உன் குற்றம்
புதியமாதவி,மும்பை.

———–
நீ-
காதலிக்காமல்
கல்யாணம் செய்தாயே
அது குற்றமில்லை.
நீ-
காதலிக்காமலேயே
காதலிக்கப்படாமலேயே
கருசுமந்தாயே
அதுவும் குற்றமில்லை..
நீ-
கடைசிவரை
காதல் அறியாமலேயே
விதவை ஆனாயே..
அது..
அதுமட்டும்தான்
குற்றம்.
————–
puthiyamaadhavi@hotmail.com