தமிள் வால்க

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

வரதன்


தமிழால் ஒன்றுபடுவதாகச் சாகசகம் காட்டும் ராமதாஸ் தமிழகத்தில் ஜாதிய உணர்வால் அரசியல் பண்ணும் முதன்மையானவர்.

அடுத்தவரோ, இன்னொரு ஜாதிய உணர்வை தூபம் போட்டு வளர்ப்பவர்.

நேற்றுவரை பாண்டிச்சேரியில் முதலில் வன்னிய ஆட்சி பின் தமிழகத்தில் என்று சொன்ன மருத்துவர், இன்று தமிழகத்தின் அடுத்த முதல்வர் திருமாவளவன் என்று சொல்கிறார்.

என்ன சாணக்கிய திட்டமோ யார் அறிவார்.

ஆனால், இவர்களின் திடார் தமிழ்ப்பற்றுக்கு உலகத் தமிழினத்தலைவர் கம்மென்று இருந்தாலும், ஜெயலலிதா சில கேள்விகள் கேட்டுள்ளார்.

– இராமதாஸ் என்ன டமிலா… ?

– பேனா என்ன டமிலா… ?

மேலும் இவர்கள் தினமும் யூஸ் பண்ணும்,

– காலையில் காஃபி, டைம் என்ன.. ? , டிரைவர் எங்க.. ? மைக் எங்கப்பா.. ? , போலீஸ், பெட்ரோல், பேட்டா, டாகடர். சினிமாக்காரனுக, சிகரெட், சோடா, பேண்ட், பேஸ்ட், புரஸ், சோப்பு, டவல், பவுடர்,

பாத்மூம், மவுண்ட் ரோட், சன் டிவி, பேனா, இங்க், பேப்பர், பார்டி, சூட்கேஸ், கமிஷன், செல்ஃபோன், கம்ப்யூட்டர், மைக், கரண்ட், டிவி கேமிரா, ஃபோட்டோ, ரிப்போர்ட்டர்….

…. என இவர்கள் தினமும் உபயோகிக்கும் வார்த்தைகள் தமிழா… ?

இதெல்லாம் விட்டு தமிழையும் , ஆபாசபடத்தையும் போட்டு குழப்பி கூட்டாஞ்சோறு தின்னப் பார்ப்பது ஏன்.. ?

தெளிவாக கருணாநிதி இந்த விளையாட்டில் காணவில்லை…

ஜெயலலிதாவின் பேச்சிற்கு கட்சி வித்தாயசம் இன்றி அனைத்து திரையுலகப் பிரமுகர்களும் ஒருமித்த சப்போர்ட்.

மோடிமஸ்தானும் – பாம்பும் ஒன்றாகி , உயிருக்கு பங்கமான பிரச்சனைகள் ஓராயிரம் இருக்க தமிழ் காக்கும் டமாஸ் பண்றாங்க.

வெளிநாட்டில் படித்த ப.சிதம்பரமே, வேட்டி சட்டையில் வெளிநாடு முதற்கொண்டு வரும் போது, இந்த திருமாவளவன் வெளிநாட்டிற்கு அணிந்து செல்வது உயர்ரக ஃபாரின் பேண்ட் சர்ட்….

இவர் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி பேசுவது செம காமடி.

டைரக்டர் சூர்யா, தவிர்க்கப்பட வேண்டிய ஒரு திரைப்பட வக்ரப் புத்திக்காரர்தான்.

ஆனால், கமல்.. ? தமிழுக்காக கமல் செய்ததில் ஒரு சதவிகிதம் கூடச் செய்யாத சூட்கேஸ் பார்டிகள், தமிழ் காக்க மும்பை எக்ஸ்பிரஸ் பற்றி பேசுவது தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்துக் கலாச்சாரம் ஓபனாக இருப்பதையே காண்பிக்கிறது.

தைரியலஷ்மி தான் சூரசம்ஹாரம் செய்ய வேண்டும்.

வரதன்

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்