கே.பாலமுருகன், மலேசியா
இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிற்சி முகம்களோ அல்லது தன்முனைப்பு முகாம்களோ நடந்தால் அதில் நடக்கும் அபத்த கூத்துகள் பற்றி சொல்லவே வேண்டாம். தனியார் நிறுவனங்கள் தமிழ்ப்பள்ளிகளில் புகுந்து தன்முனைப்பு கொடுக்கிறேன் என்கிற பெயரில் ஏற்படுத்தும் கூத்துகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.
அம்மா அப்பாவின் தியாகங்களை உணர்த்துவதற்காக, அம்மா பாடல், சோகப் பாடல்களைப் போட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அழச் செய்து திருத்த வேண்டும் என்கிற மனோபாவத்துடன் அலைகிறார்கள். இதில் பல்கலைகழக மாணவர்களும் இதற்கு உடந்தையாக இருந்து பள்ளிக்குச் சென்று மாணவர்களை உளவியல் ரீதியில் பயமுறுத்துகிறார்கள்.
சரி அதை விட்டுத் தள்ளலாம். அதையும் கடந்து மேலும் ஒரு நடவடிக்கை இருக்கிறது. இதுதான் அபத்தத்தின் உச்சம். மாணவர்களுக்கு தைரியத்தை உண்டாக்க போகிறோம் என்கிற திட்டத்துடன், அவர்களை நடுகாட்டில் இருட்டில் தனியாக நடக்கவிட்டுப் பயிற்சி அளிக்கிறார்கள். தன்முனைப்பு முகாமை நடத்தும் அவர்களே இருளில் ஆங்காங்கே ஒளிந்து கொண்டு மாணவர்கள் தனிமையில் நடக்கும்போது பயமுறுத்தி உற்சாகமும் படுத்தவே செய்கிறார்கள். இதன் விளைவு என்ன தெரியுமா?
மாணவர்கள் அலறியடித்துக் கொண்டும் அழுது கொண்டும் ஓடுகிறார்கள். பயத்தில் விழி பிதுங்கி செய்வதறியாமல் மனம் துடிதுடிக்க தனக்குள்ளே அமிழ்ந்து போகிறார்கள். இருளைக் கண்டு அதைக் கடக்க முடியாமல் தவித்து அதன் விளிம்பில் நிற்கிறார்கள். இதுதான் அந்த நடவடிக்கையின் விளைவும் அதை நடத்துபவர்களுக்குக் கிடைத்த முதுகு சொறிதலும்.
இருளைக் கடந்து வருவதுதான் தைரியத்திற்கான அளவுகோலா? இருளில் தனியாக நடந்துவிட்டால் அவன் வீரனாகிவிடுவானா? என்ன ஒரு முட்டாள்தனமான புரிதல் இது? இருள் என்பது மிக அருகமையிலுள்ள ஒரு உண்மை. வெளிச்சம் என்பது நாம் ஒழுங்காக நடப்பதற்க்காகச் செய்யும் பாசாங்குத்தனம். ஒரு சுவாமிஜி சொல்லியிருக்கிறார். பாரதி இருளை குறைந்த வெளிச்சம் என்றுதான் சொல்லுகிறார். இருளை எப்படிப் பார்க்க வேண்டும் உணர வேண்டும் என்கிற சிறு பயிற்சிகூட இல்லாத இவர்களெல்லாம் எப்படி தமிழ்ப்பள்ளிகளுக்குள் நுழைகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
இப்பபடியே போனால், மாணவர்களெல்லாம் வீட்டிற்கு வெளியில் இருளில் படுத்து உறங்க ஆரம்பித்துவிடுவார்கள் தனது வீரத்தைக் காட்டுவதற்காக. வாழ்வில் அவர்கள் நிகழ்த்தி காட்ட வேண்டிய சாகசங்கள் எவ்வளவோ இருக்க, இருளுக்குள் நடந்து அழாமல் வருவதுதான் சாகசம் என்றால், எனக்குத் தலைச் சுற்றுகிறது. முதலில் இப்படி தன்முனைப்பு நடத்தி மாணவர்களின் உளவியலைச் சீரழிக்கும் இவர்களை 14 வருடம் காட்டில் வாழ்ந்து வர அனுப்பி வைக்கப்பட வேண்டும். புராணத்தில் எல்லாம் ஆ ஊ ன்னா காட்டுக்கு கிளம்பி விடுகிறார்களே. நடைமுறை உலகத்தில் வாழ்த் தெரியாதவர்கள் இவர்களும் புராண மனிதர்கள்தான் என்னைப் பொருத்தவரையில்.
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
http://bala-balamurugan.blogspot.com/
- ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு – கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 9
- அச்சமுண்டு அச்சமுண்டு- அமெரிக்காவில் வெள்ளித்திரையில்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பால்வீதி காலாக்ஸியின் அமைப்பும் உறுப்புகளும் (கட்டுரை: 60 பாகம் -2)
- இருளைக் கடப்பதுதான் தைரியமா?
- துயரம் ஒரு வரைபடம்
- ” புறநானூறு கூறும் வாழ்த்தியல் முறைகள்”
- ‘இலக்கிய உரையாடல்கள்’ – ஒரு அறிமுகம்.
- கடித விமர்சனம் – 5 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- திரைவிமர்சனம்- மாயாண்டி குடும்பத்தார்- கிராமத்திற்குச் சென்று நடித்த இயக்குனர்களின் கூட்டம்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.
- அறுபடும் மரணங்கள்….
- யுகமாயினியின் இலக்கியக் கூடல் – 3 ஆவது நிகழ்வு அழைப்பிதழ்
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு ஒரு கேள்வி?
- அக்னிக்கூத்து – நாடக அறிமுகம்
- Dear Editor,
- தமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி
- நிர்வாண நடனம்
- அறிதல்..
- மூன்று கவிதைகள்
- பாலாவை இழந்த கணங்களில்…
- நண்டு சொன்ன `பெரியவங்க` கதை
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதினொன்று
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- கருணை கொலை
- சுழற்பந்து
- அநாகரிகமான விவகாரம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று
- நினைவுகளின் தடத்தில் – (33)
- ஓரினசேர்க்கை
- தோற்றுப்போகும்வரைத்தான் காதல் கவிதைகள்
- அத்துமீறல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னை விலக்கி விடு – கவிதை -13 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -44 கடல் மங்கை
- வேத வனம் விருட்சம் – 41
- யாருக்கும் பொதுவான
- கவிதைகள்
- மூன்று கவிதைத் தொகுதிகள் ஒரு கண்ணோட்டம்
- அறிவியல் புனை கதை: எந்திரசாதி, சோலார் கோத்திரம்