அன்னையின் அணைப்பு

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

புஷ்பா கிறிஸ்ரி


அன்னையின் அணைப்பில்
அருமைத் தூக்கம்
உடல் களைத்த போதும்
மனம் இனித்த போதும்
இதயத்தில் கேட்கிறது
டக்.. டக்.. டக்.. என்னும்
அந்தரத்து இதய ஒலி
அடுத்து என்ன நடக்குமோ
எப்படி முடியுமோ என்று
மனமெல்லாம் ஏங்கித் தவிக்கும்
மகனே! மகனே! என்று
அன்று மகன் பிறந்த போது
ஆண்மகன் பிறந்தானென்று
ஆரவாரித்த தாய்மனது
ஆழமாய் மகிழ்வு கொண்டது
இன்று இல்லாளின் இதயத்தில்
இடம்பிடித்த மகனுக்கு
அன்னையிவளின் அரவணைப்பு
பெரிதில்லைத் தான் என்றாலும்
தங்கத் தமிழ் கற்றுத் தந்த
அன்பு அன்னை எங்கே
இன்பம் கூட்டித் தந்தாலும்
இங்கிலீசு பேசும் அவளெங்கே
தாய் என்னும் பெருமைக்குள்
ஒளிந்துகொண்டிருக்கும்
இந்த அன்புத் தெய்வத்திடம்
ஆண்டவன் தந்திருக்கும்
சக்தி எவ்வளவு பெறியது
ஆழமானது,.. ஆத்மார்த்தமாது தானே!

pushpa_christy@yahoo.com

Series Navigation