ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்
மோனிகா
“ஜெர்மனியை விட்டு நீங்கள் வெளியேறக் காரணம் என்ன ?” என்று ஒரு முறை ஜார்ஜிடம் கேட்டபோது, “நானும் ஹிட்லரும் ஓவியர்கள். ஒரு நேரத்தில் எங்களில் ஒருவர் மட்டுமே அங்கு வாழக்கூடும். அதனால்தான் நான் ஜெர்மனியை விட்டு வெளியேறிவிட்டேன்” என்று கூறினாராம் அவர். ஓவியத் திறமையுடன் கலந்த அவரது நகைச்சுவை உணர்வு அவரது ஓவியத்தை ஒரு தனிபட்ட கவனத்துக்கு உள்ளாக்குகிறது. சிறுவயதிலிருந்தே கோட்டோவியங்களின்பால் ஈர்க்கப்பட்ட ஜார்ஜுக்கு ஓவியங்களின் மூலம் எழுத்துக்கு உயிர் கொடுப்பதில் அதீத ஈடுபாடு இருந்து வந்தது. ஜனரஞ்சகமான நாவல்களையும் கவர்ச்சிகரமான முறையில் கொலைகளை துப்பறியும் நாவல்களையும் அவர் தொடர்ந்து படித்து வந்தார். மது பானக் கடைகளில் சோப்பினால்(மதுவைப் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக) வரையப்படுகின்ற கவர்ச்சி நிர்வாண ஓவியங்களை அவர் பெரிதும் விரும்பினார். கடைசி காலங்களில் பெர்லினின் கழிப்பறைகளிலுள்ள சுவரோவியங்களை ஆராயத் தொடங்கிய அவர் செவ்வியற்கலையைவிட இந்த ஓவியங்கள் மிகவும் உணர்ச்சியளிப்பவையாகக் கருதினார்.
1920 கள் வரை ஜார்ஜ் தனது மாடல்களை திருவிழாக்கள், சர்க்கஸ், பியர் கடைகள், பாலியல் தொழிலாளர் விடுதிகள் மற்றும் சாலையோரங்களில் கண்டார். கருப்பு மைப்பேனாவைக் கொண்டு வேண்டுமென்றே மிகவும் அவலட்சணமான கோடுகளில் தெருக்களையும் தேனீர் விடுதிகளையும் வரைந்தார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல நிகழ்வுகளையும் ஒரே தாளில் வரைந்தார். பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பிய ஓவியங்களில் (குறிப்பாக இங்கிலாந்தில்) அரசியல் நகைச்சுவை ஓவியங்கள் (political satire) மிகவும் பிரசித்தி பெற்றிருந்தன. அவர்களில் முக்கியமான ஹானார் தூமியர் நவீன கேலிச்சித்திரங்களின் தந்தை என்றழைக்கப்பட்டார். உடற்கூறுகளில் ஒரு குணச்சித்திரத் தன்மையை கொண்டு வந்து அதன் மூலம் தனது அரசியல் பாணியை முன்வைக்கும் தொழில் நுட்பத்தை தூமியரின் ஓவியங்களில் கற்றுக் கொண்டார் ஜார்ஜ். லித்தோகிராபியில் பிரசித்தி பெற்ற தூமியர் ஒரு கைதேர்ந்த சிற்பியுமாவார்.
Copy of Circe
ஜார்ஜின் மாறுபட்ட புரட்சிகரமான அரசியல் பார்வையிலிருந்து அவரது பெண்கள் மீதான சமூகப்பார்வை மாறுபட்டதாக இருந்தது. அது ஒரு சராசரி ணின் பெண்கள் மீதான பார்வையைப் போன்று முன்னும் பின்னும் முரண்பட்டது. கீழ்கண்ட காலை ஐந்து மணி என்ற ஓவியத்தில் ஆண்களின் பல்வேறு சுக போக நிலைகளையும் கருத்து நிலைபாடுகளையும் தெரிவிக்குமாறான செய்திகள் பொதிந்துள்ளது.
5am
பெரும்பாலும் தன்னுடைய ஓவியங்களில் பூர்ஷ்வாக்களையும் நாசிகளையுமே கேலி செய்துவந்த ஜார்ஜ் 1923ம் ண்டு ஆபாச ஓவியங்கள் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அவர் “என்னுடைய ஓவியங்கள் விரசத்தை பாவிக்கக் கூடியனவாகவும் அவலட்சணமாக இருந்தபோதிலும் அவை அறத்தையே போதிக்கின்றன என்பதில் ஐய்யமில்லை” என்று கூறினார்.
தன்னுடைய மனைவியையே மாதிரியாக வைத்து வரைந்து வந்த ஜார்ஜுக்கு திருமணம் என்ற அமைப்பின் மீது சந்தேகமும் கருத்து ஒவ்வாமையும் இருந்தது. நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்த பிறகு பெர்லினிலில் இருந்த தனது மனைவிக்கு எழுதிய கடிதங்களில் அவர் பெரும்பாலும் பாலுறவு வேட்கைகளின் ஏக்கங்கள் மட்டுமே தலை தூக்கி நின்றன என்பது அவர் மீதுள்ள ஒரு குற்றச்சாட்டாகும். கீழ்கண்ட படத்தை அவர் தனது திருமணத்தை முன் வைத்து வரைந்ததாகும்.
Daum Marries Her Pedantic Automaton George in May 1920, John Heartfield is Very Glad of It. 1920
தான் திருமண வலையில் சிக்கிக் கொண்டதை அறிந்து தனது நண்பன் மகிழ்ச்சியடைவதாக கூறும் அவர் திருமணம் ஒரு ஆண்மகனுக்கு சமூகத்தால் வழங்கப்படும் ஒரு அங்கீகாரம் என்று கூறுகிறார். அதேசமயம் பெண்களுடனான தொடர்புகள் பெண்களைக் குறித்த புரிந்துகொள்ளல் போன்ற எத்தனங்களை கேலி செய்யுமாறு உள்ளது “எக்கோ ஹோமோ(Ecco Homo)” என்ற கீழ்கண்ட ஓவியம் •ப்ராய்டின் பெண்கள் (அவர்களின் நிர்வாணம்) குறித்த சிந்தனையை வர்ணிப்பதாக உள்ளது.
Haylycon_days
ஓவியங்கள் “அழகுணர்வின்” ஒரு கட்டமைப்பாக இருக்க வேண்டியதொரு அவசியம் இல்லை. ஓவியன் மேற்கொள்கின்ற செய்தியின் தெளிவும் அதற்கு துணை போகின்றதொரு பாணியும் ஓவியத்திற்கு வலுவளிக்கிறது. ஜார்ஜ் கிராஸ்ச் தன்னுடைய அரசியல், சமூகப் பார்வையில் அடைந்த திடமும் தெளிவும் அவரது பாலியல் சார்ந்த வெளிப்பாடுகளில் தெளிவின்மையாகவே பரிணமிப்பதாக தோன்றுகிறது. இதற்குக் காரணம் பாலியல் நடவடிக்கைகள் ஒரே சமயத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரின் சீரழிவின் பிம்பமாகவும் அதற்கு முற்றிலும் மாறாக ஒடுக்குமுறை சமூகத்திற்கெதிரான கலகத்தின் தளமாகவும் காணப்படுவதாக இருக்கலாம். னால் கலையின் பணி திட்டவட்டமான முடிவுகளை அறிவிப்பதல்ல மனித மன ழத்தின் தெளிவின்மையை வெளிக் கொணர்வதுதான் எனக் கொண்டால் கிராஸ்சின் ஓவியங்களில் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வது சாத்தியமாகலாம்.
(முதல் பக்க ஓரத்தில் உள்ள படம் ஜார்ஜ் கிராஸ்சின் “மாடலுடன் ஒரு சுய உருவப்படம்” என்னும் ஓவியமாகும்.)
—-
monikhaa@yahoo.com
- பேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்
- ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
- மறுபிறவி
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53
- கடலுக்கு மடல்
- நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்
- சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்
- உதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு
- அலைப் போர்
- ஊழி
- கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா ?
- வன்முறை : பாலுறவு : தணிக்கை
- சுனாமி உதவி
- பெரியபுராணம் – 25
- உயர்பாவை 3
- அறிய கவிதைகள்
- சுனாமி வேட்கை
- கிழித்து வந்த காலமே!
- என் வேள்வி
- அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு
- பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்!
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்
- சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி
- ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்
- முட்டாள்களின் பெட்டகம்
- கோடெலும் ஐன்ஸ்டைனும்
- மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.
- விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை
- கடிதம் ஜனவரி 6,2005
- உயிர்மை அரங்கில் சந்திப்பு
- கடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்
- கடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்
- ஆய்வு க்கூடத்தின் இழுப்பறைகள்
- தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- நிலாவிற்கு
- ஒரு கவிதை
- கடிதம் ஜனவரி 6, 2005
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து
- கவிதை
- இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்
- ‘சுனாமி ‘
- சுனாமி என்றொரு பினாமி.
- கதவைத் தட்டிய கடலலைகள்
- கவிக்கட்டு — 43
- ‘விளக்கு விருது ‘ விழா
- கிழித்து வந்த காலமே!
- உலகமே
- விளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா
- tsunami aid
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- பிதாவே..எங்களை மன்னியும்!
- கடிதம் ஜனவரி 6,2005