அகதியாயும் அனாதையாயும்…

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

சங்கைத்தீபன்


அகதியாயும் அனாதையாயும்…
வானத்தின் கீழிருந்தேன்
மழைகள் கிடைத்தது
மேகத்தின் கீழ்
விழுந்தன குண்டுகள்

ஊர் மரத்தின் கீழிருந்தேன்
கறுப்புநிழல் நிம்மதி
இந்தமரத்தில்
பறவைகள் எச்சம்
போதிமரமும் அப்படியே

கிரீடம் கிடைத்தது
சிலுவையின் கீழ்
தலையில் முள்ளு

பட்டம் கிடைத்தது
தரப்பாளின் கீள்
அகதி

பட்டியல் கிடைத்தது
அகதியின் கீழ்
அனாதை.

சங்கைத்தீபன்
29.3.09
பயிர்பிடித்து உயிர்விட்டு
வெறும்கால்
முள்ளுக்குத்தும் வலிதெரியாது

கண்தெரியும்
புழுதிபறக்கும் கண்ணில்கொட்டும்

காது கேட்காது
விமானம் குத்தும் சத்தம் சிதறும்

பிள்ளையை நெஞ்சோடுஅணைத்து
பிதுங்கிய விழியோடு
பதுங்குகுழிவாசலில் குனிந்தாள்

அணைத்தபடி கையிக்க
உயிர் உரிந்துகொண்டிருக்க
பக்கத்துவீட்டுக்காரி…

சங்கைத்தீபன்
11.3.09

Series Navigation

சங்கைத்தீபன்

சங்கைத்தீபன்