ஈழத்தமிழரின் அனுதாபி சுஜாதா

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

லெ. முருகபூபதி


2008 தமிழுக்கு நல்லகாலம்||- எனச்சொன்னவர் அக்காலத்தைப்பாராமல்

கண்களை மூடிக்கொண்டார்.

அப்பொழுது சென்னையில் வெய்யில் எரித்துக்கொண்டிருந்தது. மயிலாப்பூர் இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இலக்கியச்சிந்தனையின் விழா.

ஜானகிராமனின் நளபாகம் நாவலுக்கு பரிசு வழங்குகிறார்கள் என அறிந்து சென்றிருந்தேன்.

அச்சமயம் ஜானகிராமன் உயிரோடில்லை. அவரது மனைவிதான் பரிசுவாங்க வந்திருந்தார்கள். மேடையில் சுஜாதா,நீலபத்மநாபன் உட்பட பலர் பேசவிருந்தனர்.

சபையில் கோமல்சுவாமிநாதன், சிற்பி பாலசுப்பிரமணியம், அறந்தை நாராயணன், திரைப்பட நடிகர் சகஸ்ரநாமம,; ஷசிட்டி| சுந்தரராஜன், வானதி திருநாவுக்கரசு உட்பட ஏராளமான கலை,இலக்கிய ஆர்வலர்கள்.

குமுதத்தில் சுஜாதாவின் எழுத்துக்களைப் படித்திருந்த போதிலும் தொடர்ந்து படிப்பதற்கு ஆர்வமூட்டாத எழுத்துக்களாக என்னை சோர்வடையச்செய்திருந்தது.

பாலம் என்ற கதை மாத்திரம் நீண்ட நாட்கள் மனதில் தங்கி நின்றது.

நான் தீவிரமாக வாசிக்கத்தொடங்கிய 1970 காலப்பகுதியில், சுஜாதாவின் பெரும்பாலான கதைகள் மர்மக்கதைகளாக இருந்ததனாலோ என்னவோ பின்னர் ஆர்வம் குறைந்துவிட்டது.

ஓருநாள் இந்திராபார்த்தசாரதியின் தந்திரபூமி நாவலைப்படித்தபொழுது அந்நாவலுக்கு சுஜாதா எழுதியிருந்த முன்னுரை என்னைப்பெரிதும் கவர்ந்தது. அந்நாவலின் நாயகன் கஸ்தூரியின் தோல்வியை ஜலியசீஸரின் வீழ்ச்சிக்கு ஒப்பானது என சுஜாதா எழுதியிருந்தார்.

பின்னர் மீண்டும் அவரது எழுத்துக்கள் மீது ஆர்வம் தோன்றியது.

சுஜாதாவின் பாணியில் இலங்கையில் எழுத முயன்ற ஒரு எழுத்தாளரும் எனது இனிய நண்பர்தான்.

சிறிது காலம் அவர் ஏதோ ஒரு புனைபெயரில் மறைந்து எழுதிவிட்டு பின்னர் விட்டுவிட்டார்.

இப்படி சுஜாதாவின் பாதிப்புக்குள்ளான பல எழுத்தாளர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் இருக்கிறார்கள்.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டபின்னர் சுஜாதா எழுதிய இலட்சம் புத்தகங்கள் என்ற சிறுகதை வாசகர் மத்தியில் மட்டுமன்றி எழுத்தாளர் வட்டாரத்திலும் விதந்து பேசப்பட்டது.

சுஜாதா பெரும்பாலான எழுத்தாளர்களைப்போன்று புத்தகங்களை பெரிதும் நேசித்தவர்.

யாழ். நூலகம் எரிக்கப்பட்டு இரண்டு நாட்களில் யாழ்ப்பாணம்சென்று மல்லிகை ஜீவாவுடன் நேரில்சென்று பார்த்து கொதிப்படைந்திருந்த என்னை சுஜாதாவின் கதை சிலிர்க்கவைத்தது.

கேள்வி ஞானத்தில் அவர் எழுதிய அக்கதை அற்புதமாக படைக்கப்பட்டிருந்தது.

இலங்கை வரலாற்றிலேயே கறைபடிந்த காட்சியாகிப்போன யாழ் பொது நூலக எரிப்பின் பின்னர்தான் சுஜாதா என்ற தமிழக எழுத்தாளருக்கு இலங்கைத்தமிழர்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் ஈழத்து இலக்கியம் குறித்த அக்கறையும் தோன்றியிருக்கவேண்டுமென்று நம்புகிறேன்.

1984 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம்தான் நான் மேலே குறிப்பிட்ட சென்னை இலக்கியச்சிந்தனை விழா நடந்தது.

சுஜாதா சுவாரஸ்யமாகப் பேசினார். இடைக்கிடை – ‘கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொள்கிறேன்|’- எனச்சொல்லிச்சொல்லி அதற்கு அனுமதியுங்கள் என்றும் கேட்டு சபையோரை சிரிக்கவைத்தார்.

விழா முடிந்ததும் மேடைக்குச்சென்று அவருடன் உரையாடினேன்.

ஓரு பெண்மணி ஐந்து ரூபா நாணயத்தாளை நீட்டி அதில் அவரது ஓட்டோகிரா·ப் பெற்றுக்கொண்டார்.

அக்காலப்பகுதியிலேயே ஒரு தமிழ் சினிமா நட்சத்திரத்துக்கு கிடைக்கும் அந்தஸ்தினை அவரது வாசகர்கள் அவருக்கு கொடுக்கத்தொடங்கிவிட்டனர் என்பதற்கு இந்தக்காட்சி ஒருபதச்சோறு.

அன்றைய பேச்சில் எங்கள் பேராசிரியர் கா. சு¢வத்தமபி அவர்களையும் மேற்கோள் காட்டி சில கருத்துக்களை சுஜாதா சொன்னார்.

இலங்கையிலிருந்து வந்திருக்கிறேன் எனச்சொன்னதும், அவர் ஆர்வத்துடன் உரையாடினார். பெங்க@ர் வீட்டு முகவரியையும் தொலைபேசி இலக்கத்தையும் தானே எழுதிக்கொடுத்தார். அப்பொழுது அவரிடம் விசிட்டிங் கார்ட் இல்லாத காலம் என நினைக்கின்றேன்.

இலட்சம் புத்தகங்கள் கதையை எப்படி எழுதத்தோன்றியது? தகவல்களை எவ்வாறு பெற்றீர்கள் எனக்கேட்டேன்.

தாம் சந்தித்த ஒரு இலங்கைத்தமிழ்ப்பிரஜையூடாகவே தகவல்களை அறிந்து எழுதியதாகவும் இலங்கைத்தமிழ்மக்கள் மீது தனக்கு மிகுந்த அனுதாபம் இருப்பதாகவும் சொன்னார்.

நாமறிந்தவரையில் சுஜாதாவைப்போன்று சகல ;துறைகளும் சார்ந்த எழுத்துக்களை படித்த, எழுதிய தமிழ் எழுத்தாளர் வேறு எவரும் இல்லை என்று கூறலாம்.

நவீன தமிழ் இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், நாடகம், சினிமா, ஆன்மீகம், விஞ்ஞானம், கணனி.. . . . . இப்படி பல்வேறுதுறைகளிலும் எழுதியவர்.

சிறீரங்கத்தில் படிக்கின்ற காலத்தில் சமஸ்கிருதம் படிக்காமல் தமிழைப்படிக்க ஆர்வம்காட்டியவர்.

எழுத்திலே புதிய நடையை புகுத்தியவர். அதனால் இலக்கணச்சுத்தமின்றி எழுதுகிறார் என விமர்சகர்களினால் கடுமையாக விமர்சிக்கவும்பட்டவர்.

புன்னகைசெய்தான் என்பதை புன்னகைத்தான் என்றும் சவரம் செய்துகொண்டான் என்பதை சவரித்துக்கொண்டான் என்று எழுதுவதும் தமிழ்மொழிக்கு நீங்கள் செய்யும் துரோகம் அல்லவா எனக்கேட்டபொழுது,

ஷஆழ்வார் செய்திருக்கிறார் சார். ஷ காண்கின்றனர்களும் கேடகின்றனர்களும்| என்று எழுதி இருக்கார். காண்கின்றனர் என்பதே பன்மை. அப்புறம் ஷகள்| விகுதி சேர்த்திருக்கிறார். ||- என்று பதிலளித்தவர் சுஜாதா.( சுபமங்களா நேர்காணல்- 1991-நவம்பர்)

அவருக்கு கம்பராமாயணமும் தெரியும் கம்பியூட்டரும் அத்துப்படி.

ஆயிரம் தலைவாங்கிய ஆபூர்வ சிந்தாமணியும் படித்தார் ஆழ்வார் பாசுரங்களும் தெரிந்து வைத்திருந்தார்.

கணையாழி இலக்கியச்சிற்றேட்டின் ஆசிரியர்குழுவில் இருந்திருக்கிறார், குமுதம் ஜனரஞ்சக இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் பிரபல ஜனரஞ்சக தமிழ் வார இதழ் நடிகை கு~;புவுக்காக கவிதைப்போட்டி நடத்துவதாக அறிவித்தபொழுது, ‘யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுமி கழுத்தில் சயனைற் அணிந்துகொண்டு கையில் ஆயதம் ஏந்திப்போராடிக்கொண்டிருக்கும் பொழுது இங்கு நாம் நடிகை கு~;புவுக்கு கவிதைப்போட்டி நடத்திக்கொண்டிருக்கின்றோம்’ || எனக்காட்டமாக எழுதினார்.

அதே யாழ்ப்பாணத்தில் பிறந்து ஐரோப்பிய நாடொன்றுக்கு அகதியாக புலம்பெயர்ந்த ஒரு ஈழத்தமிழர் அங்கு வந்த நடிகை கு~;புவுக்கு தங்கச்செயின் அணிவித்தார்||- என்ற தகவலுடன் சுஜாதாவுக்குத்தெரியாத மற்றுமொரு பக்கம் என்ற தலைப்பில் லண்டனிலிருந்து வெளியான இதழொன்றில் ஒருகட்டுரையை பதிவுசெய்திருக்கின்றேன்.

ஈழத்துக்கவிஞர்களின் போர்க்காலக்கவிதைகளையும் விரும்பிப்படித்து சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவர் மேற்கோள் கட்டியுள்ளார்

பல வருடங்களுக்கு முன்னர் சென்னை மித்ர பதிப்பகம் வெளியிட்ட பனியும் பனையும் | கதைத்தொகுதியிலும் சுஜதா தமது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.

குறிப்பிட்டதொகுதி புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் புகலிட வாழ்வைச்சித்திரிக்கும் கதைகளைக்கொண்டது. அதில் இடம்பெற்ற எனது மழை| கதை தாயகத்தில் யுத்த சூழலில் பரிதவிக்கும் மனைவியையும் பிள்ளைகளையும் விட்டுவந்து வெளிநாட்டில் ஏக்கத்துடன் வாழும் ஒரு இளம் குடும்பஸ்தன், ஒரு வெள்ளை இன மாதுவிடம் உறவுகொள்ளச்சந்தர்பம் கிடைத்தும் ஊரிலிருக்கும் மனைவிக்கு துரோகம் செய்வதற்கு தயங்குகிறான்.

இந்த மழை கதையைப்பற்றி சிலாகித்து எழுதிய சுஜாதா, புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கு இப்படியும் ஒரு குற்றவுணர்வு இருக்கிறது என பதிவுசெய்திருந்தார்.

பல திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதி வசனமும் எழுதி புகழும்சம்பாதித்திருக்கும் சுஜாதா ஈழத்தமிழ்மக்களின் போராட்ட வாழ்வை சித்திரிக்க முயன்ற (? ) கன்னத்தில் முத்தமிட்டால் என்ற பாரதியின் பாடல்வரியிலமைந்த படத்திற்கும் திரைக்கதைவசனம் எழுதி விமர்சனத்திற்குள்ளானார்.

யாழ். சுப்பிரமணியம் பூங்கா பற்றி அறிந்துவைத்திருந்த சுஜாதா அதனை திரைக்கதையில் காண்பித்த இடம்தான் தவறானது. என்ற விமர்சனமும் எழுந்தது.

2004 இறுதியில் சுனாமி கடற்கோளினால் உயிரிழந்த ஈழத்தமிழ்ப்பிள்ளையைப்பற்றியும் அவர் ஒரு கதை எழுதியிருக்கின்றார்.

சுனாமி அசுரப்பேரலை அந்தப்பிள்ளையின் உயிரைவிழுங்கியபோது அப்பிள்ளையின் கரத்தில் சுஜாதாவின் புத்தகம்தான் இருந்திருக்கிறது.

சடலம் கண்டெடுக்கப்பட்டபொழுது கையிலே அந்தப்புத்தகத்தை கண்ட பெற்றோர்கள் இந்த நெகிழ்ச்சியான தகவலை சுஜாதாவுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்

இந்தத்துயரமான செய்தியினால் கலங்கிப்போன சுஜாதா மிகுந்த மன அழுத்தத்துடன் ஒரு சிறுகதையே எழுதி அவரது பிரிய வாசகிக்கு சமர்ப்;பித்து தமது கண்ணீர் அஞ்சலியை அக்கதைமூலம் செலுத்திக்கொண்டாராம்

இவ்வாறு ஈழத்தமிழ் மக்களிடம் ஆழ்ந்த அனுதாபம் கொண்டு விளங்கிய சுஜாதாவுக்கும் ஒருகட்டத்தில் சத்திய சோதனை வந்துதானிருக்கிறது.

2005 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வாய்மையின்வெற்றி’ – ராஜிவ்காந்தி படுகொலை- புலனாய்வு – என்ற டி.ஆர்.கார்த்திகேயன்- ராதா வினோத்ராஜ_ ஆகிய இருவரும் இணைந்து எழுதிய (தமிழில்- எஸ். சுந்திரமெளலி) பரபரப்பான நூலுக்கு சுஜாதா வாழ்த்துரை வழங்கியுள்ளார்

கார்த்திகேயன் சுஜாதாவின் நீண்டநாள் நண்பர். எழுபதுகளில் பெங்க@ரில் குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக கார்த்திகேயன் பணியாற்றிய காலத்திலேயே இருவருக்குமிடையே நட்பு மலர்ந்திருக்கிறது.

கார்த்திகேயனின் திறமைகளை அருகிலிருந்தே கவனித்து பல நாவல்களையும் சிறுகதைகளையும் நேரடி அனுபவம் சார்ந்து எழுதியிருப்பதாக, சுஜாதா இந்த வாழ்த்துரையில் சொல்கின்றார்.

சிறீபெரும்புதூரைக்கடந்து செல்லும்போதெல்லாம் தமக்கு ஏற்படும் அதிர்ச்சிகலந்த நெருடலையும் குறிப்பிடுகிறார்

மசாலாத்தனமான தமிழ்சினிமா உலகம் சுஜாதாவை உள்ளிழுத்திருந்தபோதிலும் தேர்ந்த. இலக்கியவாதியாகவும் தன்னை தக்கவைத்துக்கொண்டவர்.

ஈழத்து இலக்கியப்படைப்புகளிலும் அவருக்கு ஆர்வமும் அக்கறையும் இருந்தது. ஒருசமயம் மல்லிகை ஆண்டுமலர் ஒன்றையும் அவர்விரிவாக விமர்சித்து தமிழக ஜனரஞ்சக ஏட்டில் எழுதியிருக்கிறார்.

திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற சுஜதாவின் நூல் பலபதிப்புகளைக் கண்டது. பல இளம்தலைமுறையினரை திரைப்பட, குறும்படத்துறைக்குள் ஆர்வமுடன் நுழையத்தூண்டியது.

‘நூறு வரு~த்துக்குப்பிறகு தமிழே இருக்குமான்னு எனக்குச்சந்தேகமாக இருக்கு’ | என்று 1991 இல் சொல்லியிருக்கும் சுஜாதா, இந்த ஆண்டு (2008) தொடக்கத்தில் டைம்ஸ் ஒ·ப் இந்தியா நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க டைம்ஸ் இன்று- என்னும் தரமான கதைகள்,கவிதைகள் கட்டுரைகள் கொண்ட சிறப்பான இலக்கியமலரை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

‘இந்தப்புத்தகத்தைக்கண்டு இம்மாதிரியான இலக்கிய முயற்சிகளை வேறு அகில இந்திய நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்று நம்புகிறேன். தமிழுக்கு 2008 ஒரு நல்ல காலம்.|| -என்று தமது கருத்தைப்பதிவுசெய்துள்ளார்.

1991 இற்கும் 2008 இற்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டுமல்ல அதற்கு முன்பும் அவர் பல சாதனைகளை தமிழில் நிகழ்த்தியுள்ளார்.

அவர்1991 இல் சொன்னது போன்று நுர்று வரு~ங்களுக்குப்பின்னர் தமிழ் இருக்குமா என்பதற்கு எம்மால் இப்பொழுது சரியாக பதில் சொல்லமுடியாமல் போனாலும் 2008 தமிழுக்கு ஒரு நல்ல காலம் என்று மறைவதற்கு 60 நாட்களுக்கு முன்னர் சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறார் ஏதோ நம்பிக்கையோடு.

அந்த நம்பிக்கையோடு நுர்றுவரு~த்திற்குப்பின்பும் தமிழ் வாழும் என்ற நம்பிக்கையுடன் அயராமல் எழுதிய எழுத்துக்கலைஞனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

ஏனென்றால் நம்பிக்கைதான் வாழ்க்கை.


uthayam@optusnet.com.au

Series Navigation

லெ. முருகபூபதி

லெ. முருகபூபதி