நாளைய உலகம்

This entry is part of 45 in the series 20081023_Issue

அக்னிப்புத்திரன்


மறு உயிரெடுத்திருப்பது
புதிய நம்பிக்கை..

காற்றில் கரைந்த
உறுதிமொழிகள்!

தறிகெட்டுத் தடுமாறும்
முறைகேடுகள்!

புற்றீசல்களாக
பரிணமித்த எண்ண அலைகள்…

தாங்க இயலாத தவிப்புகள்
சொல்லண்ணாத துயரங்கள்!

ஆதரவு தேடும் அவலம்…
உணர்வுகளின் உருக்கம்!

தான் ஆடாவிட்டாலும்
தசை ஆடும் வினோதம்!

அந்தோ…பரிதாபம்
அதற்கும் வேட்டு!

அசலோடு கலந்து விட்ட
போலி வித்துகள்!

இனம் கண்டு
புறந்தள்ளி புறப்படு…

வீறு கொண்டு
விழித்தெழு…

நாளைய உலகம்
போற்றிப் புகழும் உன்னை!

– அக்னிப்புத்திரன்

Series Navigation