இலை போட்டாச்சு ! -20 அடை – இரண்டாம் வகை

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

பாரதி மகேந்திரன்



தேவைப்படும் பொருள்கள்

பச்சரிசி – 250 கிராம்
புழுங்கல் அரிசி – 250 கிராம்
கொண்டைக்கடலை – 250 கிராம்
பாசிப் பயறு – 250 கிராம்
மைசூர்ப்பருப்பு – 250 கிராம்
தோல் நீக்காத உளுந்து – 100 கிராம்
சோயா பீன்ஸ் – 100 கிராம்
மிளகாய் வற்றல் – 15
கறிவேப்பிலை – 4 / 5 ஆர்க்குகள்
கொத்துமல்லித் தழை – 4, 5 கைப்பிடிகள் (அரிந்தது)
பெருங்காயப் பொடி – 2 1/2 மே.க.
உப்பு – 3 மே.க. அல்லது தேவைப்படி
தோல் நீக்கிய இஞ்சி – 2 மே. க. (பொடிப்பொடியாக அரிந்தது)
சின்ன வெங்காயம் – 200 கிரம் (பொடிப்பொடியாக அரிந்தது)
நல்ல எண்ணெய்

அரிசிகளைத் தனித் தனியாகக் களைந்து தண்ணீரில் ஊற வைக்கவும். பருப்பு, பயறு வகைகளையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்துக் களைந்து ஊற வைக்கவும். முதல் வகை அடைக்குச் சொன்னது போலவே அரிசிகளை மிளகாய் வற்றலுடன் கரகரப்பாக மின் அமியில் அரைத்துக் கொள்ளவும். பின்ன்ர், பருப்புகளையும் அதே போல் அளவாய் நீர் ஊற்றிக் கரகரப்பாக அரைக்கவும்.

இவ்வாறு அரைத்த மாவுகளை, அவற்றுடன் அரிந்த வெங்காயம், இஞ்சி, பெருங்காயப் பொடி, உப்புப் பொடி, கொத்து மல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அடைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வார்க்கவும். விருப்பப்பட்டவர்கள் சிறிதளவு நெய்யும் சேர்க்கலாம்.

தேங்காய்ச் சட்டினி, மிளகாய்ப்பொடி, அவியல், வெல்லம், தேன் ஆகியவற்றை அவரவர் சுவைக்கு ஏற்பத் தொட்டுக்கொள்ளலாம். தோலுடன் கூடிய முழுப்பருப்புகளைப் பயன் படுத்துவதால், இந்த அடை மிகுந்த ச்த்து நிறைந்ததாகும். (தைராய்டு உடற்கோளாறு உள்ளவர்கள் சோயா பீன்ஸைத் தவிர்க்க வேண்டும்.)

mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்