அவதாரம்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

ஆர் டி லெய்ங் (தமிழில் புதுவை ஞானம்)


****

மொட்டவிழ்கிறது
ஆயிரமிதழ்த் தாமரை
மண்ணிலிருந்து
விண்ணுக்கு
நீரினூடாக….
அக்கினியிலிருந்து
ஆகாயம் நோக்கி
அதன் சலனம்.
வாழ்வினுள்ளும்
சாவினுள்ளும்
அவற்றுக்கு அப்பாலுமாக
உணர்வுகளுக்கு
உள்ளும் வெளியும்
உணர்வற்றதும் ஆக….

அர்த்தமுமாய்
அனர்த்தமுமாய்
ஆணுமாய்ப்
பெண்ணுமாய்
உளதாய்
இலதாய்
ஒளியாய்
இருளாய்
வெற்றிடமாய்
நிறை குடமாய்
எல்லா இருமைகளுக்கும்
அப்பால் அல்லது
இருமையற்றதாய்
அப்பாலுக்குமப்பால்
அவதாரம்
மீண்டும்
மூச்சு விடுகிறேன்.

–R.D.LAING
–POLITICS OF EXPERIENCE

****

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்