அக்கினிப் பூக்கள் … !-3

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

சி. ஜெயபாரதன், கனடா


ஊனக்கண் பகலில் பார்க்கும் !
பூனைக்கண் இரவில் நோக்கும் !
ஞானக்கண் புது விதியைக் காணும் !
யானைக்கு எக்ஸ்ரே கண்ணாம்
ஞானப் பெண்ணே !

கத்தி மொட்டையாய் ஆகுது !
சித்தம் குட்டையாய் இருக்குது !
புத்தியைத் தீட்டக்
கத்தியைத் தீட்டுவதா
ஞானப் பெண்ணே ?

மதஞானம் மாந்தர்க்கு வேர் !
மெய்ஞானம் மரக்கிளை !
விஞ்ஞானம் விழுதுகள் !
அஞ்ஞானி தேடுவான் மூன்றும்
ஞானப் பெண்ணே !

இரட்டைப் பழம் வீழ்த்தலாம்
ஒரு கல் வீசி !
இரட்டை முயலில் பிடிபடாது எதுவும்
விரட்டிச் சென்றால்
ஞானப் பெண்ணே !

வேதம் படைத்த ஜாதிகள்
நாலா ? நாற்பதா ? நாலா யிரமா ?
ஜாதிகள் இரண்டு ஆண், பெண்
மேனி அமைப்பில்
ஞானப் பெண்ணே !

பிரபஞ்சத்தில் கருமைப் பிண்டம்
கவர்ச்சி விசை ! கருமைச் சக்தி
குதிரைச் சக்தி !
விழிக்குத் தெரியா விரிப்பு விசை !
ஞானப் பெண்ணே !

+++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) Dec 3, 2007

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா