ஜ ந் து.

This entry is part of 31 in the series 20080828_Issue

தாஜ்உள் அவையங்கள்
ஒன்றே ஒற்றுமை
நீரிலும் நிலத்திலும்
வாழும் அது
சில நேரம் அகம் ஏறும்!
ஈரம் பார்த்து
ஒட்டிக் கொள்ளும்
காய்ந்ததும் இடம் தாவும்.
நடைப் பாதை என்று பாராது
குறுக்கே கிடந்து
அருவருப்பு ஊட்டும்
அதனோடான வறட்டுச் சப்தமே
சுலபத்தில் அதைக்
காட்டிக் கொடுக்கும்
கூர்ந்து கேட்டால்
நான் நான் கூடி நிற்கும்!
விரட்டினால்
பாச்சலாய் பாயும்
நாற்றத்தைப் பீரிட்டடிக்கும்
இரவின் அமைதியில்
பாடாய் படுத்த
தன் பாட்டைப் பாடும்.
சப்த அலைவரிசையை
கணக்கிட்டு….
கச்சிதமான ஓர் வீச்சில்
அதை மல்லாத்தி விடலாம்
அசூசையில் மிரண்டால்
கண்ணிமைக்கும் பொழுதில்
தாண்டிக் குதித்து தப்பிக்கவும்
உயரத்தில் போய்
ஒட்டியும் கொள்ளும்
கவனிப்பவனின் மண்டைகாய
கெக்கலிப்பு தொடரும்!


satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation