இரு கணினிக் கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

அனந்த்


கணினிப் பிரபஞ்சம்

நெருப்பில்லாமல் வேகவைக்கும் சுடுபெட்டி*
கம்பித்தொடர்பில்லாமல் கருவிகளை இயக்கும் கையடக்கக் கருவி
ஓட்டுநர் இல்லாமல் ஓடும் ஊர்திகள்
கொட்டையில்லாத கொய்யாப்பழம்
கூடாமலே பிறக்கும் குழந்தை..
இன்னும், இன்னும்…..
இறுதியில்..
கணினி இல்லாமல் சுழலும் உலகம் ?
ஐயோ! அதைக் கனவில் நினைத்தால் கூட மகாப் பாவம்!

*microwave


கணினியும் காதலியும்

நித்தம் கணினித் திரையினில்நின் நீலக் கருங்கண் நிலைத்திருக்கச்
சத்தம் எதுவும் எழுப்பாமல் சார்ந்துன் கண்ணைச் சட்டென்று
பொத்தும் பொழுதில் யாரிதென்று பொதுவாய்க் கேட்ட போதுமனம்
மெத்தக் கொடிய வாளெடுத்து வெட்டுப் படும்வே தனையுறுமே!

ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்