This entry is in the series 20101205_Issue

கோநா



சாலையோரம் சைக்கிளை நிறுத்தி
வண்ண வண்ண பலூன்களை
வாய்வலிக்க ஊதி, ஊதி
கட்டி வைத்துக் கொண்டிருந்தவனை
மோதிநசுக்கிவிட்டு
இழுத்துச் செல்கிறது
போதையேறிய குடிகாரக்கார்.

அதிர்ச்சியிலேயே விடுபட்ட
இருபது கிராம் எடை
இரத்த நிறத்தில்
இருதய உருவில்
சில கணங்கள்
தெருவில் அலைந்துவிட்டு
தெற்கே சிறிது தூரமோடி
தயங்கியபடியெழுந்து
அசைந்தசைந்து
மேலே செல்கிறது.
இறுதி மூச்சடைத்த பலூனாய்.

Series Navigation