ஆற்றுவெள்ளம் ஆசையானால்

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

சத்தி சக்திதாசன்


ஆற்றுவெள்ளம் அலைபாயும் அதன் பாதை நீரறியும்
ஆசைவெள்ளம் அதன் பாதை யாரறிவார் தோழா ?

ஆற்றுவெள்ளம் அணைதாண்டும் போது ஊரழியும்
ஆசைவெள்ளம் அணைதாண்டும் போது உள்ளமழியும்

ஆற்றுவெள்ளம் வடிந்த பின்பு காணுவது அமைதி தோழா
ஆசைவெள்ளம் வடிந்த பின்பு உள்ளம் முழுவதும் சோகமயம்

ஆற்றுவெள்ளம் பிறப்பது அடைமழையின் நிகழ்வால்
ஆசைவெள்ளத்தின் பிறப்பு அடிமனத்தின் அடங்காத்துடிப்பு

ஆற்றுவெள்ளத்தில் அகப்பட்டால் அழியும் வாழ்வு நீரினிலே
ஆசைவெள்ளத்தில் புரண்டெழுந்தால் அழிப்பதெம்மை இதயமே

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்