இன்னொரு முகம்

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

மனஹரன், மலேசியா


இன்னொரு முகம் வேண்டும்

வாக்குறுதி கொடுத்து
வாடிக்கையாய் ஏமாற்றும்
வாய்களுக்கு
வாய்க்கரிசி போட….

கொடுக்க இயலாதபோது
இருப்பதையும்
சுயமரியாதை போர்வையில்
இழந்து நிற்கும்
கால்களை ‘றுத்திட…..

வெற்றுப்பேச்சு நாவுகளை
வேரறுத்து சாய்க்க
மண்வெட்டி ஏந்திட…….

எள்ளி நகையாடும்
ஈனத்துப்பிறவிகளின்
குரல்களுக்கு
குத்துவாள் நீட்டிட…..

கூறுபோட்டுப்பிரித்து
கும்மாளமிடும் கூட்டத்தில்
மாலை வாங்கும் கழுத்திற்கு
மலர் வளையம் சாத்திட…..

இன்னொரு முகம் வேண்டும்

***
31.08.1999 –

Series Navigation

மனஹரன் மலேசியா

மனஹரன் மலேசியா