திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010325_Issue

அரசியலும் சமூகமும்

அம்மாயி

பாரி பூபாலன் ஊரிலிருந்து செய்தி வந்தது, அம்மாயி இறந்து விட்டாள் என்று. மனதிற்குச் சிறிது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அழுகை வரவில்லை. அம்மாயி இறந்த செய்தி ஒரு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அம்மாயியை விட்டு தொலை…

உருவ வழிபாடுதான் சரியான வழிபாடு

சின்னக்கருப்பன் முதலாவது கேள்வி - இந்த கட்டுரை தேவையா ? என்பது. சமீபத்தில் இந்த பாமியான் சிலை உடைப்பின் போது டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்து, எக்ஸ்பிரஸ், ரீடிஃப், ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகளில்…

இந்த வாரம் இப்படி

மஞ்சுளா நவநீதன் மீண்டும் தஹல்கா தஹல்கா பிரசினை தொடர்கதையாகிறது. காங்கிரஸ் செய்த சதி, ஐ எஸ் ஐ - சதி, வெளி நாட்டு சதி என்று புலம்பல்கள் ஆரம்பித்து விட்டன. ஐ எஸ் ஐ…

கதைகள்

அசலும் நகலும்

ரகுநாதன் 1 திருவாளர் பாண்டிப் பெருமாள் பிள்ளை தமது பெளத்திரன் செந்தில் விநாயகத்துக்கு காலாகாலத்தில் காலில் ஒரு கட்டுக் கட்டிப் போட்டுவிட்டு, மண்டையைப் போட வேண்டும் என்று எதிர்பார்த்தார். மேலும் காலஞ் சென்ற தமது…

பழக்கம்

அசோகமித்திரன். 'உன்னைத் தேடிண்டு பாலு வந்தாண்டா, ' என்று அம்மா சொன்னாள். 'எந்த பாலு ? ' என்று கணேசன் கேட்டான். 'என்னடா இப்படிக் கேக்கறே ? உன் ஆபிஸிலேயே வேலை பண்ணிண்டிருந்தானே, அவன்தான்.…

கலைகள்

பறங்கிக்காய் பால் கூட்டு

பறங்கிக்காய் --அரை பத்தை பால் --அரைக் கரண்டி வெல்லம் --1எலுமிச்சை அளவு தேங்காய்த்துருவல் --2ஸ்பூன் உப்பு --1சிட்டிகை உளுத்தம்பருப்பு --அரை ஸ்பூன் பறங்கிக்காயைக் கால் ஆழாக்குத் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.…

சிற்றுண்டி ஃபலாஃபல் (கொண்டைக்கடலை வடை)

தேவையானப் பொருட்கள் 6 கோப்பை பெரிய கொண்டைக்கடலை ஊறவைத்து, வேகவைத்தது 1 பெரிய சிவப்பு வெங்காயம் நறுக்கியது 3 பூண்டு பற்கள், நசுக்கியது 1 1/2 கோப்பை ரொட்டித்தூள் (கடையில் கிடைக்கும் ப்ரட் வாங்கி…

கவிதைகள்

யாரோ பாடிய கபாடிப் பாட்டுகள்

1 தந்தனத்தாங் தோப்பில தயிரு விக்கிற பொம்பள தயிரு போனா மயிராச்சு கிட்டவாடி பொம்பள பொம்பள பொம்பள 2. நாந்தாங் கொப்பன்டா நல்லமுத்துப் பேரன்டா வெள்ளிப்பிரம்பெடுத்து விளையாட வரண்டா தங்கப்பிரம்பெடுத்து தாலிகட்ட வரண்டா வரண்டா…

24 மணி நேரம்

அ.முத்துலிங்கம் சுல்தான் முபாரக் ஷாவின் தாயார் கூந்தலை மடித்து செய்த மெத்தையில் ஜாடி சுமந்து ராஜவீதியில் பல மைல்கள் வெறும் பாதத்தில் நடந்ததுபோல ஒரு கண்ணாடி போத்தலை இரண்டு கைகளிலும் காவிக்கொண்டு பல மைல்…

இளமை காலம்

பிரபு இயற்கையை சுவாசிக்க தஞ்சம்புகும்... அழகியபறவைகள் எங்கள் ஊருக்கு.. களவு போனாலும்,கை எடுத்தாலும்தீர்ப்பு சொல்லும் தனி நீதிமன்றம்எங்கள் அரசமரத்தடி பஞ்சாய்த்துதான்.. ஆரவாரமற்ற வாழ்வில்அரக்க பறக்க முகாமிட்டுதேர்தல் முடிந்தவுடன்...காணாமல் போனது.. அரசியல்வாதிகள்மட்டும் அல்ல...அவர்கள் நினைவில் இருந்தஎங்கள்…

நீ

சேவியர் ஒரு துளி...கொல்லைப்புறத்தில் ஓர் சருகின் மேல்...புாியவில்லை...மரம் தேக்கிவைத்த மழையின் மிச்சமா ?இரவு நகர்ந்தபோது விழுந்த எச்சமா ?எதுவும் புாியவில்லை...அடுத்த நிமிடம் காற்று வீசலாம்சருகோடு சேர்ந்து துளியும் சமாதியாகலாம்..அழுக்கான எறும்பொன்று குளித்து முடிக்கலாம்....அலகுக்குள் சிட்டொன்று…

நாளை விடிந்து விடுமே!

எட்வின் என் இனிய இந்தியனே! மதச்சேறும் சாதிச்சகதியும்சட்டங்களில் தெளிக்கப்பட்டு சாித்திரங்கள் சாிவதைக் கண்டுசலிப்பு வேண்டாம். நாளை விடிந்து விடும் கட்டிக் காத்த காஷ்மீாின் கதியைக் கண்டு கவலையால்கண்ணம் குழிந்தது போதும் நாளை விடிந்து விடும்…

சில சந்தேகங்கள்.

கிறிஸ் இது படிமமா ? கூக்குரலிட்டு ஆங்காரமாய்விரையும்ரயில் வண்டியின் வேகத்தைபயணிக்குஅமைதியாய்அறிவித்துபின்னோக்கி நகர்ந்துகண்ணை விட்டுமறைந்து ஒடிப்போகும்தண்டவாளத்துஅண்மையில்நகராதுநிற்கும் மரம். இது போஸ்ட்மாடர்னிசமா ? அங்கே தெரிவது ஆனையோ ?கொசுக்கடித்துஆனைக்கால் வியாதி வந்துகால் மெலிந்துகுச்சியாகிதொழு நோயில்தும்பிக்கை தொலைத்துகாது சிறுத்துசோகையில்…

நகைச்சுவை

கேள்வி: உலகமயமாதலின் உச்சம் என்ன ?

பதில்: இளவரசி டயானா கேள்வி: எப்படி ? பதில்: ஒரு ஆங்கிலேய இளவரசி ஒரு எகிப்திய காதலனோடு ஃபிரஞ்ச் சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொறுத்திய ஜெர்மன் காரை பெல்ஜிய டிரைவர் ஸ்காட்ச் விஸ்கி குடித்துவிட்டு…

குறட்டை ஆராய்ச்சி

ஆகேஷ் உலகத்தில் கஷ்டமான விசயம் என்று பொிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ரொம்ப சுகமான விசயம் என்றால் பலர் கூற தயாராக இருக்கிறார்கள். முக்கால்வாசி பேர் 'காலைக் கடன் ' கழிப்பதே சுகம் என்று…