திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080501_Issue

அரசியலும் சமூகமும்

சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)

எஸ்ஸார்சிசம்பந்தமில்லை என்றாலும் திராவிடத்தால் வீழ்ந்தோம் ஆசிரியர்: குணா, வெளியீடு: தமிழக ஆய்வரண் பெங்களூர் நவம்-திசம்பர்-1994 விலை உருபா 10.00 பக்கம்-82 ---------------------------------------------------------------------------------------------------------------------- ஞா. தேவநேயப்பாவாணர் நினைவாக,,,,,,,, ---------------------------------------------------------------------------------------------------------------------- இந்திக்காரன் இந்திக்காரனாக வாழ்கிறான்,கன்னடன் கன்னடனாக வாழ்கிறான்…

மன மோகன சிங்கம்!

விபா வோட்டுக் கேட்டு, வீட்டுக்கு வருகிறார் ஒரு அரசியல் வாதி. புல் தரையில், ஜாலியாக உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கும் இளைஞன் கேட்கிறான் "உங்கள் தகுதி என்ன?" வந்தவர் கோபமுற்று, "என்ன, என்னை வேலைக்கு…

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3

நாகரத்தினம் கிருஷ்ணா என்ன இருந்தாலும் அந்தக்காலம் போல வருமா? என மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்கிற பெருசுகளை திருப்தி பண்ணனுங்கிறதுக்காகவே நடந்திருக்கணும். நாள் 24-4-2008, சம்பவம் நடந்த இடம் பிரான்சு நாட்டின் மேற்கிலுள்ள உலகப்…

சார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”

பாவண்ணன் ஒரு மொழியின் இலக்கிய வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கு கடுமையான உழைப்பும் சார்பற்ற மனநிலையும் தேவைப்படுகின்றன. உழைப்பின் அளவில் குறை நேரும்போது போதுமான ஆதாரங்களுடன் ஒன்றை முன்வைக்கமுடியாத தடுமாற்றம் நேரும். சார்பற்றுப் பார்க்க முடியாதபோது,…

Last Kilo byt – 13 : ஆடை..

கே. ஆர். மணிஆடை விசயம் அதிகமாக பேசப்படுகிறது. கிரிக்கெட்டில் எதிர்ப்புகளுக்கு பிறகு கொஞ்சம் மூடி சியர்ஸ் லீடர்கள் வருகிறார்கள். முன்னாலிருந்ததைப்போலில்லை. இப்போது பாதிக்குமேலே மூடி, பார்க்க நன்றாகவேயில்லை. எதுவும் செய்யாமலிருந்தால் அடிதடி கலாட்டாவில் இறங்கி…

அறிவிப்புகள்

தன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு

கார்கில் ஜெய்தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். திரு தமிழநம்பி அவர்களுக்கு, சிறுபாசனம் என்று திருத்தியமைக்கு என் மனப்பூர்வமான நன்றி. ‘அனுபவ’த்துக்கும் இணையான, சுளுவாக பயன் படக்கூடிய சொல்லையும் நீங்கள் சொல்லியிருந்தால்…

தமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா

தகவல்: ரெ.கார்த்திகேசுமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா (தகவல்: ரெ.கார்த்திகேசு) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மலேசியத் துணைக்கோள தொலைக்காட்சி…

நூல் வெளியீட்டு விழா

அறிவிப்பு எனது புதிய வெளியீடுகளான ~உனையே மயல்கொண்டு (நாவல்), வாழும்சுவடுகள் தொகுதி -2 (கதைகள்) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (04-05-2008) மாலை 4-30 மணிக்கு…

குரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’

எம். சரவணன்வணக்கம். தங்கள் இணையத்தளதில் வெளிவந்த குரு அரவிந்தனின் 'ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது' என்ற சிறுகதை மிகவும் நன்றாக இருந்தது. 'என்னுடைய அப்பாவும் நல்லவர்தான்' என்ற உண்மையை பிரியங்காவிற்கு நளினி எடுத்துச் சொல்வது…

பெயர் முக்கியம்!

இப்னு பஷீர்சமீபத்தில் ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. American Council of Learned Societies என்ற அமைப்பு சையிது குதுப் என்ற எகிப்து அறிஞர் அரபியில் எழுதிய நூலை ஆங்கிலத்தில் "Social Justice in…

‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்

மு.இளங்கோவன்திண்ணையில் வெளியான 'தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்' என்ற என் கட்டுரை பற்றி,சென்ற திண்ணையில்(25.04.08) சடாயு கருத்துகளையும் அவரின் இணையப்பக்கத்தில் உள்ளஅவர்தம் கொள்கை முழக்கங்களையும் காணும்போது அவர் யார் என்பதையும், அவர்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ?(கட்டுரை: 27)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகோடான கோடி ஆண்டுகளாய் உயிர்களுக்கும், பயிர்களுக்கும் ஓடும் நதிகளுக்கும் ஓயாத அலைகளுக்கும் வாயுக் குடை பிடிக்கும் மாயத் தலைவன் யாரப்பா ? அளப்பரிய இடி மின்னல் சுழற்றி…

இலக்கிய கட்டுரைகள்

தமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா

தகவல்: ரெ.கார்த்திகேசுமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மலேசியத் துணைக்கோள தொலைக்காட்சி நிறுவனமான அஸ்ட்ரோவின் வானவில் ஒளியலையும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டி இரண்டின் முடிவுகளின் அறிவிப்பும் பரிசளிப்பு நிகழ்வும் ஏப்ரல் 12ஆம்…

தீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி

ஜெயஸ்ரீ தவிப்பு என்னும் உணர்வு மிகவும் வினோதமானது. மகிழ்ச்சியோ துக்கமோ இயலாமையோ மேலிடும்போது ஏற்படும் இந்தத் தவிப்புக்கு சில சமயங்களில் வடிகால் கிடைப்பதுண்டு. பல சமயங்களில் கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றை வாய்திறந்து வெளியிடவும்…

ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா

வெங்கட் சாமிநாதன் பெரனாக்கான் என்றால் என்ன என்று இதை வாசிப்பவர் எவருக்காவது தெரியுமா? யோசிக்க வேண்டாம், பதிலைத் தேடும் பாவனையில் ஆகாயத்தைப் பார்க்க வேண்டாம். சிந்திக்கும் பாவனையில் தலையைச் சொரிந்து கொடுத்துக் கொள்ளவும் வேண்டாம்.…

ஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்

முனைவர் மு.இளங்கோவன் நாம் வாழும் இப்பூமிப்பந்தினைச் சூழ இருப்பது கடல்.இக்கடலின் இயற்கை அழகில் மாந்த இனம் மகிழ்ச்சியடைகின்றது. கடல் தரும் வளங்களைப் பயன்படுத்தும் இம்மக்கள் திரள் கடலின் சீற்றத்திற்குப் பலமுறை ஆளாகியுள்ளனர்.பல உயிர், உடைமைகளை,…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்

வே.சபாநாயகம் 1. நல்ல கலை வெளிப்பாடு, மனிதன் மீது அக்கறை மனிதனின் தவிர்க்கக்கூடிய மற்றும் தவிர்க்க இயலாத தவிப்புகளையும் பிரதிபலித்தே ஆகவேண்டும்' 2. ஒவ்வொரு கணமும் அனைத்து மனிதர்களுக்கும் ஏராளமான அனுபவங்க¨ளைத் தந்து விட்டுத்தான்…

கொஞ்சமாய்ப் பேசுவோம், ஆன்மிகம்

மலர் மன்னன் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய சமாசாரம். ஆனால் நேற்றுப் போலத்தான் இருக்கிறது. ஓர் அதிகாலையில் பிரும்ம முஹூர்த்தம் என்று சொல்வார்களே அம்மாதிரியான ஒரு வேளையில் பொட்டில் தெறித்த மாதிரி எனக்கு இறையுணர்வு வரப்…

உண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”

பாவண்ணன் கேரள மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் நாராயணகுரு. அவருடைய சீடர்களில் முக்கியமானவர் நடராஜ குரு. அவருடைய சீடர்களில் முக்கியமானவர் நித்ய சைதன்ய யதி. குரு சீடர் உரையாடல் வழியாக ஒருபோதும் வற்றாத காட்டாறாக…

இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா

ரஞ்சனி - புத்தக வெளியீட்டு விழாக்களும் பணச்சடங்குகளாக வியாபித்துள்ளன என நான் எழுதிய கட்டுரை சித்திரை 11ம் திகதி வைகறையில் பிரசுரமாகி இருந்தது. அதில் நான் தெரிவித்த சில எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலும் சில…

நாசமத்துப் போ !

அப்துல் கையூம் “உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?” – பாடலொன்றில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நம்மைப் பார்த்து கேட்கின்ற கேள்வி இது. ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களில் அமெரிக்கன் வீசினானே அதுபோன்ற வலிமைமிக்க அணுகுண்டா அல்லது கண்டம்…

கதைகள்

பெயர்வு: புலமும்! புலனும்?

வ.ந.கிரிதரன் அன்று வந்திருந்த மின்னஞ்சல்களை ஒவ்வொன்றாக மேலோட்டமாகப் பார்த்து விட்டு, அவற்றில் இணைய இதழுக்கு வந்திருந்த மின்னஞ்ல்களை அந்த மாதத்திற்குரிய 'போல்ட'ரில் சேமித்துக் கொண்டிருந்தேன். எல்லாம் நான் தற்செயலாக இணையத்தில் ஆரம்பித்திருந்த ''எண்ணங்கள்' இணைய…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எத்தகை வேலைப் படைப்பு இந்த மனிதன் ! எத்தனை உன்னதம் ஏனென்று ஆய்வதில் ! முடிவிலா வினைத்திறம் எப்படி நீள்வது ! வடிவிலும், நடையிலும் எத்தகை மகத்துவம் !…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாம் 9 வசந்திக்கு திருமணமான அடுத்த வாரமே பி.ஏ. ரிசல்ட்ஸ் வந்து விட்டன். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாள். சிநேகிதிகள் எல்லோரும் வாழ்த்துக்களை தெரிவித்த போது வசந்திக்கு ஒரு…

கடல் மீன்

கே ராமப்ரசாத்அப்பறவையானது உயர்ந்த விஷங்கள், உணவு இதில் மட்டும் கவனம் செலுத்தும். உணவாக கிடைப்பதற்கு அரிதான கனிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும். குடிக்க மூங்கில் உள்ளே தேங்கி நிற்கும் மழை நீரை மட்டுமே பருகும்.…

அவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது !

எம்.ரிஷான் ஷெரீப் அவள் : அரசு மருத்துவமனைகள் எப்பொழுதுமே ஒரு விதமான,பிரத்தியேகமான நெடியினைக் கொண்டிருக்கின்றன.நோயாளிகளாக வருபவர்களும் சரி,அவர்களைப் பார்வையிட வருபவர்களும் சரி நுழைவாயிலால் உள்நுழைந்த முதல்கணம் முகம் சுழிப்பதைக் காணலாம். அப்படியானதொரு மருத்துவமனையில்தான் அவளொரு…

காதலும் காமமும்

வேந்தன் சரவணன்அவனைச் சுற்றி ஒரு கூட்டமே உட்கார்ந்திருந்தது. அவனது பெற்றோரும் உடன்பிறப்புக்களும் முகத்தில் கவலைக் குறிகளுடன் காணப்பட்டனர். அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த பூசா¡¢ கையில் இருந்த உடுக்கையை பலமாக அடித்துக் கொண்டே கேட்டார். ‘யார்…

நாய்கள்

ச.சர்வோத்தமன்  1  பீடியை பற்ற வைத்தான் சிவன்.தனக்கும் ஒன்று என்றவாறு கையை நீட்டினான் ராவ்.சாந்தமான சிநேகமான முகம்.என்ன சவரக் கத்தி முகத்தில் பட்டு தான் இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும்.இருவரும் மூடப்பட்டு இருந்த கடையின் சிமெண்ட்  படிக்கட்டுகளில் அமர்ந்து …

கலைகள்

இலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு

பாரதி மகேந்திரன் சத்தான காலை உணவு தீட்டப்பாத சிவப்பு அரிசி (கைக்குத்தல்) - 500 கிராம் கறுப்பு உளுந்து - 50 கிராம் பச்சைப் பயறு - 50 கிராம் துவரம் பருப்பு -…

கவிதைகள்

பத்து கவிதைகள்

பாவண்ணன் 1. அதிகாலையின் அமைதியில் குளிர்பனியில் நடுங்கும் காலையில் கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென அங்கங்கே நிற்கின்றன பேருந்துநிலைய வாகனங்கள் உச்சியில் ஏறி காய்கறிக்கூடைகளை அடுக்குகிறார்கள் கூலிக்காரர்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன பூமூட்டைகள்…

அன்பு

ஆதிராஜ் அன்பெனப் படுவதே ஆவியின் கவசம்1 அன்பேனப் படுவதே அவனியின் ஜீவன்! அன்புடை வாழ்க்கை அறிவுடை வாழ்க்கை! அன்புள உளமே அமுதுள கலசம்! புத்தன் என்னும் புண்ணியன் புவிக்குச் சத்துள மருந்தெனச் சாற்றிய தன்பே!…

காற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் வைர மணிகள் உண்டோ ? சீர்பெற்று வாழ்வற்கே - உன்னைப்போல் செல்வம் பிரிது முண்டோ ? பாரதியார் (கண்ணம்மா என் குழந்தை)

கிணத்தினுள் இறங்கிய கிராமம்

தீபச்செல்வன்எனது கிராமம் இப்பொழுது கிணத்தினுள் இறங்கியிருக்கிறது. தவளைகள் தரித்திருக்கும் பொந்துகளினுள் ஒளிந்திருக்கும் அம்மாவே உன்னைப் போன்ற நமது கனவுகள் நிரம்பிய பைகள் மாமரத்தில் தொங்கியபடியிருக்கிறது. நீயும் நானும் நமது சனங்களைப்போலவே இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம். காட்டில்…

தாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உலகத்தின் கொடூர எடைக்கோல் கணிப்பிலும் கிடைக்கும் உதைக்கு மத்தியிலும் தவிக்கிறேன் இப்போது ! என் தோற்றத்தை எழிலாக ஒப்பனை செய்யும் கழுத்தணி, காதணி, வளையல், பொன்னா பரணம்…

நம் பையில் சில ஓட்டைகள்

இராம. வயிரவன்நம் பையில் சில ஓட்டைகள் * அதன்வழி உறவுகள் விழுந்து தொலைகின்றன * நான் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமலிருக்கிறேன் * முடிவில் எஞ்சியிருக்கும் நீயும் தொலைந்து போகலாம் * அப்போதும் நான்…

எத்தகைப் படைப்பு இந்த மனிதன் !

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் ! எத்தனை உன்னதம் ஏனென்று ஆய்வதில் ! எப்படி நீண்டது முடிவிலா வினைத்திறம் ! எத்தகை மகத்துவம் வடிவிலும், நடையிலும் ! சேவை புரிவதில்…

ஒப்பனை உறவுகள்

கண்டனூர் சசிகுமார் நான் மட்டுமல்ல நம்மில் பலரும் நம்மோடு சிலரும் ஒப்பனையாகவே உலாவிக்கொண்டிருக்கிறோம் இதயத்தில் பெருவலி இருமுறையான போதும் இருக்கின்ற ஒருமகளை இணைகரம் சேர்த்திடவே ஒப்பனையாய் உதடுகளில் ஒன்றுமில்லை நலம்தான்….!!!! நாளுக்கு நாள்மாறும் நாகரீகச்…

’புத்தகங்கள்’

கே.பாலமுருகன் மேசை மீது கட்டிலுக்கடியில் கண்ணாடி அலமாரியின் விளிம்பில். . . . குளியலறையின் கதவுக்கு அருகிலுள்ள சட்டத்தில் துணி அலமாரியின் 3ஆவது டுரோவரில். . . . புத்தகங்கள் நிரம்பிக் கிடக்கின்றன! கனவில்கூட…

கவிதைகள்

பஹீமாஜஹான்தோட்டம்: அறுவடை ஓய்ந்த வயல் வரப்புகளில் மந்தைகள் மேயவரும் காலங்களில் கோடை தன் மூச்சைக் கட்டவிழ்க்கும் ஆற்றங்கரைத் தோட்டத்துப் பசுமையும் கருகும் “தண்ணீர் தேடிப் பாம்பலையும் காட்டில் திரியாதே” அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்…

நகைச்சுவை

பெயரிலி!

லக்கிலுக் வைணவ - சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால்…

பிறந்த நாள்

வே பிச்சுமணி எனக்கு சின்ன வயசில் இருந்து திருமணமாகும் வரை, பிறந்த நாள் ஆண்டுக்கு ஆண்டு நிறைய மக்கள் கொண்டாடுவார்கள் என தெரியாது. தலைவர்கள்,நடிகர்கள் ஆகியவர்கள் தான் ஆண்டுக்கு ஆண்டு கொண்டாடுவார்கள் என நினைத்திருந்தேன்.…

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! – கல்வி!

அகரம்.அமுதா முதுகில்புக்ஸ் மூட்டை சுமந்துநான் போக பொதிகழுதை கண்டு புலம்பும் -அதுக்கிருக்கும் நல்ல குணங்கூட நாலுபேர்க் கில்லையிக் கல்வியென் மேலெரிந்த கல்! எழுதிகை சோர்ந்து விரல்தேய்ந்து ரேகை அழிந்துகண் பார்வை குறைந்துப் -பழுதாகிக் கண்ணாடி…