உலகமே

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

விசிதா


உலகமே அழியும் போதும் அன்றும்
உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக…
நேற்று வெளியான படத்தில்
நடித்த நடிகையின் பேட்டி
தொலைக்காட்சிகளில் கமல் படம்,ரஜனி படம்
வேண்டுமன்றோ தமிழருக்கு

இழவு வீட்டிலும் வேண்டும் சினிமா
தொடர்ந்து அது அலற வேண்டும்
இல்லையெனில் அர்த்தமில்லை
மரணத்திற்கு

பிரிய நடிக, நடிகையர் நடித்த
திரைப்பட்ங்களின் சிடி, டிவிடி அல்லது விடியோ
தினம் பார்க்கும் தொலைக் காட்சித்
தொடரின் பகுதிகளின்
விடியோவுடன்
சேர்த்து உடலை
புதைக்கவோ எரிக்கவோ
செய்யும் நாள்
இல்லை
வெகு தொலைவில்

வாழ்க தமிழர்
வளர்க அவர்தம்
கலைப்பற்று

wichita.tamil@gmail.com

Series Navigation