திருவனந்தபுரத்தில் சாகித்ய அகாதெமியின் பொன்விழாக் கருத்தரங்கு!

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

நா முத்து நிலவன்


சாகித்ய அகாதெமி என்றாலே, ஏதோ மரபு சார்ந்த இலக்கியவாதிகளின் அமைப்பு என்பது போன்றதொரு கருத்தும் உண்டு! னால், இதை மாற்றுவதுபோலவோ என்னவோ, அண்மையில் திருவனந்தபுரத்தில் ‘புதியகுரல்கள் ‘ ( ‘NEW VOICES ‘) எனும் தலைப்பிலேயே, மூன்று நாள் கருத்தரங்கு முழுவதும் தென்னிந்திய

நவீனஇலக்கியத்தின் திக்கமாகவே இருந்தது!

இந்திய சாகித்ய அகாதெமியின் ‘பொன்விழா ‘வையொட்டி, நாடு முழுவதும் ‘மண்டல மாநாடு-கருத்தரங்கு ‘களை நடத்துவது எனும் முடிவின் முதல் மாநாடாக நான்கு தென் மாநிலங்களுக்குமான முதல்நிகழ்வு திருவனந்தபுரத்தில் நடந்தது.

2004-செப்டம்பர் 10 முதல், 13 வரை நடந்த இக்கருத்தரங்கில், அகாதெமியின் தலைவர் கோபிசந்த் நாரங், செயலாளர் கே.சச்சிதானந்தன், துணைத்தலைவர் சுனில் கங்கோபாத்யாய் மற்றும் நான்கு மொழியறிஞர்ககளோடு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளின் முதுபெரும் இலக்கியவாதிகளும், இளம்படைப்பாளிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பிரபல இலக்கியவாதிகளான எம்.டி.வாசுதேவன் நாயர், அய்யப்ப பணிக்கர் இருவரும் முறையே தொடக்கவுரை, நிறைவுரைகளை நிகழ்த்தினர். மொத்தம் பதினோரு கருத்தரங்க அமர்வுகள்! ஒவ்வோர் அமர்விலும், ஒரு தலைவர் மற்றும் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு இளம் படைப்பாளர் வீதம் 4 பேர் தத்தம் மொழியின் இன்றைய இலக்கியப் போக்குகள் குறித்து கட்டுரை வாசிக்க, அதன் மீது விவாதமும் சூடுபறக்க நடந்தது.

‘கவிதையில் புதிய சவால்கள் ‘ அமர்வுக்கு அகாதெமியின் தமிழ்மொழிக்குழு ஒருங்கிணைப்பாளரும் ‘வானம்பாடி’ கவிஞருமான டாக்டர் பாலா, ‘புதியசிறுகதைகளின் பிரச்சினைகள் ‘ அமர்வுக்கு கன்னட விமர்சகர் கிரிதாரி கோவிந்தராஜு, ‘புதிய நாடகங்களை நோக்கி ‘ அமர்வுக்கு மலையாள நாடகாசிரியர் கே.என்.பணிக்கர், ‘புதிய தலைமுறைக்கான விமர்சனக் கொள்கைகள் ‘ அமர்வுக்கு மலையாள விமர்சகர் குப்தன் நாயர் ஆகியோர் தலைமை வகிக்க நான்கு மொழிகளுக்கும் மொழிக்கொருவராக வந்து அந்தந்த மொழியின் புதிய போக்குகள் குறித்த கட்டுரையை ஆங்கிலத்தில் வாசித்தனர்.(சில நேரம்

அவரவரும் அந்தந்த மொழியிலேயே கவிதை, கதை, நாடகத் துணுக்குகளை விசிறியடித்தாலும், மொழி புரியாத இடத்தை உணர்ச்சி இட்டு நிரப்பியதும் நன்றாகத்தான் இருந்தது.)

இடையிடையே, ‘சிறுகதை வாசிப்பு ‘, ‘கவிதை சொல்லுதல் ‘, மற்றும் ‘கவிஞர் சந்திப்பு ‘ எனும் அமர்வுகள் (ஆங்கில மொழிபெயர்ப்போடு) நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நான்குமொழிக் கருத்தரங்கில், தமிழகத்திலிருந்து, கவிதைக்கான அமர்வில் கவிஞர் நா.முத்து நிலவனும், நாடகத்துக்கான அமர்வில் வேலு சரவணனும், விமர்சனத்துக்கான அமர்வில் பேரா.பத்மாவதி விவேகானந்தனும் கலந்துகொண்டு கட்டுரை வாசித்தனர். விவாதங்களுக்கும் பதிலளித்தனர்.

‘சிறுகதை வாசிப்பு ‘ அமர்வு ஒன்றுக்கு திலகவதியும், மற்றோர் அமர்வுக்கு அங்கேயே வசிக்கும் தமிழ் நாவலாசிரியர் நீல.பத்ம நாபனும் தலைமையேற்றறனர். சுப்ரபாரதி மணியன், பெருமாள் முருகன், சிவகாமி, ச.தமிழ்ச்செல்வன் கியோர் தமது சிறுகதைகளை வாசித்தனர். ‘கவிதை சொல்லுதல் ‘ அமர்வில் கவிஞர்கள் கோ.வசந்தகுமாரன், இரவி சுப்ரமணியன், மனுஷ்யபுத்திரன் கியோர் தம் கவிதைகளை வாசித்தனர். பெருமாள் முருகனும், மனுஷ்ய புத்திரனும் ‘அனைவர்க்குமான விவாத அரங்கி ‘லும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி திருவனந்தபுரத்தின் நட்சத்திர ஹோட்டலான ‘மஸ்கட் ‘டில் நடந்தபோதிலும், மூன்று

நாள்களும் கூட்டம் அரங்கு நிரம்பியே இருந்தது. கேரள ‘ஊடக ‘ங்கள் நிகழ்ச்சிக்கு நல்ல முக்கியத்துவம் தந்தன. குறிப்பாகத் தமிழ் எழுத்தாளர்கள் பாலா, திலகவதி இருவரையும் பேட்டி எடுத்து உடனடியாக ‘தூர்தர்ஷன் ‘ ஒளிபரப்பியது! பாலக்காட்டைச் சேர்ந்த தமிழரும் இந்திய-ங்கில எழுத்தாளரும் தற்போது டெல்லியில் வசிப்பவருமான கீதா ஹரிஹரன் மற்றும் டாக்டர் பாலா, கவிஞர் நா.முத்து நிலவன் ஆகியோர் பேச்சை அடுத்த நாள் ‘இந்து ‘ நாளிதழ் சிறப்பாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ங்கிலத்தில் பேசச் சிரமப் பட்டனர். யினும், கவிஞர்கள்

நா.முத்து நிலவனும், கோ.வசந்த குமாரனும் தமிழ்க் கவிதைகளையே அருமையாகச் சொல்லி -மலையாள- ரசிகர்களின் ரவாரத்தை அள்ளிக்கொண்டனர்.வசந்தகுமாரனின் கவிதையை அந்த அமர்வுத் தலைவர் மலையாளக் கவிஞர் O.N.Vகுருப் வெகுவாகப் பாராட்டினார்.

டாக்டர் பாலா தமது தலைமை உரையின் போது, தமிழ்க்கவிதையின் சவால்களைப் பற்றிக்

குறிப்பிட்டு, ‘கவிதை மொழி ‘ கைவரப்பெறாத கவிஞர்களின் பிரச்சினைகளையும், அது முடிந்தவர்களின் வெற்றியையும் அழகான ங்கிலத்தில் விளக்கினார்.

மொத்தத்தில், ‘புதுக்குரல்கள் ‘ எனும் பெயருக்கேற்ப தென்மாநில மொழிகளில் மேலோங்கிவரும் புதியபோக்குகளில் இளைஞர்களின் பங்களிப்பு மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. தமிழ் தெலுங்கு கன்னட மொழிக் கவிதை, கதைகளில் பெண்ணிய – தலித்தியப்போக்குகள் சூடான விவாதத்தைக் கிளப்பிய்தோடு இதிலும் ‘ஒரு தேசிய ஒருமைப்பாடு’ தெரிவதை சிந்திக்க வைப்பதாக இருந்தது.

—- —- —-

====

muthunilavan@yahoo.com

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்