரது ஊரைச் சார்ந்த ஜமாத் ஊர்விலக்கு நடவடிக்கை எடுத்தது கடும் கண்டனத்திற்கும் ஆட்சேபத்திற்கும் உரியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கருத்தை கருத்தால் மட்டுமே எதிர் கொள்ளவேண்டும்.உலகம் முழுவதிலும் முஸ்லிம்களை பயங்கரவாதிகள்,சகிப்புத் தன்மையற்றவர்கள் என்ற அவச் சொற்கள் பிறரால் பயன்படுத்தப்படும் இந்த சூழலில் அதை உறுதி செய்வனவாகவே இதுபோன்ற எதிர்நடவடிக்கைகள் அமையும். இது போன்ற நடவடிக்கைகளால் எந்தப்பயனும் இல்லை. மேலும் இது மனிதாபிமானமற்ற சட்டவிரோதமான நடவடிக்கையுமாகும். எனவே எனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கே.எஸ்.முகம்மத் ஷூஐப், தூத்துக்குடி


கலைஞர்களும்,எழுத்தாளர்களும் ஆய்வாளர் ஹெச்.ஜி.ரசூல் மீது விதிக்கப்பட்டுள்ள ஊர்விலக்கம் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். எனினும் இது தமிழகம் எங்கும் பரவலாக நிகழ வேண்டும் என்பது என் விருப்பம்.மத அடிப்படைவாதத்தின் கோரப்பற்களுக்கு ஒருமுறை அடிபணிந்தால் அது நம்மை என்றென்றும் காவு கொள்ளும் எனும் உயிர்மையின் தலையங்க வரிகளிலுள்ள உண்மையையும் நியாயத்தையும் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கலை இலக்கியப் படைப்பாளியும் ரசிகரும் உணர்ந்து செயல்படவே வேண்டுகிறேன்

திகசி,நெல்லை


ஹெச்.ஜி.ரசூல் என்ன குற்றமிழைத்து விட்டார்.மைலாஞ்சியில் தொடங்கியது இன்னும் தீரப்பிரச்சினையாகவே உள்ளது. அவருடைய குடும்பம் அலைகழிக்கப்படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.தமிழக வாசகர்கள் ஒருமித்தக் குரலாய் ரசூலுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தயாராய் உள்ளோம்.படைப்பாளி பாதிக்கப் படுவது கண்டு தமிழ் வாசகர் உலகம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.

ஜெயபால்,திருப்பூர்
நன்றி: உயிர்மை மாத இதழ், அக்டோபர் 2007


mansurumma@yahoo.co.in

Series Navigation

மன்சூர்ஹல்லாஜ்

மன்சூர்ஹல்லாஜ்