This entry is in the series 20040115_Issue

பா. சத்தியமோகன்


எப்போதும் ஒரு தேவதை பார்த்தபடியே உள்ளாள்
இதை உணரும் போது ஒரு பாதுகாப்பு அமைதி காண்கிறேன்
தேவதை விலகி
தனித்து இயங்கும்போதொரு நிராசைபாடுகிறது
வெதுவெதுப்பு இழந்து வெயில் காய்ச்சிவிடுகிறது
காயங்களின் மீது மழையாக அவள் வரவேணும்
நினைக்கும்போது அவள் சொல்லாகிவிடவேணும்
தேவதையின் கண்ணொளியில் அமிலங்கள் வாரா
கேட்டுக் கொண்டேயிருக்கும் பாடல்கள் யாவிலும்
அவள் உள்ளாள்
அவள் மீது பூச்சொரிய வான் ஏறினேன்
என் மீதே விழுகின்றன பூக்கள்
இது பற்றி மேலும் சொல்ல விழைந்தபோது
எவைரையும் காணோம் உலகெங்கும்
*****
cdl_lavi@sancharnet.in

Series Navigation