அங்கீகாரம்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

பவளமணி பிரகாசம்


ஏட்டில் எழுதாத இலக்கியம்
பாட்டில் பாடாத காவியம்
கல்லில் சொல்லாத அற்புதம்
வண்ணத்தில் வரையாத அதிசயம்
எண்ணத்தில் எழுந்திடா கவிநயம்
நீயேதானடி என்றென்னை நீ
பாராட்டவில்லை என்ற குறை
இன்று வரை எனக்கில்லை-
ஆண்வர்க்கத்து கண்ணொன்று
என் மீது பட்டதுமே துடிப்பாய்
இது போதும் என் மனம் மகிழ,
மெளன அங்கீகாரமல்லவோ!
—————————————————————–
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்