அமெரிக்கப் பொருளாதாரத்தில் கிரீன்ஸ்பான் அவர்களின் பங்கு. (டாக்டர் காஞ்சனா தாமோதரனுக்கு ஒரு பதில்)

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

தாமஸ் கிஷோர்

பிரைன் வெஸ்புரி அவர்களும் வால்ஸ்ட்ரீட் ஜர்னலும் கிரீன்ஸ்பான் அவர்களை குறை சொல்வதன் காரணம், அவர் 2000 ஆண்டு பங்கு சந்தை உச்சத்தில் ஓடிக்கொண்டிருந்த போது, அதனை நீர்க்குமிழி என்று அழைத்து, வட்டி விகிதத்தை உயர்த்தியது தான். 2000 ஆண்டில் பணவீக்கம் இருக்கிறது என்பதற்கு எந்த விதமான புள்ளிவிவரமும் இல்லை. ஃபெட் நிறுவனத்தின் முக்கியவேலை, நாட்டின் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வதும், நாட்டில் பணவீக்கம் இருக்கிறதா இல்லையா என ஆராய்ந்து அதற்குத் தகுந்தாற்போல வட்டி விகிதங்களை மாற்றுவதும்தான். நாம் இப்போது deflation என்னும் பண அழுத்தத்தில் இருக்கிறோம் என்பது தெரிந்த கதை. இந்த பண அழுத்தக் காலத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவது தற்கொலைக்கு ஒப்பானது. ஃபெட் நிறுவனமும், கிரீன்ஸ்பானும் சரியாகப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள தவறிவிட்டார்கள். 2000ஆண்டில், ஜிடிபி என்னும் நாட்டு வளர்ச்சி விகிதம் 6 சதவீதம் வளர்ந்தது. பின்னர் மறுபடி ஆராயப்பட்டு, 3 சதவீதமாகவோ, 4 சதவீதமாகவோ கணக்கிடப்பட்டிருக்கிறது. ஃபெட் நிறுவனத்திடன் இருக்கும் ஏராளமான தொழில் நுட்பம் இருந்தும் சரியாக பொருளாதாரத்தைக் கணிக்க முடியவில்லை என்பது வருந்தத்தக்கது. பின்பு மாபெரும் கிரீன்ஸ்பான் அவர்களே இதை செனட் கமிட்டியில் பேசும்போது ஒப்புக்கொண்டார். அதை இங்கு சொல்கிறேன் – ‘ நமக்கு பொருளாதாரத்தை கணிக்க இன்னும் சிறந்த உபாயங்கள் வேண்டும் (We need better tools to effectively forecast the economy) ‘. இதுதான் ஃபெட் நிறுவனம் மக்களிடம் மன்னிப்பு கேட்க மிக அருகில் வந்த நிகழ்ச்சி.

தொழில்நுட்பம் பண அழுத்தத்தை இயற்கையாக ஏற்றுக்கொண்ட ஒரு துறை(deflationary in nature). ஒரு டிரான்ஸிஸ்டரின் விலை 7 டாலரிலிருந்து இன்று 50 வருடங்களில் ஒரு பைசாவில் கோடியில் ஒரு பாகமாகி விட்டது. எனக்கு இருக்கும் இரண்டு குழந்தைகளால், இது போல டயப்பரும் விலை குறைந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் விரும்புகிறேன். மூர் விதியின் படி தொழில்நுட்பம் வெகுவேகமாக வளர்வதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பழைய பொருளாதாரத்துக்கும் புதிய பொருளாதாரத்துக்கும் இதுதான் வித்தியாசம். பழைய பொருளாதாரத்தில் டயப்பரின் விலை கிடுகிடு என்று குறைந்தாலும், டயப்பரை வாங்குவது அதிகரிக்காது (ஒருவேளை டயப்பர் மலிவாகக் கிடைக்கிறதே என்பதற்காக குழந்தைகளை அதிகம் பெற்றுக்கொண்டால் நடக்கலாம்)

ஒரு மாபெரும் கடன் நீர்க்குமிழி (credit bubble) இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். நல்ல பணம் மோசமான திட்டங்களிலும், ஆபத்தான முதலீடுகளிலும் கொட்டப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் அந்த கடன் நீர்க்குமிழியை உடைப்பதற்கு குறுகிய கால வட்டி விகிதத்தை (Short term interest rate) உபயோகிப்பது சரியானதல்ல. கடனே இல்லாமல், பழைய பொருளாதாரம் சார்ந்த நிறுவனங்கள் மோசமான லாபத்தை ஈட்டுக்கொண்டிருப்பதைப் பாருங்கள். ஆனால், க்ரீன்ஸ்பான் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் தனது வாளை எடுத்து வீசினால், உலகத்தின் எல்லா நிறுவனங்களும் அடிபடுவதைப் பாருங்கள். நாம் உலக பொருளாதார வீழ்ச்சியின் முனையில் நின்று கொண்டிருக்கிறோம். பொருளாதாரம் உருகுவதால், மோசமான குழப்பம் பங்களூரிலிருந்து சிலிக்கான் வாலி வரை எதிரொலிக்கிறது. உங்களது கடிதத்தில் ஆஸ்திரேலியா நன்றாக இருப்பதாக எழுதியிருப்பதைப் படித்து சந்தோஷம். ஆனால், அந்த நல்ல நிலைமை வெகுகாலம் நீடிக்காது என்பதுதான் உண்மை.

கிடங்குகளில் பொருட்கள் குவிக்கப்பட்டிருப்பதும், மிகப் பெரிய நஷ்டக்கணக்குகள் எழுதப்படுவதும், பொருளாதாரம் இப்படி ஸட்டன் பிரேக் போடாமல் இருந்திருந்தால் நடந்திருக்காது. பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள், அடுத்த 3 வருடங்களுக்கு தங்களது உற்பத்திப் பொருள்களை விற்க, தேவையென்று கணிக்கப்பட்டதிலிருந்து, திட்டமிட்டிருந்தார்கள். செப்டம்பர் 2000த்தில் அனைத்து ஆர்டர்களும் ஒட்டுமொத்தமாக கான்ஸல் செய்யப்பட்டன. பெரும் கிடங்குகளில் பொருள்கள் தேங்கின. தொழில் நுட்பத்துறையில் குழப்பம் தோன்றியது. இது கிடங்கி சரிப்படுத்தல் அல்ல (This is not inventory correction)

1998இலிருந்தே நாம் பண அழுத்ததில் இருந்து வருகிறோம் என்பது இன்று பேசப்படுகிறது. ஃபெட் இதைப் பார்க்கவே இல்லை. இதைப் பார்ப்பதுதான் அவர்களது முழு முதல் வேலை என்று நான் நினைக்கிறேன். இடது கண் காயம் பட்டவுடன் ஃபெட் மருத்துவர்கள் வலது கண்ணுக்கு ஆப்பரேஷன் பண்ண முடிவு செய்தார்கள். 2000த்தில் வட்டிவிகிதங்களை ஏற்றியதும், ஆறு மாதங்களுக்கு பிறகு 8 முறை தொடர்ந்து வட்டி விகிதங்களைக் குறைத்ததும், எந்த அளவுக்கு ஃபெட் நிறுவனம் தவறாக எல்லாவற்றையும் புரிந்து வைத்திருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம்.

பொருளாதாரம் இப்போது 4 சதவீதத்தில் வளர்ந்து வருகிறது என்று கற்பனை செய்வோம். உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதல்களுக்குப் பின்னர், 1 அல்லது 2 சதவீத வளர்ச்சிக் குறைவை நாம் தாங்கி இருப்போம். இது வேலை இழந்த எல்லா விமானப்பணியாளர்களுக்கும் வேலை கொடுக்கும் நிலையில் இன்னும் இருந்திருப்போம். இதன் பின்னர் மீண்டும் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது எளிதாக இருந்திருக்கும் அல்லவா ? இருப்பினும், இன்றைய நிலையில், இப்போதைய சிக்கலுக்குள்ளே, ஃபெட் நிறுவனம் சரியாகவே செயல் படுகிறது என்பதை நான் பாராட்டுகிறேன்.

தாமஸ் கிஷோர் –

– எரிந்த முதலீட்டாளர். சப்ளை சைட் ஆதரவாளர். புஷ் சப்ளை சைட் ஆதரவாளர் என்பதில் சந்தோஷம் கொள்பவர்.

(காஞ்சனாவுக்கு : எனது கருத்துக்கள் எந்த விதத்திலாவது உங்களை புண்படுத்தியிருக்குமெனில், உண்மையாக வருத்தம் தெரிவிக்கிறேன்)

***

Dear Dr.Kanchana

The reason for both Brain wesbury and WSJ to deride Gspan was his speech towards asset bubble during the stock market peak of 2000 and his subsequent action towards raising rates. There was no major fed statistics to substantiate that there was real inflation in 2000. Fed ‘s job is to understand the economy, to check if we are inflation or in deflation and then act accordingly. Now it is a forgone conclusion, that we are/were in deflation. In a deflationary situation, raising interest rates is a suicide. The Fed and Gspan failed miserably in understanding the status quo of the economy. In the beginning of 2000, the GDP seemingly grew at an alarming 6%, but now this has been revised downward by almost 30% to 4% nominal growth rate. Inspite of the technology Fed has, it was not adequate to effectively forecast the condition of the economy. Even mighty G accepted this in his later speech to Senate, which I quote ‘ ‘. This is the closest the FED has come so far apologizing to the public.

Technology is very much deflationary in nature. Cost of a single transistor has fallen from $7 to one millionth of a penny in over half a century. Having two kids, I wish diapers can take a downward spiral like that. We have only seen the technology reaching a greater mass by this moore ‘s law. In old economy, consumption of diapers will not increase even if the cost were to plummet, unless people have a mindset to mass produce babies, because diapers are cheap.

I agree that there was a major credit bubble. Good money was poured against very bad and extremely risky investments. However using the only tool and a very crude one that is, to thwart the credit bubble was not the correct solution. Look at conventional companies, with absolutely no debt, reporting terrible earnings. When Alan, wings his crude weapon, the wrath of the sword is felt across the entire global investing community. We are at the brink of a Global recession. A total meltdown and a terrible chaos echoing from banglore valley to silicon. It was good to know from your letter, that Australia is doing good, inspite of the global conditions, but the odds are that it will not last long.

Inventories would not have piled up and the huge write off ‘s would not have occurred, if the economy was not brought to a screeching halt. Most of the tech companies, had a clean line of sight for the next 3 years about their product pipe lines. Come September 2000, orders were cancelled enmasse, inventories piled up and a total techno chaos set in.

It is a foregone conclusion now, that we are in a deflationary recession and there were telling signs as early as 1998. Fed failed to see it and I sincerely think, that it is their job to monitor the pulse as accurate as possible. The left eye got injured, but the fed doctors decided to operate the right one. Raising the interest rates in 2000 and just six months later reducing the same 8 times in a row to a point below the original level in less than 9months shows how much the fed was off.

Imagine if the economy were humming today at 4% growth rate, in the wake of WTC attacks, we could have easily withstood a 1% or even 2% reduction in growth rate and absorbed all the poor airline workers who are going out of job easily. The turn around after the aftermath, would have been a lot less painful. But I must admit in the current crisis situation, the Fed is acting very well.

Thomas Kishore

A burnt investor, who believes in supply side and it is good to know that Bush Jr is a supply sider as well. If you find my response offensive in any manner, I sincerely apologize.

Series Navigation

அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue

ஜாக் கெம்ப் (எம்பவர் அமெரிக்கா என்ற நிறுவனத்தின் உதவி இயக்குனர். 1996இல் அமெரிக்க குடியரசுக் கட்சியின் உதவி ஜனாதிபதி நியமனர்)

நாமாக வெளியிடும் பணங்களால் உலகப் பொருளாதாரம் மெதுவாகிக் கொண்டு வருகிறது என்பதை ஒப்புக்கொள்ள இன்னும் எத்தனை அழிந்த நம்பிக்கைகளையும், பொய் மீட்சிகளையும் நாம் அனுபவிக்க வேண்டும் ? வட்டி விகிதம் குறைப்பதால் பொருளாதாரம் மேம்படும் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தும், ஃபெட் வட்டிவிகிதங்களைக் குறைத்து ஆறு மாதங்களுக்குப் பின்னரும் இன்னும் பொருளாதாரம் பலவீனமாகிக் கொண்டே வருகிறது. சமீபத்திய வரிக்குறைப்பு சட்டங்களால் மக்கள் திரும்பப் பெற்ற பணங்களால் இன்னும் பொருளாதாரம் உத்வேகம் பெறவில்லை. பொருளாதாரத்தில் மக்களின் தேவை குறைபாடு இல்லை. மக்களின் கையில் நிறையப்பணம் இருப்பதால், பொருளாதாரத்தின் கொடுக்கும் (விற்கும்) பகுதியை (supply side of the economy) உயிரூட்ட முடியவில்லை.

முன்னெப்போதும் இல்லாத பரிசோதனை

தங்க தரத்தை விட்டு விட்ட எந்த மாபெரும் தேசமும், அதற்குப் பின்னர் மாபெரும் தேசமாக இருந்ததில்லை என்று ரொனால்ட் ரீகன் ஒரு முறை சொன்னார். ஆகஸ்ட் 15, 1971இல் அமெரிக்கா மற்ற தேசங்கள் வைத்திருக்கும் அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்கத்தை தரும் முறையை நிறுத்தி, மேற்கண்ட ரீகனது வரியை பரிசோதனை செய்ய முனைந்தது. உலக வரலாற்றில் முதன் முதலாக, உலகத்தின் முக்கிய தேசங்களின் பணங்கள் ஒரு பொருளைச் (commodity) சார்ந்திருக்காமல் இருக்கின்றன. மில்டன் ஃபிரீட்மென் இந்த நிலையை ‘முன்னெப்போதும் இராதது ‘ என்று குறிப்பிட்டார். அவர் இந்த நிலையை ‘ நீண்ட காலத்துக்கு நிலையாக இருக்க முடியாதது ‘ என்றும் ‘உலகத்துக்கு நீண்டகால நிலையான நங்கூரம் வேண்டும் ‘ என்றும் குறிப்பிட்டார்.

குறுகியகாலத்தில், அவர் வெற்றியடைந்தார். ஜனாதிபதி நிக்ஸன் தனது பேனாவால், தங்கத்தரத்தை நிறுத்தி, தாமாக வெளியிடும் அமெரிக்க டாலரை தரமாக நிறுவியவுடன், இது உலகளாவிய பணவீக்கத்தை 1970களிலும் 1980களிலும் உருவாக்கியது.

இருந்தும் அமெரிக்கா, உலக கம்யூனிஸத்தை தோல்வியடையச்செய்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, வேலைவாய்ப்பின்மையைக் குறைத்து, சுமார் 18 வருடங்களுக்கு முன்னெப்போதும் இராத பொருளாதார பெருக்கத்தைக் கண்டது. இன்று, அமெரிக்கா அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டு, மாபெரும் வளமையில் இருக்கிறது. ரீகனும், ஃப்ரீட்மென் அவர்களும் தவறா ? நான் அப்படி நினைக்கவில்லை. இன்று அமெரிக்க பொருளாதாரம் உச்சத்தில் இருப்பதற்குக் காரணம், மற்ற தேசங்களின் பொருளாதாரம் இப்படி அவர்களாக வெளியிடும் பணத்தால் நசிவடைந்ததுதான் என்று நான் கருதுகிறேன்.

அமெரிக்கா 35 டாலருக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் தருவதை நிறுத்தியவுடன், தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 140 டாலருக்கு இருந்தது. இது டாலரின் விலை குறைவைக் காட்டுகிறது. தங்க இணைப்பை நீக்கியவுடன், நிக்ஸனின் பொருளாதார குழு ஃபெட் வழியாக பொங்கி வழியும் தேவையற்ற பணப்பெருக்கத்தின் மூலம், பொருள்களின் விலை அதிகரிப்பை (பணவீக்கத்தை) உருவாக்கியது. (அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருக்கும் யூரோடாலர் சந்தையை பெருக்கி, அங்கு வெளிநாட்டு வங்கிகளின் பணத்தையும் அதிகரித்தது). 1972இல் ராபர்ட் முன்டெல் முதன் முதலாக பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் ஏறப்போவதையும், பொது பணவீக்கம் வரப்போவதையும் முன் கூட்டியே தெரிவித்தார்.

1973இல் அரபு எண்ணெய் உற்பத்தி நாடுகள் பெட்ரோலின் விலையை நான்கு மடங்காக்கியதால்தான் பணவீக்கம் வந்தது என்று பழமைவாத பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், விற்கும்பகுதி சார்பான பொருளாதார நிபுணர்கள் (supply side economists) தங்கம் விலை நான்கு மடங்காகியதால்தான் பணவீக்கம் வந்தது என்று கூறினார்கள். வரி விகிதங்கள் அதிகரித்தன. இதனால், இந்த பரிசோதனைக்கு முன்னர் ஒருவர் சம்பாதித்த சம்பாத்யத்தை வீட்டுக்கு கொண்டுவர, பின்னர் இருவர் உழைக்க வேண்டியதாயிற்று. தங்கத்தரத்தை இழந்ததால் உருவான பிரச்னைகளை தீர்க்க மூன்று ஜனாதிபதிகள், கூலி கட்டுப்பாடுகள், விலைக்கட்டுப்பாடுகள், உயர்ந்த வரி விகிதங்கள் மூலம் முயல வேண்டியதாயிற்று.

இவ்வாறு உருவாக்கும் பணப்புழக்க கோட்பாடுகள் இரண்டு முகங்கள் கொண்டவை. முன்பு அதிகமாக இருந்த பணம் இன்று காணாமல் போய்விட்டது. 1996இல் பணஅழுத்தம் (deflation) உருவாக ஆரம்பித்தது. கிளிண்டன் அதிகப்படுத்திய வரிவிகிதத்தால் உருவான பணவீக்கத்தை மட்டுப்படுத்த ஃபெட் பணப்புழக்கத்தை இறுக்க வட்டி விகிதத்தை அதிகப்படுத்தியது. இவ்வாறு விலை அதிகமான டாலர், வளரும் பொருளாதாரங்களில் (இந்தியா, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, பிரேசில் போன்ற நாடுகளின் பொருளாதாரங்களில்) அமைக்கப்பட்ட டாலர் தரத்தினால், அவைகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இது ஆசிய, பிரேசில், ருஷ்ய பொருளாதாரங்களை காலாவதி செய்தது. இதனால், பெட்ரோல் மற்றும் இதர பொருட்களின் விலை சரிந்தது. எண்ணெய் உற்பத்தியாளர்கள் இரண்டுவருட பெட்ரோல் உருவாக்காமல் விடுமுறை எடுக்கப்போவதாக அறிவித்தார்கள். இது பெட்ரோல் பற்றாக்குறையை உருவாக்கியது. மின்சாரவிலைகளை அதிகப்படுத்தியது.

மின்சார சக்தி விலைகள் அதிகரிப்பதை ஃபெட் பணவீக்கம் எனப் புரிந்துகொள்ளுகிறது. மீண்டும், மத்திய வங்கி தாமாக வெளியிடும் பணத்தால் இன்னும் உலகப்பொருளாதாரம் சிக்கலில் மாட்டும்.

ஃபெட் தனது வட்டி விகிதங்களை, இந்த வருட ஆரம்பத்திலிருந்து, 275 அடிப்படைப் புள்ளிகள் குறைத்திருக்கிறது. ஆனால் தங்கம் விலை 1996இல் 385 டாலர் இருந்ததிலிருந்து இன்று 272 டாலராக குறைந்திருக்கிறது. நேற்று, ஃபெட் இன்னும் ஒரு 25 அடிப்படைப்புள்ளிகள் தங்கள் வட்டி விகிதத்தை குறைக்கப் போவதாகக் குறிப்பிட்ட பின்னர் மட்டும் 5 டாலர் குறைந்திருக்கிறது. பொருட்களின் விலைகள் கடந்த 15 வருடங்களில் மிகக்குறைந்த விலைகளை எட்டியிருக்கின்றன. டாலர் உலகத்தின் எல்லா பணங்களைவிடவும் மிக அதிகமான விலையில் உச்சத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

தங்கத்தரம் இல்லாமல், ஃபெட் நிறுவனத்தால், எவ்வளவு பணம் சந்தைகள் கேட்கின்றன என்று நிர்ணயிக்க முடியாது. அதனால் செய்ய முடிவதெல்லாம், வட்டி விகிதத்தை தாக்கி எவ்வளவு பணப்புழக்கம் இருக்கலாம் இருக்கக்கூடாது என்று குத்துமதிப்பாக முன்னம் செய்த தவறுகளை சரிக்கட்டுவதுதான். ஜப்பான் மத்தியவங்கி தனது வட்டி விகிதத்தை சைபருக்குக் கொண்டுவந்தும் இன்னும் ஜப்பானின் பணப்புழக்க பிரச்னைகள் தீரவில்லை என்பதை பார்க்காமல், ஜப்பான் மத்திய வங்கி செய்ததை காப்பியடிக்கத்தான் ஃபெட் முயல்கிறது.

பணத்தை நிர்வாகம் பண்ண சரியான முறை இதுவல்ல. பெட் செய்த தவறுகளால், உலக பொருளாதாரம் கீழிறங்கவும், உலக வியாபாரம் நசிவடையவும் ஆகிக்கொண்டிருக்கிறது என்று தெளிவான விஷயம். மீண்டும் தங்க நங்கூரத்தை கொண்டுவந்து மீண்டும் டாலரை தங்கத்தோடு இணைத்து நமது மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை இப்போதே தடுக்க இன்றே சரியான தருணம்.

ஃபெட் தனது வட்டி விகிதக்குறைப்புகளால் ஒருவேளை அதிர்ஷ்டம் அடையலாம். (ஜப்பான் மத்திய வங்கியால் அது முடியவில்லை). ஒரே நல்ல வழி, ஃபெட் வட்டி விகிதங்களை தாக்குவதை விட்டு விட்டு, தங்கத்தை தாக்க வேண்டும். இது தங்கத்துக்கு ஒரு விலையை நிர்ணயம் பண்ணுவதாக சிலர் தவறாக நினைப்பது போல அல்லாமல், பொருளாதாரத்தில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்வதும், தங்கத்தின் விலை 325டாலராக ஏறக்குறைய இருக்கும் படிக்குப் பார்த்துக்கொள்வதும்தான்.

தங்கம் எப்படி ஒரு தரமாக இருக்க முடியும் என்பது ஒரு பெரிய மர்மம் இல்லை. பொருளாதாரத்துக்கு எவ்வளவு பணப்புழக்கம் இருக்கவேண்டும் என ஃபெட் நிர்ணயம் பண்ணாமல், அதனை சந்தை நிர்ணயம் பண்ணும்படிக்கு விட்டுவிடுவதுதான். டாலரை தங்கத்தால் நிர்ணயம் பண்ணும்படிக்கு வைப்பதும், அமெரிக்க குடிமக்கள் சுதந்திரமாக தங்கத்தை வாங்கவும் விற்கவும் வைப்பதும், வட்டி விகிதங்களை மாற்றுவதை ஃபெட் மறந்துவிட்டு, எவ்வளவு பணப்புழக்கம் வேண்டும் என்பதை தங்கத்தின் விலைகொண்டு நிர்ணயம் செய்யலாம். தங்கம் விலை குறைந்தால் அமெரிக்க பாண்டுகளை வாங்குவதும், தங்கம் விலை ஏறும்போது அமெரிக்க பாண்டுகளை விற்பதும் செய்தாலே போதுமானது. சந்தை தானாக வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்து கொள்ளும்.

காகித டாலர் தங்கம் போலவே நல்லதாகவே இருக்கும். அமெரிக்க அரசாங்கம் தங்கத்தை பதுக்கி வைத்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அதனை மக்களே சந்தையில் செய்து கொள்வார்கள். தங்கத்தின் விலையைக் கொண்டு சந்தையில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஃபெட் தான் தோன்றித்தனமான ஃபெட் கவர்னர்களால் வட்டியைக் குறைப்பதும் கூட்டுவதும் இல்லாமல் இருக்கும். 200 வருடங்களாக இங்கிலாந்து மத்தியவங்கி இவ்வாறுதான் பவுண்டு ஸ்டெர்லிங் பணத்தை நிர்வகித்து வந்தது.

இது எல்லாவற்றையும் எளிதாகச் செய்துவிடலாம் என்பதுதான் நல்ல செய்தி. ஜனாதிபதி புஷ் அவர்களும், நிதி அமைச்சர் பால் ஓனெல் அவர்களும் ஆலன் கிரீன்ஸ்பானுடன் உட்கார்ந்து பேச வேண்டியதுதான். இவ்வாறு அமெரிக்கா செய்ததும், பிரிட்டனும் பின்னாலேயே வந்து தங்கத்தை பவுண்டு ஸ்டெர்லிங் தரமாக ஏற்றுக்கொண்டால், கீழிறங்கும் யூரோவும் நிலைப்படும்.

அலெக்ஸாண்டர் ஹாமில்டன் அவர்கள் சொன்னதுபோல, தங்கத்தரத்தை விட எளிமையானது வேறெதுமில்லை. அவர் முதலாம் அமெரிக்க பாராளுமன்றத்தை தங்கத்தரம் ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைத்தார். ஜனாதிபதி நிக்ஸன் தனது பேனாவால் அதனை மாற்றியது போல, ஜனாதிபதி புஷ் அவர்களும் தன் பேனாவால் அதனை மாற்றலாம். சாதாரண மக்கள் பயன்பெறுவதால், இது மக்களிடம் ஆதரவையும் பெற்றுத்தரும். 1971இல் ஜனாதிபதி நிக்ஸன் தனது பேனாவை எடுத்து காகிதங்களில் கையெழுத்திட்டபோது சொன்னார், ‘ நன் ஏன் இதைச் செய்கிறேன் எனத்தெரியவில்லை. வில்லியம் ஜென்னிங்ஸ் பிரைய்ன் தங்கத்துக்கு எதிராக மூன்றுதடவை போட்டியிட்டு மூன்றுதடவையும் தோற்றார் ‘ என்றார்.