பாரதியை தியானிப்போம்

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

பா.சத்தியமோகன்


யாப்பு, சீர், தளை அசை,தொடைகள் இவை தாம் கவிதைக்குத் தடை என்று

வெளியே வந்தோம். நவீன கவிதை என்றும் புதுக்கவிதை என்றும் நயங்கள்

தோன்றின. பெருக்கெடுத்து ஓடுகிற வெள்ளமாய் இருகரையெங்கும் தொட்டு

என்னென்னமோ வந்தாயிற்று. பிறகு ஒரு கட்டத்தில் புதுக்கவிதை எனப்படும்

நவீன கவிதைகளின் அசைவு- அந்தரங்கம் நோக்கி நகர்ந்தன. இதற்கு சமூக

இடர்பாடும் பெரும் பங்கு வகிக்கிறது. இருப்பினும் இப்போக்கு, வாசகனுக்கு

முதலில் சுவாரசியத்தைத் தந்து பிறகு ஒரு வித வெறுமையை ஏற்படுத்துகின்றன.

அதாவது அதீத சுயவலியைப் பதிவு செய்வது உண்மையைக் கொண்டிருப்பினும்

அதற்கே உண்டான மொழிச்செயல்பாடு மற்றும் மொழித்தன்மை குறுக்கம்

உடையதாக இருப்பதே இதற்குக் காரணம்.

இவற்றை மீறி யாவருக்கும் புரிந்த மொழியில் தன் அனுபவத்தைக்

கவிதையாக்கும் படைப்பாளியோ தன்னை சமரசப்படுத்திக்கொள்ள வேண்டியவனாக

– நிறைவு பெற இயலாதவன் கிறான். க- மொழியின் சக்தியும் விரிவு

பெற வேண்டும். அது அனுபவச் சத்தினை வீச்சுடன் வெளிப்படுத்த வல்ல

உண்மையான போக்கினையும் கொள்ள வேண்டும். இந்த இரு எல்லைகளையும் அறிந்து

தடுமாறாமல் நீண்ட கவிதைப் போக்கினை அளந்து நிறுத்திய மகாகவியை,

அவர் கவிதைகளை வாசிக்கும் எவரும் உணரமுடியும்.

கடைசி கவிதை வரை இந்த மொழி அடர்த்தி எளிமையுடனும், அனுபவம்

நீர்த்துப் போகும் மொழியைத் தவிர்த்தும் மகாகவி எழுதி வந்தார். இது

தமிழின் தமிழரின் தவப்பயனாகும். இதனை மேற்கொண்டும் அறிந்து ழ்ந்து

மென்மேலும் செம்மைப்படுத்துவது நவீனகவிஞர்களின் பொறுப்பு

—-

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்