உடைந்த பொம்மைகள்

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

மணி அய்யர்


கால், கை கண் இழந்து

உயிர் துறந்த விளையாட்டு

பொம்மைகளின் மயானத்தில்

பணம் போட்ட தந்தையின் குரல்

மியூட் செய்யப்படுவது

ஆச்சரியமில்லைதான்..

என் பயமெல்லாம்

உடைந்த பொம்மைகளோடு

நானும் ஒரு ஓரத்தில் என்றாவது

ஓதுங்கிவிடக்கூடாதென்பதுதான்.

அப்படியென்றும் ஆகாது

என்கிறாள் அம்மா

எனக்கு விளையாடக்கொடுத்த

உடையாத மரப்பாச்சி பொம்மையோடு.

ஓரமாக உட்கார்ந்துகொண்டு..

மெட்ரோ குழந்தைகள்

காதல் முடிந்து

பேசி முடிந்து

சர்ச்சை முடிந்து

கல்யாணம் முடிந்து

முடிந்து

முடிந்து

இனி பொதுவாய்

பேசுவதற்கு எதுவுமில்லை

குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர.

MRP – குழந்தைகள்

கீழே விழுந்து

மரணித்தான் அந்த

ஸ்பைடர் மேன்.

திட்ட வருகிற

வார்த்தை எதிர்கொள்ளலில்

பயந்து கேட்டான்

“எவ்வளவு விலைம்மா ? “

பய்ந்துபோனோம் நாங்கள்.


Mani kr
netwealthcreator@gmail.com

Series Navigation

மணி அய்யர்

மணி அய்யர்