அதனதன் தனிமைகள்

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

வளத்தூர் தி .ராஜேஷ்சீற்றமிகு தனிமையின்
விளைவை
தன் மவுனத்தில்
வெளிவருவதை
என் அழுகை
காட்டி கொடுத்து விடுகிறது .
பரிமாணத்தின்
பரிசுத்த அக்கண்ணீர்
இக்கணம்
திரவத்தின் தலைவன் ஆனது.
அக்கண்ணீர் தன் இயக்கத்தின்
வீற்றிருக்கும் தன்மை
அளப்பரியது .

அழுகை நேர்கின்ற நிகழ்வை
மனதை வெற்றிடத்தின்
உச்சத்திற்கு அழைத்து
செல்லும் வாயிலில் நின்று
வரவேற்பை நிகழ்த்துகிறது
சூழ்நிலையும்
தன் வெறுப்பு நிலையையும் .

கூடுமானவரை இதை உங்களாலும்
தவிர்க்க முடியாதது
காலத்தின் குற்றமல்ல
உயிரினங்களின் அறியாமையே
காரணமாக்கப்படும் .
அதில் இப்பொழுது முதன்மையானது
நானும் அதன் கண்ணீரும்
அதனதன் தனிமைகளும் தான் .
-வளத்தூர் தி .ராஜேஷ் .

Series Navigation