திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060203_Issue

அரசியலும் சமூகமும்

மீள் வாசிப்பில் சூபிசம்

ஹெச்.ஜி.ரசூல் சூபிகள்- இஸ்லாமிய மெய்ஞானிகளாக, சித்தர்களாக, அடையாளப்படுத்தபடுகின்றனர். உலகியல் சார்ந்த அறவியல் கோட்பாடுகளையும், ஆன்மீகம் சார் வாழ்வியல் நெறிகளையும் ஒருங்கிணைத்து மனிதகுலத்திற்கு வழிகாட்டும் மார்க்கமாக இஸ்லாம் தன்னை அர்த்தப்படுத்தியுள்ளது. தொழுகை, நோன்பு, புனித ஹஜ்பயணம்…

உறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை

மலர்மன்னன் 'ஹிட்லரை விதந்தேத்தும் கோல்வல்கர் பரம்பரைக்கு உறைக்காதுதான் ' என்கிறார்களே, அப்படியென்றால் என்ன என்று இளந்தலைமுறையினர் என்னிடம் கேட்கிறார்கள். அது எம் போன்றோர் கழுத்தில் விழும் மாலை என்று மெய்யாகவே, மெய்யாகவே அவர்களுக்குத் தெரிவித்துக்…

காசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் அவுரங்கசீப் ஏன் காசி விசுவநாதர் ஆலயத்தை உடைத்தார் என்பதற்காக 'மதச்சார்பற்ற ' (அதாவது தாலிபான் ஆதரவாளர்கள், ஸ்டாலினிச ஆதரவாளர்கள் மற்றும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ ஆதரவாளர்களின் தழுக்குப் பெயர்) அறிவுஜீவிகள் கொடுக்கும்…

மண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்

மலர் மன்னன் நண்பர் கற்பக விநாயகம் எனது கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவதன் மூலம் தவறான தகவல்களை அளிப்பதாலும் எனது தகவல்களை முழுமையாகப் படிக்காமலேயே பதிலிறுக்கத் தொடங்கிவிடுவதாலும் எனக்கு ஆதாரப்பூர்வமாகத் தகவல்களைப் பதிவு செய்யும் வாய்ப்பு மேலும்…

ஊடகங்களில் சில கரும்புள்ளிகள்

ஜெயக்குமார் 'ஒரு எழுத்தாணி குனிந்து நிமிர்ந்தால் ஒரு குனிந்து கிடக்கும் சமுதாயம் நிமிரவேண்டும் ' என்பது சான்றோர்களின் கருத்து. ஒரு எழுத்தாளனும் அவனுடைய எழுத்தும் எப்படி இருக்கவேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தத்தான் அவர்கள் அப்படி…

இணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்

முனைவர் மு. பழனியப்பன் இணையம் தற்போது மக்களுக்குத் தேவையானச் செய்திகளை அள்ளித்தரும் அமுதசுரபியாக விளங்கி வருகிறது. உள்ளூர் செய்திகள், வெளியூர் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், அயல் கண்டச் செய்திகள் எனப் பலவகைச் செய்திகளை விரல்…

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1

வ ந கிரிதரன் ( தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 1996இல் வெளிவந்த நூலிது. இது பற்றிக் கணையாழி இதழில் நா.இராமசந்திரன் நூல் மதிப்புரையொன்றும் எழுதியுள்ளார்.) ஈழத்தமிழர்களின் நகர அமைப்புக் கலை பற்றிய ஆய்வு…

மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1

டேனியல் டெனெட் (தமிழில்: ஆசாரகீனன்) (மதிவழி படைப்புத் திட்டம்1 மறுபடியும் அமெரிக்காவில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால், இதில் என்ன கவர்ச்சி ? படைப்புவாதத்திற்கு2 உள்ள கவர்ச்சி, மதம் எப்படி டார்வினிய சிந்தனைகளுக்கு இரையாயிற்று, மதவழி…

எடின்பரோ குறிப்புகள்-8

இரா முருகன் பனி பெய்யாமலேயே கூடுதலாகப் படரும் தணுப்பும், சூரியன் தட்டுப்படாத வானமும், வானத்தில் அவ்வப்போது நீள ஓசையிட்டுப் போகிற ஒற்றைப் பறவையும், ஆள் அரவம் இல்லாத தெருக்களும், அடைத்த கடைவாசல்களில் சாப்பாட்டு மிச்சங்களும்,…

எதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் ?

மலர் மன்னன் அடிப்படையில் பார்க்கிறபோது வெறும் துவேஷத்தின் வெளிப்பாடுகளாகத்தான் எதிர்வினைகள் வருகின்றன. அவற்றுக்கும் ந்ிதானமிழக்காமல், மனதைப் புண்படுத்தாமல், விளக்கம் அளிக்க இயலும் என்றாலும், இவ்வாறு விளக்கம் அளித்துக்கொண்டிருப்பதாலேயே சொல்லவேண்டிய எத்தனையோ சங்கதிகளைச் சொல்வதற்குத் தடங்கலும்…

அறிவிப்புகள்

ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை

வஹ்ஹாபி 'நவீன முதலாளித்துவத்தின் பண்பாட்டுக் குரலாக இஸ்லாத்தினுள் வஹ்ஹாபிஸக் கோட்பாடு உருவாகி உள்ளதாக 'க் கட்டுரையாளர் தொடங்குகிறார். வட்டி, வரதட்சணை, புரோகிதம், சமாதிகளின் பெயரால் உண்டியல் போன்ற சமூகச் சுரண்டல்களுக்கு எதிராகப் போராடுகின்ற வஹ்ஹாபிகளின்…

கடிதம்

பெருந்தேவி கோ. ராஜாராம் அவர்களின் சண்டைக்கோழி படவிவகாரம் பற்றிய 'பிறவழிப்பாதைகள் ' குறிப்புகளின் கடிதம் வாசித்தேன். எஸ். ராமகிருஷ்ணனின் 'நோக்கம் ' வலைப்பக்கங்களிலும், தனிப்பட்ட நண்பர் குழாங்களிலும் தொடர்ந்து பேச்சுப்பொருளாகியிருக்கிறது. ஆனால், இந்த நோக்கம்…

K. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை

கரு. ஆறுமுகத்தமிழன் நான் தமிழ்ப் பேராசிரியன் அல்லேன். தினமணியில் தமிழ்ப் பேராசிரியன் என்று குறிக்கவுமில்லை. பேராசிரியன் என்று குறித்திருந்தார்கள். அதையும்கூட அவர்கள் குறித்திருக்கவேண்டாம். அடையாளங்கள் இல்லாமல் வெறும் ஆறுமுகத்தமிழனாக எழுதினால் யார் இந்தக் கோவணாண்டி…

மலர்களும் முட்களும்

புதியமாதவி மலர்மன்னன் கட்டுரைகளை முன்வைத்து... 'அவரவர் புத்தி சாதுரியம் காட்டி, ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலுக்காகத்தானா விவாதம் செய்கிறோம் ? அதுதான் விவாதம் எனில் அவரவர் தத்தம் கருத்தில் மேலும் மேலும் பிடிவாதம் கொள்வதற்குத்தான்…

‘ வடக்கு வாசல் ‘ – மாத இதழுக்கு உதவுங்கள்

அறிவிப்பு தில்லியிலிருந்து 'வ்டக்குவாசல் ' பத்திரிகையை திரு. பென்னேஸ்வரன் பல பிரச்சினைகளுக்கிடையே நடத்தி வருகிறார். இது வரை மாதம் தவறாமல் ஐந்து இதழ்கள் வெளிவந்துள்ளன. பத்திரிகைக்கு சந்தா கட்டிப் படித்துப் பாருங்கள். அது தொடர்ந்து…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணுவும் ஆன்மீகமும்

அ. ஸநத்குமார் அணுவும் ஆன்மீகமும் என்ற தலைப்பே கொஞ்சம் விசித்திரமாகவும் பொருத்தமற்றதாகவும் சிலருக்குத் தோன்றலாம். வேறு சிலர் அணுவில் ஆன்மீகம் எங்கு வந்தது என்றும் யோசிக்கலாம். எனினும் அணு என்பது ஆன்மீகத்திற்கு புதிதான ஒரு…

செவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் [Rover Explorations on Planet Mars (2006)]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது '. ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer…

இலக்கிய கட்டுரைகள்

உறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்

சுரேஷ் கண்ணன் உறுபசி (நாவல்) - எஸ்.ராமகிருஷ்ணன். உயிர்மை பதிப்பகம். ரூ.75/- பக் 135 மத்திம வயதிலிருக்கும் எந்தவொரு மனிதனும் தான் கடந்து வந்த வாழ்க்கையின் நிறைவான, சுதந்திரமாக வாழ்ந்த கட்டங்களை பின்னோக்குகையில் அது…

விளக்கு விருது – ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம்

வெளி ரெங்கராஜன் ஞானக்கூத்தனுக்கு விளக்கு விருது வழங்கும் இந்தச் சந்தர்ப்பம் ஒரு மகத்தான சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன். நம் காலத்தின் ஒரு சிறப்பான படைப்பாளிக்கு இந்த விருது போய்ச்சேர்வதில் நான் உண்மையிலேயே அதிக மகிழ்ச்சி…

நான் கண்ட சிஷெல்ஸ் – 9. ஊடகங்கள், காட்சி சாலைகள்.

வே.சபாநாயகம் சிஷெல்ஸின் மக்கள் தொடர்பு சாதனங்கள் பத்திரிகைகளும் வானொலி மற்றும் தொலைக்காட்சியும் ஆகும். நாடு முழுதுக்குமான பத்திரிகைகள் மூன்று ஆகும். 'NATION ' என்பது அரசாங்கம் நடத்தும் தினசரிப் பத்திரிகை. 'REGAR ' எதிர்க்…

மஸ்ஸர்ரியலிசம்:புதிய புரிதலுக்காக

எச்.முஜீப் ரஹ்மான் நவீன கலை உத்திகளான சர்ரியலிசம்,கூபிசம் போல பின்நவீனத்தில் சில கலை உத்திகள் இருக்கிறது. சில பதிற்றாண்டுகளாக கலையுலகில் பல கருத்தாடல்கள் பாதிப்பு செலுத்துவது நடைப்பெற்று வருகிறது.வரலாறு புதிய பார்வைகளை சொல்லிக்கொண்டே இருக்கிறது.கலையனுபவங்கள்…

கற்பு என்றால் என்ன ?

இந்திரா பார்த்தசாரதி அற்ப விஷயங்களையும் அரசியலாக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வாயில் அகப்பட்டு, சமீபத்தில், மிகவும் அவதியுற்றச் சொல், ' கற்பு '. 'கற்பு ' என்றால் என்ன ? 'கல் ' என்ற வேர்ச்சொல்லினின்றும்…

கவிதையில் வடிகட்டிய உண்மை

பி. ஏ. கிருஷ்ணன் (இந்தக் கட்டுரை தில்லியிலிருந்து வந்து கொண்டிருக்கும் வடக்கு வாசல் பத்திரிகைக்காக எழுதப் பட்டது. பத்திரிகையை திரு. பென்னேஸ்வரன் பல பிரச்சினைகளுக்கிடையே நடத்தி வருகிறார். இது வரை மாதம் தவறாமல் ஐந்து…

அந்த பொசங்களின் வாழ்வு….

என் எஸ் நடேசன் புதிதாக வானிஸ் அடிக்கப்பட்ட அந்தப் மரப்படிகளில் என் முகம் தொிந்தது. மாடிப்படிகளுக்கு கடைசியாக வர்ணம் அடித்த நியாசி என்னும் துருக்கியர் தனது வேலையை திறம்பட செய்திருக்கிறார் என நினைத்து நான்…

கதைகள்

கறுப்புப் பூனை

இளந்திரையன் வீட்டில் ஒரு கறுப்புப் பூனை இருந்தது. என்னுடன் மிகவும் நெருக்கமாய் இருந்தது. அல்லது நான் அதனுடன் நெருக்கமாய் இருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். மனிதர்கள் என்னை ஒதுக்க ஒதுக்க அதனுடன் நெருங்கிப் போவது எனக்கும்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7

ஜோதிர்லதா கிரிஜா தாசரதி சொன்ன பதிலும், அப்போது அவன் முகத்தில் மிக இயல்பாகத் தோன்றிய உற்சாக எதிர்பார்த்தல் கலந்த மகிழ்ச்சியும் இன்றளவும் பங்கஜத்தைத் துடிதுடிக்கச்செய்து அணுஅணுவாய்க் கொன்றுகொண்டிருக்கும் ஏமாற்றங்கள். ‘என்னன்னா! சிரிச்சுண்டே சொல்றேள் ?…

பாலம்

எஸ்ஸார்சி ஆமாம் அந்தப்பாலம் தான் இடிந்துவிட்டிருக்கிறது. செங்குன்றத்தில் ஊரை வலம் வந்து ஒடுவது மணிமுத்தாறு. செங்குன்ற நகரை இருகூறு ஆக்கிய இந்த ஆற்றின் மீது பிரிட்டி ?காரன் என்றோ கட்டிய பாலம். இன்று இடிந்து…

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – இலக்கிய நாடகம்

கரு.திருவரசு நாடகத்தில் வருவோர் 1. ஒரு மலேசியக் கவிஞர் 2. புலவர் பக்குடுக்கை நன்கணியார் இவர் சங்கப் புலவர்களில் ஒருவர். காலக்கணித வல்லார். இவர் பாடல் புறநானூற்றில் இருக்கிறது. தோற்றம்: கழுத்திலிருந்து கணைக்கால் வரையிலான…

மோகினிப் பிசாசு ( பிரெஞ்ச் மூலம் : தனியெல் புலான்ழே )

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா (தனியெல் புலான்ழே: (Daniel Boulanger):1922ம் ஆண்டு பிறந்த இவருக்கு இசைக்கலைஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, நடிகரென பலமுகங்கள் உண்டு. இதுவரை வெளிவந்துள்ள18 சிறுகதைத் தொகுப்புகளும், 20க்கும்…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'நான் மெச்சத் தக்க, கவர்ச்சி மிக்க மூன்று மாதர்கள்: விக்டோரியா ராணி, ஸாரா பெர்ன்ஹார்ட், லில்லி லாங்க்டிரி [Queen Victoria, Sarah Bernhardt, Lillie Langtry]. முதலில் கூறியவர்: மேன்மை…

சொ ல் லி ன் செ ல் வ ன் ( அன்டன் செகாவ்/ருஷ்யா)

தமிழில் - எஸ். ஷங்கரநாராயணன் * கிரில் இவனோவிச் பாபிலோனவ் என்கிற கல்லுாரி உதவிப் பேராசிரியர் நல்லதோர் காலையில் நல்லடக்கம் செய்யப் பட்டார். நமது தேசத்தில் பரவலாக அறியப் பட்டபடி இரு துன்பங்களில் -…

மன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே!

பாலா திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய தெருவில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளி கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையானது. பள்ளிக் கட்டடம், அதே செம்மண் கலர் பெயிண்டு அடிக்கப்பட்ட தோற்றத்தோடு இன்றும் மாறாமல் காட்சியளிக்கிறது! நான்…

கவிதைகள்

எதுவுமில்லாத போது

சாம் ---- புன்னகைக்கத் தொியாத உதடுகளின் முன்னே உருண்டது வாழ்க்கை. ஒரு ‘ஹலோ’ வோடு அறுக்கப்படும் மானுட உறவின் பிம்பத்தெறிப்பில் உதிர்ந்தது எல்லாம். முழு வெளிகளையும் மலர்ச்சியற்ற முக மனிதர்களின் கொட்டாவிக் காற்று நிறைத்துவிட்டது.…

மீண்டும் மரணம் மீதான பயம்

சாம் மெளனத்தின் கொடுக்குகள் கொட்டிய வலியின் மீது இனி உன் விஞ்ஞாபனத்தை எழுது. விருப்புப் பற்றியும் இருப்புப் பற்றியும் எத்தனை தடவைதான் பேச முடியும். தீட்டிய வாளினை மோகித்தபின் இரத்தத்தைப் பற்றி யார் அங்கே…

கவிதைகள்

சேவியர் கலைதல் ஃ காலையில் அங்கே இருந்த நிழல் மாலையில் அங்கே இல்லை. காலையில் மெளனமாய் நின்றிருந்த காற்று இப்போது அவ்விடத்தில் இல்லை. அப்போது பார்த்த ஓரிரு பல்லிகளை இப்போது காணவில்லை காலையில் வீட்டுக்குள்…

சிரிப்பு

தேவமைந்தன் சிரிப்பு வந்தது. காரணம் மனிதம். சிரிக்கையில் புரையேறியது. கண்ணீர் சிரிப்பின் ஊடே தெறித்தது. பனிநேரக் கார்க்கண்ணாடியின் மங்கல் 'பாலே ' ஆடித் துடைக்கும் 'வைப்பர் ' துடைப்பான் விடும் இடம் இடையே சாலை…

புனித உறவுகள்

ரஜித் அதிகாலை வேளை அவிழ்ந்தது மொட்டு மூடிக் கிடக்கையில் முணுமுணுத்த வண்டு உள்ளே நுழைந்து ஊர்வலம் வந்தது மூக்கை உள்நீட்டி முத்தம் கேட்டது தேன்சிட்டு கன்னம் தடவி தேனீ மதுக் கிண்ணம் கேட்டது சாமரம்…

சிரிப்பு

பட்டுக்கோட்டை தமிழ்மதி இப்படி செடிகளுக்குப் பூத்து சிரிக்கத் தெரியுமோ தெரியாதோ ? * இந்த சிரிப்புக்கு மாலையில் மெளனமாகும் மயக்கமில்லை. காம்பு கைவிடுமோ கவலையில்லை. காலத்தின் கட்டாய கசங்கலில்லை. சருகாய் கருகும் சம்பவமில்லை. இந்த…

இன்று சொல்லிச் சென்றது

பாலு மணிமாறன் அந்தச்சுவர்கள் உன்னிடம் சொல்லியதான சேதிகளை நீ சொல்லும் போதெல்லாம் ஆச்சரியத்தோடு கேட்டிருந்தன செவிகள் நான் அலுவலகத்தில் அடைபட்டிருந்த காலங்களில் சூரியன் உனக்கு வெளிச்ச கவிதை வாசித்ததைச் சொன்னாய். பின் நவீனத்துவ வாசத்தோடு,…

பெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 2052. செல்வம் மல்கிய தில்லை எனும் பழமை வாய்ந்த ஊரில் தெற்கு திசை வாசல் வழியே எல்லை நீங்கினார் உள்ளே புகுந்து இருபக்கமும் ஏற்றிப்புகழும் ஒலிசூழ வளமையுடைய அங்காடித் தெருவினைக் கடந்தார்…

கீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன்னைக் கேட்க வேண்டுமென முன்பு நினைத்தாலும், வற்புறுத்திக் கேட்க வலுவில்லை எனக்கு! ரோஜா மாலை அணிந்திருந்தாய் நீ, ஜோராகக் கழுத்தில்! காத்திருந்தேன், காலை வேளை வரட்டும் என்று! விழித்து…

இளமையா முதுமையா

கவிஞர் புகாரி இளமையின் வேகம் தோல்வியின் சக்கரமா வெற்றியின் ஏணியா ? முதுமையின் நிதானம் பாதுகாப்புக் கயிறா வாழ்வு பறிக்கும் தொல்லையா ? . பயமறியா இளமை சறுக்கியும் விழுகிறது சாதித்தும் காட்டுகிறது அனுபவ…

நகைச்சுவை

சிவா ! ராமா ! – 2060

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா ஹ 2060 ஜனவரி 3ந் தேதி சிவா ! ராமா ! என்று தி.நகர் சிவா விஷ்ணு கோவிலில் வாசலில் உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்தேன் . . . சென்னை பற்றி…