இதுவும் வேறாக

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

கோமதி நடராஜன்


ரேஷன் கடை புடவையை,
மந்திரி மனைவி
வாங்கி அணிந்தாள்
ஆஹா!என்னே அடக்கம்!
என்று ஜால்ரா தட்டினர்.
தொழிலதிபரின் அன்பு மனைவி,
தொடர்ந்து வந்தாள்,
‘எல்லாம் இருந்தும் எளிமை ‘ என்று
வாய் பிளந்தனர்.
கல்லூரிக் குமரிகள்,
பட்டாம் பூச்சிகளாய்,
பறந்து வந்தனர்,
நாகரீகம் என்று சொல்லி
எழுதி,எழுதி மாய்ந்தனர்.
ஆனால்-
இல்லத்தரசி ஒருத்தி,
உடுத்திச் சென்ற,
நேரம் மட்டும்,
பட்டு வாங்க வக்கில்லாமல்
வந்து விட்டாள்
நாற்பது ரூபாய் சேலையில் என்றே
கிசு கிசு
***
ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்