அடுத்த ஏழு நாட்கள் ட்ராஃபிக் எப்படி இருக்கும்- ஊகித்துச் சொல்லும் நடைமுறைகள்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமன்


Smart traffic forecast offers seven-day predictions

• 18:17 29 June 2005. Newscientist.com

தட்ப வெட்ப நிலைகளை முன்னே ஓரளவு ஊகித்துச் சொல்ல முடியும். இப்போதெல்லாம் ஒரு ஐந்து நாட்களுக்கு முன்னே நன்கு ஊகித்துச் சொல்லும் நடைமுறைகள் மூலம் தொலைக்காட்சியில் வெப்பம், மழை அளவைத் துல்யமாகக் கூறுகின்றார்கள். நம் சன் டி.வி. போன்றவை இன்னும் அந்த அளவிற்கு முன்னேற்றமடையவில்லை. இன்று கூட வெளிறிய இன்சாட் படத்தைக் காண்பித்து பெய்த மழை, சுட்ட வெயில் போன்றவற்றைக் காண்பித்து தமது வானிலை அறிக்கைகளை முடித்து விடுகின்றனர். மேலை நாடுகள், மற்றும் சிங்கப்பூர், ஜப்பான், கொரியா போன்ற கீழை நாடுகளில் நல்ல திறம் வாய்ந்த நிபுணர்களின் கருத்து, கம்ப்யூட்டர்களை உபயோகித்து வானிலை அறிக்கைகளைத் தயார் செய்து அடுத்த ஐந்து நாட்கள் எப்படி இருக்குமென்று மக்களைத் தயார் படுத்துகின்றனர்.

இந்தியா, இலங்கைத் தவிர மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இவற்றைப் பற்றி நன்கு தெரியும். இம்மாதம் முதல் அமெரிக்காவில் சாக்ரமாண்டோவில் உள்ள KXTVNews 10 டி.வியில், அடுத்த ஏழு நாட்கள் ட்ராஃபிக் எப்படி இருக்கும் என்று 3-D முபரிமாணத்தில் ஊகித்துச் ஷொல்லப் போகிறார்கள். நான் அடுத்த நாலு நாட்களில் சென்னையில் உள்ள தி. நகரில் உஸ்மான் ரோட்டிற்குப் போவதை எப்படி ஊகிக்க முடியும் ?. முடியாது. ஆனால், கடந்த ஐந்து வருடங்களாய் மாலை 5 மணி முதல் 7 மணி வரைக்கும் பனகல் பார்க்கில் எவ்வளவு ஆயிரம் வண்டிகள், எத்தனை விபத்துக்கள்,எத்தனை தடவை வண்டிகள் ஒரேடியாக நின்றன போன்றவற்றை கணிணியில் தொகுத்து, ஓரளவு 5-7 மணி வரைக்கும் பனகல் பார்க் போகாதே என்று மற்றவர்களிடம் சொல்ல முடியும்.

எங்க ஊர் (சென்னை) ஆட்டோக்காரர், ‘நான் சொல்றேன், எப்படியும் கொண்டு விடுவேன், ‘ என்று சொல்வார். ஆனால் இந்த மாதிரி விஞ்ஞான உதவிகளைக் கொண்டு நம்மால், பனகல் பார்க் பக்கம் போகாத மாதிரித் தடுக்க முடியும். தலைவர்கள் பிறந்த நாட்கள், பெரு விழாக்கள் வருமுன்னே நம்மை அறிவித்து டி.வியில், எச்சரிக்கை செய்தால் பனகல் பார்க் பக்கம் போக பைத்தியமா, எனக்கு ?.

இப்போது FM ரேடியோவில் தற்போதைய டிராஃபிக் சொல்கின்றனர். அமெரிக்காவில் வரவிருக்கும் இந்தப் புது அறிவிப்பினைத் தொடர்ந்து, மற்ற மாநிலத் தொலைக்காட்சிகளிலும், டிராஃபிக் அறிவிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளனர். இப்போது தி. நகரையே எடுத்துக் கொள்வோம், சென்னை வாசிகளுக்கு, ஆடித் தள்ளுபடி, மற்றும் பண்டிகை காலங்கள், அஷய திருதியைப் போன்ற நாட்களில் திடார் கூட்டம் வருமென்று தெரியும். அப்போது பாண்டி பஜார், ரெங்கநாதன் தெரு போன்றவற்றின் அருகே செல்லத் தயங்குவர். வெளிநாடு, மாநில, வெளி ஊர்களிலிருந்து வருபவர்களுக்குத் தெரியாது. ஒரு வாரமுன்னே தொலைக்காட்சியில் அங்கு சென்றால் தொல்லைப் படுவீரென்று எச்சரிக்கை செய்யலாம்.

மேலும் ஒருபடி மேல் போய், போதீஸ் பக்கம், சென்னை சில்க்ஸ் பக்கம் மட்டும் செல்லாதீர், நாய்டு ?ால் பக்கம் போகலாம் என்று கூறினால் நன்றாக இருக்கும். 4.30 மணி முதல் 5.30 மணி வரைக்கும் குமரன் சில்க்ஸ் ரோடு பக்கம் ஓகே வாக இருக்கும். 7.15 மணி முதல் 8.00 M மணி வரை சென்னலி சில்க்ஸ் போய் வரலாம் என்றால் நமக்கு அந்த விஷயங்கள் செளகரியம் தானே ?. 8.00 மணி முதல் 9.00 மணி வரை சென்னை அண்ணா சாலையில் தலைவர் பிறந்த நாளையொட்டி ஊர்வலம் இருக்கலாம். ஆகவே பீச் பக்கமாக அலுவுலகம் செல்லுங்கள் என்றால் கேட்டு நடக்கலாம். இதையே 3-D கிராஃபிக்ஸ் ரேஞ்சில் சொன்னால், அந்நியன் படத்தில் பார்த்த மாதிரி நம்மூர் சிங்கப்பூர், ஷாங்காய் போன்று மிளிரலாம்.

அக்டோபர் 10 என்றால் மழை பெய்து, ஜி.என்.செட்டி வீதி தண்ணீர் தேங்கி குளமாகும். ஆகவே பெருமக்களே அங்கு போகாதீர்கள். நவம்பர் 15 பெய்யும் மழையினால் கோயம்பேடு சகதியாகும், புது ஆடை அணிய வேண்டாமென்றால் அதுவும் ஒரு வசதியே !. ராமகிருஷ்ணா பள்ளிச் சிறுமியெனர் வெளி வரும் பொன்னான நேரம் மதியம் 3.30 மணி. ஆகவே வண்டிகள் அப்பக்கம் செல்ல தாமதமாகுமென்றால், என் வண்டியை வேறு வழியேத் திருப்பத் தயங்கமாட்டேன். சென்னையில் பக்கத்து தெருவில் இருப்பவனுக்கு கூட அடுத்த தெருவில் நடக்கும் விஷயங்கள் அதிகம் தெரியாது. இம்மாதிரி ஒரே மாதிரி நடக்கும் பொது விஷயங்களை; பொது விழாக்களைப் பதிவு செய்து அனைவருக்கும் தெரிவித்தால், நாம் வாழும் நகர வாழ்க்கை அடுத்தக் கட்டத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். 1.30 மதியம் வைகை எக்ஸ்பிரஸ் வரும் நேரம். எக்மோரின் அருகே வண்டிகள் நடமாட்டல் அதிகமென்றால், நாம் ஏன் அங்கு அச்சமயம் போவோம் ?.

மேலும், எங்கேயெல்லாம் மழை பெய்தால் சாக்கடை அடைபெய்யுமோ அதை சிவப்பு நிறத்தில் காட்டி வாகனங்களை எச்சரிக்கை செய்யலாம். நமது நகரத்தினை மென்மேலும் சிறப்படையச் செய்தல் நம் கடமை.

Krishnakumar_Venkatrama@CSX.com

Series Navigation