கு.முனியசாமி ஆதியிலே சாதியில்லை நந்தலாலா - அது பாதியிலே வந்ததென்ன நந்தலாலா வீதியிலும் சாதியப்பா நந்தலாலா - அந்த வேதத்திலும் சாதியப்பா நந்தலாலா... பிள்ளையென்றும் தொல்லையென்றும் நந்தலாலா - நம்மை பிாித்துவைத்த சேதியென்ன நந்தலாலா…
ஸ்ரீனி. ஜன்னலோரத்தில் அமர்ந்து காபியை பருகியபடி நாளிதழை புரட்டும் எனக்கு உன் வரவை தென்றல் சற்று பலமாய்ச்சொல்ல சாளரங்களின் கம்பிக்கண்களும் உனை காண எண்ணி கதவிமைகளைத் திறக்க, பூக்களை விட்டு உன் புன்னகையில் கவரப்பட்டு…
அனந்த் (வே. ச. அனந்தநாராயணன்) பல நாட்களாக, பலப் பல நாட்களாக, என் மனக்கிடங்கில் மண்டி மறைந்திருந்த ஆசையொன்றின் மெல்லிய, தீனமான முனகல் ஓசை இன்று சற்றுத் துல்லியமாகவே கேட்டது. இரு விரல்களுக்கிடையே அந்த…
எட்வின் பிரிட்டோ முத்தம்... அன்பைச் சொல்லும் உலகப் பொதுமுறை, இரு இதயங்களின் கைக்குலுக்கல், ஆலிங்கனத்தின் அச்சாரம் முத்தம், ஒரே நேரத்தில் உயிரணுக்கள் ஒவ்வொன்றையும் ஒட்டடையடித்து உயிர்ப்பிப்பது முத்தம். முத்தம்... ஊடலின் முடிவுரை, கூடலின் முகவுரை,…
ருத்ரா. எங்கிருந்து கூவுகிறாய்.. குயிலே ? வேப்பம் இலைகள் சூாியனைக் கசிந்து அதன் இடுக்குகள் வழியே ஒரு கன்னிக்குடம் உடையும் அந்த பிரபஞ்சத்தின் வலி மழையோடு உன் உயிரை தூவுகிறாயா ? ஆழத்தின் வலிக்குள்…
கவியோகி வேதம் காட்டுக்குத் தாளம் சொல்லிக் கொடுக்கவே கங்கணம் பூண்டது சாரல்!-அது பாட்டுக்குக் கல்லைக் கட்டித் தழுவிடும் பயன்தான் பயணிகள் சேரல்! வருகிற நீரால் பாதை அமைப்பதில் வரிபோல் சமைக்கும் கவிஞன்!-அது பருகவும் தந்துக்…
பசுபதி பட்டிக்காட்டில் பறந்திடுமோர் பட்டுப்பூச்சி சிறகடித்தால் பட்டணத்தில் பருவமழை பலக்கும். காலவெளியின் ஞாலத்தில் அணுவொன்றின் அக்குளில் ஒரு 'கிசுகிசு '; வேறிடத்தில் வேறோர் துகள் விலாப் புடைக்க சிரிக்கும் ! குழப்பக் கோமான் குதூகலிக்கும்…
சேவியர். இந்த தீவிரவாதம் இதோ இன்னொருமுறை மண்ணுக்குள் மனித உயிர் காய்ச்சி ஊற்றியிருக்கிறது. ஒரு போருக்காய் ஒரு பதிலடி, அந்த பதிலடிக்காய் இன்னொரு போர், எப்போதுதான் முடியப் போகிறதோ இந்த பல்லுக்குப் பல் போராட்டம்.…
வ.ந.கிாிதரன் உயர்ந்த கோபுரத்தில் உயிர்கள் தொலைந்த போது துடித்தெழும் பேரரசே! மத்திய கிழக்கில் ஆயிரக் கணக்கில் மனிதர் மாித்தபொழுது மெளனமாகவிருந்ததேன் ? உயிர்களிற்குள்ளும் பலவுயிர்கள். மூன்றாமுலகவுயிர்கள், ஐரோப்பிய உயிர்கள், கிழக்கு ஐரோப்பியவுயிர்கள், ஆபிாிக்கவுயிர்கள், அரேபியவுயிர்கள்,…