சு. குணேஸ்வரன்
இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறை து. குலசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் அறிவோர் கூடல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடைபெற்றது. இதன் நான்காவது நிகழ்வு 01.03.2009 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ என்ற கவிதைத் தொகுப்புப் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இரா. இராஜேஸ்கண்ணன் விமர்சன உரையாற்றினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் து. குலசிங்கம் கடித இலக்கியங்களின் தோற்றம் அதன் வளர்ச்சி பற்றிய புதிய செய்தியை எடுத்துக் கூறினார். சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய மடல் இந்த கடித இலக்கியங்களின் தொடக்கமாக இருக்கின்றன என்றார். ஈழத்தில் கைலாசபதி – சிங்காரம் கடிதங்கள்: குலசிங்கத்தின் கடிதங்களை காலச்சுவடு பிரசுரித்ததை ஞாபகப்படுத்தினார்.
துவாரகனின் கவிதை பற்றிய உரையில் பேச்சாளர் கவிதைகளின் காலம்; அவை எடுத்துக் கொண்ட பொருள்; அவற்றின் அழகியல்; கவிதையின் மொழி பற்றிய கருத்துக்களை மிக நுட்பமாக உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினார். (இந்நூல் பற்றிய விமர்சனங்கள் இரண்டு திண்ணையில் வெளிவந்தது)
நிகழ்வில் நூலாசிரியர் துவாரகன்; ஓவியர் கோ. கைலாசநாதன்; எழுத்தாளர் இராகவன்; மற்றும் பா. இரகுபரன்: கந்தையா; பாலசுப்பிரமணியம்;ஆகியோருடன் பல படைப்பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் பங்குபற்றினர்.
ஈழத்தின் இறுக்கமான சூழலுக்கு மத்தியிலும் இது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருவது ஓரளவு மனிதர்களாக வாழ்வதற்கு ஏற்ற நம்பிக்கையைத் தருவதாக நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.
தகவல் : சு. குணேஸ்வரன் mskwaran@yahoo.com
- நாடற்றவன் பேசிக்கொண்டிருக்கிறான்
- நான்கடவுள் – அசைவம்-அகிருத்துவம்-வணிகம்-பண்டம்என்னும்விரியும் கருத்துப்புலம்
- கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (இலையுதிர் காலம்) கவிதை -2 (பாகம் -3)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -26 << காதல் ஒரு பயணம் >>
- திரு. அப்துல் கையூம் “இடைவேளை” சுகமாகவும் நகையாகவும் இருந்தது
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா ? (கட்டுரை 54 பாகம் -1)
- “தோல்வியடைந்த ஒரு குறும்படத்தின் 2 கதைகள்”
- எளிமையும் வலிமையும் : தேவதச்சனின் “யாருமற்ற நிழல்”
- இழப்பும் வலியும் : கல்யாண்ஜியின் “இன்னொரு கேலிச்சித்திரம்”
- வேண்டும் சரித்திரம்
- ” இடை ” பற்றிய கட்டுரைக்கு ஒரு இடைச் செருகல்
- இணையப்பயிலரங்கு
- அறிவோர் கூடல் நிகழ்வு
- அறிவியல் புனைகதை பரிசளிப்பு விழா
- கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள்
- தீர்ப்பு எழுதும் கலம்கள்
- நெருடல்கள்
- வேத வனம் விருட்சம் 25
- தமிழ்!
- சொல்லி முடியாதது
- நானும் முட்டாள் தான்
- முகமூடி
- விடுபட்டவை
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- சுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு
- தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (1)
- கவலைகிடமான மொழிகளின் நிலை
- தமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். )
- இணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 4: சி.சு.செல்லப்பா
- ”கண்ணி நுண் சிறுத்தாம்பு”
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -3