அருங்காட்சியகத்தில் நான்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

முருகன் சுப்பராயன்கடிதம் கொடுக்க வரும் பொது
நலம் விசாரிக்கும்
அஞ்சல் அலுவலர்
வருவதில்லை
எல்லா கடிதங்களும்
மின்னஞ்சலுக்கே
வந்துவிடுகின்றன.

அறிவுரை வழங்கும்
வங்கி அதிகாரியை
சந்திப்பதில்லை
பணம் எடுப்பதும் போடுவதும்
தெரு முனையில் இருக்கும்
தானியங்கி இயந்திரத்திலேயே
முடிந்து விடுகிறது.

மின் கட்டணம் செலுத்துவது
வீட்டு பொருட்கள் வாங்குவது
இதர எல்லாமே
இணையம் மூலமே…

என்னை பாட வைத்த
சிட்டுக் குருவிகளும்
வருடி செல்லும் வேப்ப மரக்காற்றும்
இங்கில்லை.

உயிருள்ள நடைபிணமாக
அருங்காட்சியகத்தில் வைக்க
தயாராக நான்…


Murugan_ambal@yahoo.com

Series Navigation

முருகன் சுப்பராயன்

முருகன் சுப்பராயன்