அறிவியலும் அரையவியலும்

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

வஹ்ஹாபி


“அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?” எனும் தலைப்பில் அப்துல் அஸீஸ் என்ற பெயரில் கடந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில் ஒரு பதிவு [சுட்டி-1] வெளியானதைப் படிக்க நேர்ந்தது.

அறியாமையினாலோ அறிந்துகொண்டோ மிகத் தவறாக அவர் விளங்கிய/விளக்கிய இறைமறை வசனங்களின் உண்மை நிலையை இங்கு விவரிப்பதற்கு முன்னர் ஒரு பழித்துறப்பு (Disclaimer):

புதிதாக ஏதேனும் ஓர் அறிவியல் தகவல்/கண்டுபிடிப்பு வெளியானவுடன் அது நிறுவப்பட்டதா ஆய்வில் உள்ளதா என்பதைக்கூட அறிந்து கொள்ளும் பொறுமையின்றி, அந்தத் தகவல்/கண்டுபிடிப்பு “ஏற்கனவே குர்ஆனில் இன்னின்னவாறு சொல்லப் பட்டு இருக்கிறது” என்று தங்கள் விருப்பப்படி பரப்புரை செய்வதற்குப் படித்த முஸ்லிம்களில் ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அவ்வாறு அவசரகோல பரப்புரையைச் செய்து முடித்து விட்டு, இஸ்லாத்துக்குப் பெரிய சேவை செய்து விட்டதாக எண்ணி மகிழும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான் அல்லன் என்பதை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைமறை குர்ஆன் அருளப் படுவதற்கு ஏறத்தாழ 750 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.மு. 370-286) கிரேக்க நாட்டில் அரிஸ்டாட்டில் என்ற அறிவியல் மேதை, புவிமையக் கோட்பாடு (Earth Centre Theory) என்பதாக இரு முடிவுகளை அறிவித்தார். அவையாவன:

(1) நாம் வாழும் பூமி உருண்டையானது.
(2) ஒரே இடத்தில் நிலைகொண்டிருக்கும் பூமியை, சூரியன் சுற்றி வருவதால் இரவு-பகல் ஏற்படுகிறது.

பூமியின் வடிவத்தைப் பற்றி, “அது தட்டையாக இருக்கிறது” என்றோ “முட்டையாக இருக்கிறது” என்றோ குர்ஆன் எங்குமே சொல்லவில்லை. ஆனால், “… கடலில் பயணிக்கும் கப்பல்களிலும் … சிந்தித்துப் பார்ப்போருக்கு சான்றுகள் இருக்கின்றன” [ 002:164] என்று கூறுகிறது.

பூமி எவ்வாறு இருக்கிறது என்று குர்ஆன் கூறுவதைப் பின்னர் பார்ப்போம்.

“பூமி ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது” எனும் அரிஸ்டாட்டிலின் இரண்டாவது முடிவை, “… அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன” [021:033] எனக் கூறி, குர்ஆன் முற்றாக மறுத்தது.

குர்ஆனின் மறுப்புக்குப் பத்து நூற்றாண்டுகள் கழித்து, 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய கோப்பர் நிக்கஸ் (Coper Nicus, 1473 – 1543), கெப்லர் (Kepler, 1571 – 1630) ஆகிய இரு அறிவியல் மேதைகள் அரிஸ்டாட்டிலின் புவியியல் கோட்பாட்டின் இரண்டாவது முடிவை மறுத்து, “பூமி நகர்ந்து செல்கிறது” எனக் கூறினர் [சுட்டி-2].

இதன் மூலம் நாம் விளங்க வேண்டியது யாதெனில், அறிவிக்கப் படும் எல்லா அறிவியல் முடிவுகளுக்கும் தோதாக இறைமறை வளையாது. நிரூபிக்கப் பட்ட அறிவியலுக்கு எதிராக எதுவும் இறைமறையில் இருக்காது என்பதே.

***

இனி,

மறுப்பு 1 – அறிவியலை அடிப்படையாகக் கொண்டு இறைமறைக்கு எவரும் விரிவுரை எழுதவில்லை

“அறிவியலை அடிப்படையாகக் கொண்டு இறைமறைக்கு விரிவுரை எழுதுவது ஆபத்து” என்பதாகக் கட்டுரையாளர் கவலை தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர் தொடக்கத்தில் சுட்டுவது டாக்டர் மாரிஸ் புகைல் 1976இல் எழுதிய In ‘La Bible le Coran et la Science’ (அறிவியல் ஒளியில் பைபிளும் குர் ஆனும் -The Bible, the Qur’an and Science) என்ற நூலாகும்.

ஆறாயிரத்திற்கும் அதிகமான வசனங்களைக் கொண்ட இறைமறையில், டாக்டர் மாரிஸ் புகைல் அவரது ஒப்பீட்டு ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே, இறைமறைக்கு இதுவரை யாரும் அறிவியலை அடிப்படையாக வைத்து முழு விரிவுரையையும் எழுதிவிடவில்லை என்பதை இங்கு அழுத்திச் சொல்ல வேண்டியதாகிறது.

ஏனெனில்,

இறைமறை அல்குர்ஆன் என்பது ஒரு புவியியல் நூலன்று; வானியல், கடலியல் இன்ன பிற அறிவியல் நூலுமன்று. பள்ளியிலோ கல்லூரியிலோ மாணவர்களுக்குப் புவியியலையும் வானியலையும் கடலியலையும் இன்னபிற அறிவியல்களையும் கற்றுக் கொடுக்குப்பதற்காக இறைவன் அதை அருளவில்லை. மாறாக, “மனிதர்களுக்கு இது தெளிவான நேர்வழியைக் காட்டும்” [002:185] என்று அறிமுகப் படுத்துகிறான். ஆனால் இறைமறை கூறியிருக்கும் எந்த இயலும் நிரூபிக்கப் பட்ட அறிவியலோடு மோதாது; மாறாக, “சிந்தித்துப் பாருங்கள்” எனக்கூறி மேற்கொண்டு ஆய்வுக்குத் தூண்டும். முற்றாக நிரூபிக்கப் படாத “டார்வின் தியரி” என்ற பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு பல்லாண்டு கொண்டாடப் பட்ட காலகட்டம் நெடுகிலும் குர்ஆனின் நிலைபாட்டை வளைத்து, “குரங்கிலிருந்து மனிதன் என்று குர் ஆனில் சொல்லப் பட்டிருக்கிறது” என்பதாக எவரும் “அறிவியல் விரிவுரை” எழுதவில்லை. சமகாலத்தில் டார்வின் தத்துவம் பொலபொலத்துப் போனது. “மனிதனைப் பொருத்தவரை படைப்புதான் சரி; பரிணாம வளர்ச்சி என்பது அறிவியலுக்கு ஏற்புடையதன்று” என்பதைத்தான் டாக்டர் மாரிஸ் புகைல் தனது “மனிதனின் மூலம்” எனும் நூலில் விளக்குகிறார் [சுட்டி-3].

மறுப்பு 2 – “பூமி தட்டையாக இருக்கிறது” என்று குர்ஆன் கூறவில்லை

“அரபி மொழியில் தட்டை என்ற பொருளில் எத்தனை வார்த்தைகள் உண்டோ அத்தனை வார்த்தைகளையும் உபயோகித்து அல்லாஹ் அல்குர்ஆன் வசனங்களை இறக்கியுள்ளான்” என்று எழுதி கட்டுரையாளர் தம் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தம் கருத்தை வலியுறுத்த அவர் மேற்கோள் காட்டும் அரபுச் சொற்கள்: (1)ஃபிராஷா, (2)மத்த, (3)மதத்னாஹா, (4)மஹ்தன், (5)தஹாஹா, (6)ஸுடிட், (7)மிஹாதா, (8)பிஸாடா, (9)ஃபரஷ்னாஹா ஆகியன.

மேற்கண்ட 9 சொற்களிலும் 1ம் 9ம் ஒரே சொல்லோடு இணைந்த உரியும் வினையுமாகும்; 2ம் 3ம் படர்க்கையும் தன்னிலையும் இணைந்த சொற்களாகும்; 4ம் 7ம் ஒரே சொல்லின் இருவகை உரிகளாகும்; 6இலும் 8இலும் கட்டுரையாளர் பயன் படுத்தியிருக்கும் ‘ட’கரங்கள் அரபு மொழியிலேயே இல்லாதவையாகும்.

கட்டுரையாளர் எழுதிய சொற்களுக்கு அகராதிப் பொருள்கள்:

ஃபிராஷ் : படுக்கை [சுட்டி-4].
மஹ்து : தொட்டில் [சுட்டி-5].
மத்த/மதத் : விரிவு [சுட்டி-6].
தஹாஹா : விரிவாக்கப் பட்டது [சுட்டி-7].
பிஸாத் : தரை விரிப்பு [சுட்டி-8].
ஸுத்திஹத் : பரந்துபட்ட [சுட்டி-9].

மேற்காணும் அகராதிச் சொற்களில்கூட “தட்டை” என்று தமிழாக்கக் கூடிய எச்சொல்லும் இல்லை

புகழ் பெற்ற இறைமறை விரிவுரையாளர் இமாம் இபுனு கஸீர் 700 ஆண்டுகளுக்கு முன்னர் “சரியாக” எழுதி வைத்த விரிவுரையைப் படித்திருப்பதாகப் புகழ்ந்துரைக்கும் கட்டுரையாளரின் பார்வைக்கு இமாம் இபுனு கஸீரின் சொல் விளக்கங்கள் ஆங்கிலத்தில் (மூலமொழியில் வேண்டுமெனக் கேட்டாலும் தருவேன்):

ஃபிராஷ் : “Who has made the earth a resting place for you, and the sky as a canopy, and sent down water (rain) from the sky and brought forth therewith fruits as a provision for you. … ” 002:022 [சுட்டி-10].

“And We have made the earth a Firash, meaning, We have made it a resting place for the created” 051:048 [சுட்டி-11].

மஹ்து: “Who has made earth for you like a bed; and has opened ways for you therein, and has sent down water (rain) from the sky …” 020:053 [சுட்டி-12].

“Mahdan, which means a place of rest that you settle down upon. It also may mean that which you stand upon, sleep upon or travel upon its back” [சுட்டி-13].

“Who has made for you the earth like a bed, means, smooth, stable and firm, so that you can travel about in it, and stand on it and sleep and walk about, even though it is created above water, but He has strengthened it with the mountains, lest it should shake” 043:010 [சுட்டி-14].

“Have We not made the earth as a bed, meaning, an established, firm and peaceful resting place, that is subservient to them” 078:006 [சுட்டி-15].

மத்த : “And it is He Who spread out the earth, and placed therein firm mountains and rivers and of every kind of fruit He made Zawjayn Ithnayn (two in pairs). He brings the night as a cover over the day. Verily, in these things, there are Ayat (signs) for people who reflect” 013:003 [சுட்டி-16].

“And We have spread out the earth, and have placed firm mountains in it, and caused all kinds of things to grow in it, in due proportion” 015:019 [சுட்டி-17].

“And the earth! We have spread it out, means, We made it spacious and spread it out” 050:007 [சுட்டி-18].

தஹாஹா : “By the earth and Ma Tahaha, Mujahid said, Tahaha means He spread it out” 091:006 [சுட்டி-19].

“And after that He spread the earth, He explains this statement by the statement that follows it” 079:030 [சுட்டி-20].

பிஸாத்: “And Allah has made for you the earth a wide expanse meaning, He spread it out, leveled it, settled it, and stabilized it with firm and lofty mountains” 071:019 [சுட்டி-21].

ஸுத்திஹத்: “And at the earth, how it is outspread meaning, how it has been spread out, extended and made smooth …” 088:020 [சுட்டி-22].

மேற்காணும் ஏதேனும் ஒரு வசன விளக்கமாவது “பூமி தட்டை” என்று சொல்கிறதா?

“பூமி தட்டை வடிவத்தில் இருக்கிறது என்று குர்ஆன் சொல்கிறது” என ஏதோ ஓர் உள்நோக்கத்தோடு கூற முயல்வதாகத்தான் கட்டுரையாளரைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஏனெனில், கட்டுரையாளர் இணையத்தில் கட்டுரை எழுதும் அளவுக்குப் படித்தவராக இருக்கிறார்.

அவர் பள்ளியில் படித்த காலத்தில், ” கடலில் இருந்து கரையை நோக்கி வரும் கப்பலின் பாய் மரத்தின் நுனி முதலாவதாக நம் கண்களுக்குத் தெரிவதும் கரையிலிருந்து கப்பல் [ 002:164] புறப்பட்டுச் செல்லும்போது முதலாவதாக அதன் அடித்தளமும் இறுதியாகப் பாய்மரமும் மறைவதும் ஏன்?” என்ற கேள்விக்கு பதிலைத் தெரிந்து சரியாகத்தான் எழுதியிருப்பார்.

“சூரிய-சந்திர கிரகணங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன?” என்ற கேள்விக்கும் பதில் எழுதி இருப்பார். “முதல் பிறை வளைவாகப் பிறப்பதேன்?” என்றும் “ஒரு நாளைக்கு 24 மணி நேரம் எப்படிக் கணக்கிடப் படுகிறது?” என்றுங்கூட தெரியாத அறிவிலியாகக் கட்டுரையாளரை நினைக்க முடியவில்லை.

பிற மறுப்புகள் பின்னர் (இன்ஷா அல்லாஹ்).

ஃஃஃ
to.wahhabi@gmail.com

http://wahhabipages.blogspot.com

சுட்டிகள்:
01 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=20909198&edition_id=20090919&format=html

02 – http://www.islamkalvi.com/portal/?p=420

03 – http://www.islamfortoday.com/bucaille01.htm

04 – http://translate.google.com/translate_t?sl=ar&tl=en#ar|en|%D9%81%D8%B1%D8%A7%D8%B4%D8%A7

05 – http://translate.google.com/translate_t?sl=ar&tl=en#ar|en|%D9%85%D9%87%D8%AF%D8%A7

06 – http://translate.google.com/translate_t?sl=ar&tl=en#ar|en|%D9%85%D8%AF%D8%AF%D9%86%D8%A7%0A

07 – http://translate.google.com/translate_t?sl=ar&tl=en#ar|en|%D8%AF%D8%AD%0A

08 – http://translate.google.com/translate_t?sl=ar&tl=en#ar|en|%D8%A8%D8%B3%D8%A7%D8%B7%D8%A7%0A

09 – http://translate.google.com/translate_t?sl=ar&tl=en#ar|en|%D8%B3%D8%B7%D8%AD%D8%AA%0A

10 – http://www.tafsir.com/default.asp?sid=2&tid=1192

11 – http://www.tafsir.com/default.asp?sid=51&tid=50564

12 – http://www.tafsir.com/default.asp?sid=20&tid=32084

13 – http://www.tafsir.com/default.asp?sid=20&tid=32100

14 – http://www.tafsir.com/default.asp?sid=43&tid=47522

15 – http://www.tafsir.com/default.asp?sid=78&tid=56741

16 – http://www.tafsir.com/default.asp?sid=13&tid=25413

17 – http://www.tafsir.com/default.asp?sid=15&tid=26866

18 – http://www.tafsir.com/default.asp?sid=50&tid=50041

19 – http://www.tafsir.com/default.asp?sid=91&tid=58408

20 – http://www.tafsir.com/default.asp?sid=79&tid=57013

21 – http://www.tafsir.com/default.asp?sid=71&tid=55421

22 – http://www.tafsir.com/default.asp?sid=88&tid=58103

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி