இன்னும் கொஞ்சம் வெண்பா
மத்தளராயன்

பகல் நகரம்
படுத்து நகர எடுத்துச் சுமப்போர்
விடுத்துச் சிதறும் மலரே – அடுத்து
நடக்கும் பொலீசு உடுப்பில் படியும்;
கடக்கும் மெதுவே தெரு.
இரவு நகரம்
அடைத்த கதவுகள் அங்கங்கு தட்டிக்
கடைத்தெரு ஓரம் களைத்து நடக்கிறான்.
கேட்பாள் புதுமனைவி நாட்டில் எனவுயரும்
நேப்பாளி கூர்க்கா விசில்.
‘அச் ‘சனை
நச்சத் திரமென்ன ? கேட்டார் தெரியலை.
மிச்சம் அவர்தான் நிரப்பியே சொச்சம்
அடுக்கிலே தும்மியம் பாளை யழைப்பார்
க்ஷடுப்பிலே செல்ஃபோன் மணி.